சென்னை புலியூர் கோட்டம்
சொர்ணாம்பிகா சமேத பரத்வாஜேஸ்வரர் ஆலயம்
சித்திரைப் பெருந்திருவிழா
சென்னை கோடம்பாக்கம் முற்காலத்தில் புலியூர் கோட்டம் என்று அறியப்பட்டது. புலிக்கால் முனிவர் வியாக்ரபாதர் சிவலிங்கம் ஸ்தாபிதம் செய்த வியாக்ரபுரீஸ்வரர் ஆலயம் உள்ளதால் எனவே இக்கோட்டத்திற்க்கு இப்பெயர் வந்தது. தற்போது இவ்வாலயம் வடபழனி பகுதியில் உள்ளது. இவ்வாலயத்தின் பெருவிழாவை பங்குனி உத்திர பெருவிழா பதிவுகளில் கண்டு களித்திருப்பீர்கள்.
தற்போதைய சூளை மேட்டில் அமைந்துள்ள தலம் தான் பரத்வாஜேஸ்வரர் ஆலயம். கருங்குருவி உருவம் எடுத்து பரத்வாஜ முனிவர் சிவபெருமானை வழிபட்டதால் எம்பெருமான் பரத்வாஜேஸ்வரர் என்னும் திருநாமம் பெற்றார். தினமும் 1008 சிவாலயங்களில் பூசை புரிந்த வானர அரசன் வாலியும் பரத்வாஜேஸ்வரரை வழி பட்டிருப்பதாக ஐதீகம். அம்மையின் திருநாமம் இத்தலத்திலும் சொர்ணாம்பாள் தான். மேலும் விநாயகர், முருகர், இராமேஸ்வரர் ஆகிய தனி சன்னதிகளும் உள்ளன. வாலி அருள் பெற்ற ஆஞ்சனேயரும் எழுந்தருளி அருள் பாலிக்கின்றார் இத்தலத்தில்.
இத்தலத்தின் சிறப்பு, ஐயனுக்கு நடைபெறும் அலங்காரம். சாதாரண நாட்களில் கூட ஐயனுக்கு அலங்காரம் செய்யும் போது நான்கு கரங்களுடன் மான் , மழு முதலியவற்றுடன் செய்யும் அலங்காரத்தை விவரிக்க வார்த்தைகள் இல்லை. அந்த ஒப்பற்ற அழகை அன்பர்களிடம் சேர்க்கும் முயற்சியே இந்தப் பதிவுகள் அடுத்த பத்து நாட்களும் வந்து தரிசனம் செய்து இன்புறுங்கள்.
தங்க கவசத்தில் எழிலாக விநாயகப் பெருமான்
ஸ்தல விருக்ஷ சேவை.
முதல் நாள் இரவு பஞ்ச மூர்த்திகள் அலங்கார சேவை

புன்னாக மரவடி சேவை தந்தருளும் சொர்ணாம்பிகா சமேத
முதல் நாள் இரவு பஞ்ச மூர்த்திகள் அலங்கார சேவை
புன்னாக மரவடி சேவை தந்தருளும் சொர்ணாம்பிகா சமேத
பரத்வாஜேஸ்வரர்.

தொண்டை மண்டலத்தின் மரபுப்படி பெருவிழாவின் முதல் நாள் இரவு ஸ்தல விருக்ஷத்தில் சிவ பெருமான் எழுந்தருளி அருள் பாலிக்கின்றார்.
புலியூர் கோட்டத்து பரத்வாஜேஸ்வரரின் ஸ்தல் விருக்ஷம் புன்னாக மரம்( நாக லிங்க மரம்) . தாங்கள் கண்டு களிப்பது புன்னாக மர சேவை.

தத்ரூபமாக எம்பெருமானின் பூஜைக்கு உரிய நாக லிங்க மலர்கள், காய், நாகம் விளங்க ஐயன் தரும் புன்னாக மர சேவையை கண்டு மகிழுங்கள்.
சிவ சொர்ணாம்பிகையின் எழிற் கோலம்

அழகன் முருகன்

முன்னரே கூறியது போல இவ்வாலயத்தின் அலங்காரம் எப்போதுமே மிகவும் அருமை, இறைவனுக்கும் இறைவிக்கும் பீடம் வைத்து அலங்கரித்திருக்கும் அழகை கண்டு களியுங்கள், நாளை மேலும் சில அருட்காட்சிகளைக் தரிசிக்கலாம்.

No comments:
Post a Comment