திருத்தேரோட்டம்
பெருவிழாக்களில் திருத்தேரோட்டம் ஒரு முக்கியமான உற்சவம். பெரும்பாலான தலங்களில் தேரோட்டம் ஏழாம் நாள் பகலில் நடைபெறுகின்றது.
தேர்த்திருவிழாவானது ஐயனின் ஐந்தொழில்களில் அழித்தல் தொழிலை குறிக்கின்றது. அசுரர்களை அழித்து தேவர்களையும் மற்ற ஜீவராசிகளையும் காப்பதைக் குறிக்கின்றது. ஆகவே தான் திருத்தேரில் எழுந்தருளி திரு உலா வரும் போது கையில் பினாகம் என்னும் அவருடைய வில்லை ஏந்தியவராக அலங்காரம் செய்வது மரபு.
யாவராலும் அழிக்க முடியாத தங்க வெள்ளி இரும்பு பறக்கும் கோட்டைகளை அமைத்து கொண்து அனைவரையும் மிரட்டிக் கொண்டு இருந்த திரிபுர அசுரர்களை எந்த ஆயுதமும் இல்லாமல் தன் சிரிப்பினாலேயே எரித்து கொன்ற திருபுராரி, காரணீஸ்வரப் பெருமான் அன்னை சொர்ணாம்பிகையுடனும், எழில் முருகனுடனும், சண்டிகேஸ்வரருடன் மாட வீதிகளில் உலா வரும் அழகைக் காணுங்கள்
சொர்ணாம்பிகை
சண்டிகேஸ்வரர் தேர்
No comments:
Post a Comment