சித்ரா பௌர்ணமி திருக்கல்யாணம்
சைவத்தலங்களில் பெருவிழாக்கள் அனைத்தும் அம்மையப்பரின் திருக்கல்யாணத்துடன் நிறைவடைகின்றன. பத்தாம் நாள் இரவு திருக்கலயாணம் நடைபெறுகின்றது. பொதுவாக திருக்கலயாணம் என்பது ஜீவாதமா மற்றும் பரமாத்மாவின் ஐக்கியத்தை குறிக்கின்றது. பாசத்தால் சூழப்பாட்டிருக்கின்ற பசுவானது அந்த பாசம், ஆணவம் முதலிய மலங்கள் நீங்கி பதியுடன் சேருவதைக் குறிக்கின்றது. ஆகவேதான் சிவபெருமான் பசுபதி என்று அழைக்கப்படுகின்றார்.
விநாயகப் பெருமான்
விநாயகப் பெருமான்
சொர்ணாம்பிகை அம்பாள் கல்யாண கோலம்
பரத்வாஜேஸ்வரர் கல்யாணக் கோலம்
அழகன் முருகன் தேவியருடன்
திருக்கலயாணம் முடிந்த பின்பு அம்மையப்பர் திருக்கயிலாய வாகனத்தில் சேவை சாதிக்கின்றார், ஐயனும் அம்மையும் உறையும் தம் திருக்கயிலாயம். சகல புவனங்களையும் படைத்தும் காத்தும், அழித்தும், அருளியும் மறைத்தும் ஐந்தொழில் புரியும் ஐயனும் அவரின் பாதி சக்தி அம்மையும் யோகத்தில் அமர்ந்து சகல புவனத்தையும் பரிபாலிக்கின்றனர். எனவே திருக்கயிலாய வாகனம் சிவபெருமானுக்கே உரியது பூதம், ரிஷபம், அதிகார நந்தி போல. அடாத செயல் செய்த இராவணனின் ஆணவத்தை ஐயம் தன்து இடது பெரு விரலால் சிறிதாக் அழுத்தி அடக்கியதை உனர்த்தும் வகையில் கைலாய வாகனத்தின் முன் ஆணவ இராவணனின் சிலை இருக்கும். திருவிதி உலா முடிந்து பஞ்ச மூர்த்திகள் திருக்கோவில் திரும்பியதும் கொடியிறக்கம்.இதுவரை தேவ லோகத்தை விட்டு பிரம்மோற்சவத்தை காண வந்த சகல தேவர்களையும் தங்கள் தங்கள் யதாஸ்தானம் செல்லுமாறு வேண்டப்பட்டு பெருவிழாவின் நிறைவை குறிக்கும் வகையில் கொடியிறக்கப்படுகின்றது. பின் சண்டிகேஸ்வரர் உற்சவம்.
பரத்வாஜேஸ்வரர் புறப்பாடு
திருக்கயிலாயத்தில் எப்போதும் பூத கணங்கள் புடை சூழ வலம் வருபவர் சிவபெருமான். ஐயனின் சேவகர்கள் பூத கணங்கள். ஐயன் ஆடும் போது பூத கணங்கள் வாத்தியம் வாசிக்கும் ஒரு அற்புதக் காட்சியை பரத்வாஜேஸ்வரத்தில் திருக்கல்யாண தினத்தன்று காணக் கிடைக்கப்பெற்றேன். அந்த அற்புத அனுபவத்தை அன்பர்களாகிய உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றேன். மொத்தம் 10-12 பேர் கொண்ட குழு அனைவரின் உடல் முழுவதும் திருநீற்று பட்டை கழுத்தில் ருத்திராக்ஷ மாலைகள். சிவ சொரூபமாக ( பூத கணங்களாகவே) அடியேன் கண்ணுக்குப்பட்டது. அவர்கள் வாசித்த தாள வாத்தியத்தின் பெயர் திருஉடல் திருக்கயிலாயத்தில் ஐயன் ஆடும் போது பூத கணங்கள் வாசிக்கும் அதே வாத்தியம். ஆறு திருஉடலுன் நான்கு பிரம்ம தாள்ம், இரண்டு கொம்பு, இரண்டு எக்காளம், சங்கு, மாட்டு கொம்பு வாத்தியம் ஒன்று என்று அவர்கள் வாசித்த போது நமக்கே ஆட வேண்டும் என்ற உணர்வு தோன்றியது. இவ்வாறு பூத கணங்கள் வாத்தியம் வாசிக்க திருக்கயிலை வாசன் தனது பரிவாரத்துடன் திருவீதி வலம் வந்த அழகைக் காண வார்த்தைகளே இல்லை. நடுவில் ஒருவர் கையில் தூபக்காலை வைத்துக் கொண்து ஆடினார், குழுவின் தலைவர் போல தோன்றினார் அவர் நந்தி தேவரை ஞாபகப்படுத்தினார். உண்மையிலேயே இது ஒரு தெய்வீக அனுபவம் அதை அளித்த அம்மையப்பருக்கு நன்றி.
ரிஷ்ப வாகனத்தில் சொர்ணாம்பாள் புறப்பாடு
மயில் வாகனத்தில் எழில் முருகன்
சண்டிகேஸ்வரர் ரிஷ்ப வாகனத்தில் புறப்பாடு
No comments:
Post a Comment