Monday, April 14, 2008

சித்திரைப் பெருந்திருவிழா பரத்வாஜேஸ்வரம் - 4

புலியூர் கோட்டம் பரத்வாஜேஸ்வரர் ஆலயத்தின் சித்திரைப் பெருந்திருவிழாவின் நான்காம் நாள் காலை உற்சவம் சந்திர சேகரர் விமானம் உற்சவம். அம்பாளுடன் சோமனுக்கு அருளிய சந்திர சேகரர் விமானத்தில் எழுந்தருளி திருவீதி உலா வந்து அருள் பாலிக்கின்றார் வாலி வழிபட்ட பரத்வாஜேஸ்வரர்.
நான்காம் நாள் இரவு பஞ்ச மூர்த்திகள் சிறப்பு அலங்காரம்

மரகத வல்லி சிவ சொர்ணாம்பிகை


திருமுருகன் வள்ளிக்குறத்தி தெய்வநாயகியுடன்

நாதர் முடி மேல் விளங்கும் நல்ல பாம்பில் நான்காம் நாள் இரவு சேவை சாதித்து அருளுகின்றார் சொர்ணாம்பிகா உடனுறை பரத்வாஜேஸ்வரர்.

விநாயாகரின் உதர பந்தனம் ஆதி சேஷன், ஐயனின் ஆபரணங்கள் நாகங்கள், அம்மையின் குடை, அன்னையின் உருவம் நாகம், ஆம் அன்னை கருமாரி கருநாக ரூபிணி அல்லவா. முருகனின் வாகனம் மயிலின் காலிலும், அலகிலும் என்று எல்லா இடத்திலும் நிறைந்திருக்கும் ஆதி சேஷனாம் நாக வாகனத்தில் சேவை சாதித்து அருளுகின்றார் எம்பெருமான்

நாகமும், மத்தமும், மதியும், நதியும் சூடும் எம்பெருமான். திருக்கயிலாய மலையில் வடக்கு முகத்தில் நாகக் குடையை தரிசனம் செய்யலாம்.


சங்கர நாராயணர் நாக வாகன சேவை

விஷ்ணுவாலயங்களில் நாக வாகனத்தில் பெருமாளை வைகுந்த நாதராக அலங்காரம் செய்யும் போது, கைகளையும், கால்களையும் இவ்வாறே அமைப்பர். அதே அமைப்பு இங்கும் ஐயனுக்கு நாக வாகன சேவைக்க்காக.


சிவபெருமானுக்கு ஜடா முடி எனதால் கிரீடம் வைத்து அலங்காரம் பொதுவாக செய்வதில்லை மலர் அலங்காரம் தான். இன்று பெருமாள் அம்சமாக அலங்காரம் செய்திருப்பதால் கிரீடம் வைத்து அலங்காரம்.


இன்னொரு ஒற்றுமை , ஐயனின் கரத்தில் பெருமாளின் கதை. ஆம் இடக் கரத்தில் கதை தாங்கி சங்கர நாராயணராக சேவை சாதிக்கும் அழகே அழகு. அரியும் சிவனும் ஒன்னு அதை அறியாதவனின் வாயில் மண்ணு என்று சொல்லாமல் சொல்லி விளக்குகின்றார் பரத்வாஜேஸ்வரர் இத்திருக்கோலத்தில்.

No comments: