அதிகார நந்தி சேவை
தொண்டை மண்டலத்தில் சிவாலயங்களில் மூன்றாம் நாள் அதிகாலை ஒரு சிறப்பு சேவை தந்தருளுகின்றார் திருக்கயிலை நாதர். ஆம் ஐயனின் வாகனமான நந்தியெம்பெருமான் அதிகார நந்தியாக எம்பெருமானை தாங்குகின்றார் இன்று. கம்பீரமான அதிகார நந்தியில் அம்மையப்பர் பவனி வரும் அழகைக் காணக் கண் கோடி வேண்டும்.
பெருந்திருவிழாவில் மூன்றாம் நாள் அதிகாலை அதிகார நந்தி சேவை, ஐந்தாம் நாள் நள்ளிரவு ரிஷ்ப வாகன சேவை, ஏழாம் நாள் திருத்தேரோட்டம், பத்தாம் நாள் திருக்கல்யாணம் ஆகியவை சிறப்பு பெற்றவை. பரத்வாஜேஸ்வரத்தின் அந்த சிறப்பு அதிகார நந்தி சேவையை கண்டு மகிழுங்கள்.
முன்றைய பதிவில் தாங்கள் கண்டது இத்தலத்தின் பழைய அதிகார நந்தி இந்தப் பதிவில் காண்பது புதிய தங்க முலாம் அதிகார நந்தி, 2007ம் வருடம் அன்பர்கர்கள் சிலர் இந்த அதிகார நந்தி வாகனத்தை உபயமாக அளித்தனர்.
அதிகார நந்தி சேவைக்காக எழுந்தருளும் சொர்ணாம்பிகா சமேத பரத்வாஜேஸ்வரர்
காணக் கண் கோடி வேண்டும்
அம்மையப்பரின் அதிகார நந்தி சேவை
அழகார் புலியூர் சிவ சொர்ணாம்பிகை
காணக் கண் கோடி வேண்டும்
அம்மையப்பரின் அதிகார நந்தி சேவை
அழகார் புலியூர் சிவ சொர்ணாம்பிகை
பூத நாதரின் பூத வாகன சேவை
எம்பெருமான் சிவபெருமானின் படை பூதப்படை, கணங்களின் பதி கணபதி, கணங்களில் முதன்மையானவர் நந்தி தேவர். ஐயன் பூதங்களின் நாயாகர் எனவே அவர் பூத நாதர் என்றும் அழைக்கப்படுகின்றார். மூன்றாம் நாள் இரவு ஐயன் பூத நாயகராக பவனி வரும் அழகைக் கண்டு களியுங்கள்.
No comments:
Post a Comment