Saturday, April 19, 2008

சித்திரைத் திருவிழா காரணீஸ்வரம் - 9

திருமுலைப்பால் விழா
அறுபத்து மூவர் திருவிழா

காரணீஸ்வரத்தில் எட்டாம் நாள் காலையிலிருந்தே கோலாகல்ம்தான். சமணமும், பௌத்த்மும் தலை தூக்கி சைவம் நசிந்த காலத்தில் மேன்மை கொள் சைவ நீதி மேலோங்க சிவபெருமான் திருவுளம் கொண்டதால் சீர்காழியில் திருஞான சம்பந்தர் திருஅவதாரம் செய்தார். மூன்றாம் வயதிலே சம்பந்தரின் தந்தை சீர்காழி குளக்கரையில் குழந்தையான சம்பந்தரை விட்டு விட்டு குளத்தில் குளிக்க செல்ல அம்மையபப்ரை பார்த்து குழந்தை அழ , அம்மை திரிபுர சுந்தரி, பார்வதி தானெ வந்து சிவஞானப்பால் ஊட்டியருளினாள்.

குளித்து வித்து திரும்பிவந்த சிவபாத ஹ்ருதயர் குழந்தையின் வாயில் பாலைக் கண்டு யார் கொடுத்த பாலை குடித்தாய் என்று அதட்டிக் கேட்க ச்ம்பந்தர் கோயில் கோபுரத்தை காட்டி அம்மையின் கருணையை வியந்து தோடுடைய செவியன் என்று பதிகம் பாடி தந்தைக்கு உண்மையை உணர்த்துகின்றார். 32 வருட காலம் வாழ்ந்து சமணர்களை தோற்கடித்து சைவத்தின் பெருமையை நிலை நாட்டினார் சம்பந்த பெருமான்.
அன்னை சம்பந்தருக்கு திருமுலைப்பால ஊட்டிய திருவிழா மதியம் நடைபெறுகின்றது. ரிஷ்ப வாகனத்தில் புராதன சோமாஸ்கந்தர் குளக்கரைக்கு எழுந்தருளுகின்றார். குளக்கரையில் சமப்ந்தருக்கும் சிவபாதஹ்ருதயருக்கும் அபிஷேகம் நதைபெறுகின்றது. பின் பல்லக்கில் சம்பந்தப்பெருமானும், விமான்த்தில் சிவபாதஹ்ருதயரும் எழுந்தருள அம்மையபப்ர் ரிஷ்ப வாகான்த்தில் திருக்காட்சி கொடுக்க திருமுலைப்பால் வைபவம் சிறப்பாக நடைபெறுகின்றது. பதிகம் பாடி அருளுகின்றார் சம்பந்தர். பிரசாதமாக பால் அனைவருக்கும் வழங்கபப்டுகின்றது.


புராதான சோமாஸ்கந்தர் ரிஷ்ப வாகன சேவை





புராதான சோமாஸ்கந்தர்

இத்திருத்தலத்தின் ஆதி சோமாஸ்கந்த மூர்த்தம் இன்றி ஒரு நாள் மட்டுமே திருக்கொவிலை விட்டு வெளியே வருகின்றார் என்பது ஒரு சிறப்பு.




சொர்ணாம்பிகை அம்மன்










அறுபத்து மூவருக்கு அருள் புறப்படும் காரணீஸ்வரர்

முருகன் முத்துக் குமரன் கந்தன்

No comments: