Sunday, April 13, 2008

சித்திரைத் திருவிழா காரணீஸ்வரம் - 4

பூத வாகன சேவை


மண்ணுலகில் உள்ள மாந்தரைக் காக்க தேவர்களிடமிருந்த் தனியாக பூதப் படையை உருவாக்கினார் சிவ பெருமான். இந்த புவனம் முழ்வதும் நிலம், நீர், காற்று, அக்னி, ஆகாயம் என்னும் பஞ்ச பூதங்களால் ஆனவையே. பூதப்படை சூழ வலம் வருபவர்தான் சிவ பெருமான். பூத கணங்களின் நாயகர் சிவபெருமான் எனவே தான் திருக்கயிலை நாதரை நாம் பூத நாதர் என்றும் அழைக்கின்றோம். பூத கணங்களின் பதி ஐயனின் முதல் புதல்வர் விநாயகர் எனவே தான் அவர் கணபதி என்று அழைக்கப்படுகின்றார். பூத கணங்களுள் முதல்மையானவர் ஐயனின் முதல் தொண்டர் நந்தியெம்பெருமான்.





மூன்றாம் நாள் காலையில் அதிகார நந்தியில் சேவை சாதித்த கயிலை நாதர் மாலை பூத வாகனத்தில் சேவை சாதிக்கின்றார். அதிகார நந்தி, பூதம், ரிஷபம், திருக்கயிலாய் வாகனம் ஆகிய வாகனங்கள் எல்லாம் சிவபெருமானுக்கே உரிய சிறப்பு வாகனங்கள். எம்பெருமான் இவ்வாகனங்களில் எழுந்தருளி சேவை சாதிக்கும் போது அவருக்கு மிகவும் சிறப்பு அலங்காரம் செய்யப்படுகின்றது.





திருக்காரணியில் கம்பீரமான கதை தாங்கிய தங்க முலாம் பூத வாகனத்தில் அம்மையப்பர் எழுந்தருளி பவனி வரும் அழகை எப்படி வர்ணிப்பது வார்த்தைகளே வரவில்லை ஆகவே தான் படங்களாக அளித்துள்ளேன் தரிசித்து அருள் பெறுங்கள். அம்மை அன்ன வாகனத்திலும் முருகர் மயில், விநாயகர் மூஷிக வாகனத்திலும்,சண்டிகேஸ்வரர் ரிஷப வாகனத்திலும் சிறப்பு மலர் அலங்காரத்துடன் எழுந்தருளி அருள் பாலிக்கின்றனர் .









பூதேஸ்வரர் காரணீஸ்வரர் பூத வாகன சேவை








சிறப்பு மலர் அலங்காரத்துடன் இரு கால்களையும் தொங்கவிட்டு எழிலாக ஐயன் பவனி வரும் அழகை ஒரு தடவை கண்டவர்கள் மறு மறுபடியும் வந்து தரிசனம் செய்யாமல் இருக்க முடியுமா கூறுங்கள்.




பூத வாகன சேவை பின்னழகு





அன்ன வாகனத்தில் அழகார் சொர்ணாம்பிகை அம்பாள்







பவளம்
துறவோ ரென்னும் ஞாயிற்றைத்
துணையா யீந்த தேமொழியே
துதிக்குந் திங்கள் அணிக்
துன்பங்களையுங் தூயவளே





பிறவா தென்றும் வாழ்கின்ற
பிடியே செவ்வாய்ச் செம்பவளம்
பிறங்கும் போதப் பொருள் தந்தே
பித்தன் பரவும் அற்புதமோ





மறவேன் ஞானந் தந்தென்றும்
மயல் தீர்த்தாளும் நற்குருவை
மதிக்கும் வாழ்வே விடி வெள்ளி
மாவாய்ச் சனியேன் நின்னருளால்





அறவோர் காஞ்சி காமாட்சி
அறங்கூர்ச் சைதைப் பொற்கொடியே
அடிமை கொண்டாய் அருள்வாமி
அன்னாய்
சிவசொர் ணாம்பிகையே.

வாரத்தின் நாட்களான ஞாயிறு முதல் சனி வரை இப்பாடலில் அமைத்து வாரத்தின் அனைத்து நாட்களிலும் நாம் அம்பாளை வணங்க வேண்டும் என்று உணர்த்துகின்ராறோ கவி.


கலாப மயிலில் அருட்காட்சி தரும் கந்தப்பெருமான்.



ரிஷப வாகனத்தில் சண்டிகேஸ்வரர்





No comments: