சித்திரைத் திருவோணம்
இன்றுதான் ..............
இன்றுதான் ..............
அம்பலத்தாடும் ஐயனுக்கு
ஆனந்த கூத்தனுக்கு
இக பர சுகம் அருளும் நாதனுக்கு
ஈகை செம்மலுக்கு
உலகெலாம் உணர்ந்து ஓதற்குரியவனுக்கு
ஊழி நாதனுக்கு
என்னப்பன் என்தாயனவனுக்கு
ஏனக் குருளைக்கு அருளியவருக்கு
ஐந்தொழில் புரியும் அரசனுக்கு
ஒப்பிலா மணிக்கு
ஓங்கார வடிவானவனுக்கு
ஔடதமாய் காப்பவனுக்கு
ஆனந்த நடராசர் தரிசனம்
சிவானந்தவல்லி தரிசனம்
தென் தில்லை மன்றில் பொற்சபையில் இடது பதம் தூக்கி ஆடும் ஆனந்த நடராச பெருமானுக்கு தேவர்கள் செய்யும் உச்சிக்கால அபிஷேகம். மானிடர்களாகிய நம்முடைய ஒரு வருடம் தேவர்களுக்கு ஒரு நாள். அவர்கள் செய்யும் ஆறு கால பூஜையே அம்பலவாணருக்கு நடைபெறும் ஆறு அபிஷேகங்கள்.
சிவகாம சுந்தரி தரிசனம்
அம்பலவாணர் தரிசனம்
சத்ததனு ஆதிரையும் சார் வாளும் -பத்திமிகு
மாசியரி கன்னி மருது சதுர்த்தசி மன்
றீசர பிடேக தினமாம்.
அதாவது
சித்திரை - திருவோணம்
ஆனி - உத்திரம்
மார்கழி - திருவாதிரை
மாசி - வளர் பிறை சதுர்த்தசி( பௌர்ணமிக்கு முந்தைய நாள்)
ஆவணி - வளர் பிறை சதுர்த்தசி( பௌர்ணமிக்கு முந்தைய நாள்)
புரட்டாசி - வளர் பிறை சதுர்த்தசி( பௌர்ணமிக்கு முந்தைய நாள்)
( தனுர் - மார்கழி, யரி(சிம்மம்) - ஆவணி, கன்னி- புரட்டாசி)
ஆகிய ஆறு தினங்களே மன்றினில் ஆடும் மன்னனுக்கு உரிய அபிஷேக தினங்கள்.
சித்திரை திருவோண தினமான இன்று தில்லையில் அம்பலவாணர் சித் சபையிலிருந்து பொற்சபைக்கு எழுந்தருளி மாலையில் அபிஷேகம் கண்டருளுகின்றார். மாலை சுமார் 6 மணிக்கு துவங்கும் அபிஷேகம் இரவு 9 மணி வரை நடக்கின்றது. உண்மையாக நதியாகவே பாய்கின்றன ஐயனுக்கும் அம்மைக்கும் அபிஷேக திரவியங்கள். மற்ற திருத்தலங்களில் உச்சி காலத்தில் அபிஷேகம் நடைபெறுகின்றது.
அம்பலத்தரசர் அருள் தரிசனம்
சிவானந்த வல்லி
ஐயனின் ஆனந்த தரிசனம் கண்டோம் இனி அவர் ஆடும் ஐந்து சபைகள் எதுவென்று பார்ப்போம்.
சிதம்பரம் - பொன்னம்பலம் - கனக சபை - ஆனந்த தாண்டவம்.
மதுரை - வெள்ளியம்பலம் - ரதஜ சபை - சந்த்யா தாண்டவம்
(பாண்டிய மன்னனுக்காக கால் மாறி ஆடிய ஆட்டம்)
திருநெல்வேலி - தாமிராம்பலம் - தாமிர சபை - முனி தாண்டவம்
திருக்குற்றாலம் - சித்திரம்பலம் - சித்ர சபை - திரிபுர தாண்டவம்
திருவாலங்காடு - மணியம்பலம் - ரதன சபை - ஊர்த்துவ தாண்டவம்
( காளியை தோற்கடிக்க காலை வானை நோக்கி உயர்த்தி ஆடிய ஆட்டம்)
கோபுர வாசலில் எங்கோன் தரிசனம்
கூத்த பிரான் தரிசனம்
அம்மை சிவகாமி
பிறப்பறுக்கும் பிஞ்ஞகன் புறப்பாடு
வேதங்களாட மிகுவாக மாதல்
கீதங்களாடக் கிளரண்ட மேழாடப்
பூதங்க ளாடப்புவன முழுதாட
நாதங் கொண்டாடினான் ஞானான்ந்த கூத்தே!
என்றபடி சகல புவனங்களையும் ஆட்டுவிக்கும் ஆனந்த கூத்தனின் அருள் அபிஷேகம் கண்டு நன்மையடைவோமாக.
7 comments:
மையத்தில் இருந்து புறப்படும் எழுத்துக்களில்
மையமாய் அமைந்த நிழற்படங்களில்
நிஜ சொரூப தரிசனம் தரும்
அருள்நிறை ஆடலரசன் அம்மையப்பன்
கண்டேன் கண்டேன்
காண அரிதானவையெல்லாம் கண்டேன்!
நமது இதயமாம் அநாகத தலத்தில் அவன் ஆடுவதால் தானே இந்த அகிலம் முழுவதும் இயங்குகின்றது.
நன்றி
ஓம் நமசிவாய
வைகாசி திருவோணத்திற்கு திரு.ஜீவி ஐயாவின் இடுகைக்கு உங்களை அழைக்கிறேன், நன்றி!
ஒப்பிலியப்பனின் அற்புத தரிசனம் கண்டேன்.
தாங்கள் கச்சி வரதரின் கருட சேவை காணுங்கள் இங்கே
அடடா! அடடவோ! என்னே அழகு!
அம்பலத்தாடுவானின் தரிசனமும்,
தொடர்ந்த தங்கள் விளக்கங்களும் அற்புதமாக இருந்தன..
திரு.ஜீவா சொல்லி ஒப்பிலியப்பனின்
தரிசனத்தையும் முடித்துக் கொண்ட கையோடு எங்களுக்கு கச்சி வரதரின் கருட சேவை தரிசனத்திற்கு வழிகாட்டி
ஆற்றுப்படுத்திய உங்களுக்கு மிக்க நன்றி...
தங்கள் திருத்தொண்டு என்றும் வாழியவே!
எல்லாம் அவன் செயல்.
ஆட்டுவித்தால் யார் ஒருவர் ஆடாதாரே.
நன்றி ஜீவி அவர்களே.
Post a Comment