Sunday, April 27, 2008

சித்திரை சதய அபூர்வ நிர்மால்ய தரிசனம் - 2

உன் வாளால் வெட்டுப்பட்டாலும் நான் மாசிலாமணியே

திருமுல்லைவாயில்

தொண்டை மண்டலத்தின் மஹா சக்தி தலங்கள் மூன்றனுள் ஒன்று இத்தலம். இத்தலத்திலே எம் அம்மை கொடியுடை நாயகி, கிரியா சக்தியாக எழுந்தருளி அருள் பாலிக்கின்றாள். மற்ற சக்தி தலங்கள் திரு வொற்றியூரின் வடிவுடை நாயகி ஞான சக்தி, மேலு‘ரின் திருவுடை நாயகி இச்சா சக்தி. " எவரொருவர் பௌர்ணமி அன்று இந்த மூன்று அம்மன்களையும் தரிசிக்கின்றார்களோ அவர்களுக்கு எம் அம்மையின் பூரண கடாட்சம் கிட்டும்" என்பது ஐதீகம். இத்தலத்தின் ஒரு சிறப்பு அம்மையின் சன்னதியும் ஐயன் சன்னதியின் வலப்புறம் கிழக்கு நோக்கியே அமைந்திருப்பது.


இரட்டைப் புலவர்கள் இத்தலத்து நாயகியான கொடியிடையம்மனைக் குறித்து மன்றாடியார் எங்கள் மாசிலாமணியார்


நன்றான முல்லைக்கு நாயகர் காண் அம்மானை

நன்றான் முல்லைக்கு நாயகரே யாமாகில்

பெண் எங்கே கொண்டனர் காண் அம்மானை?

கொண்ட பெண்ணு நல்ல கொடியிடைச்சி

என்று பாடுகின்றனர்.


மாசிலாமணீஸ்வரர் கஜ பிருஷ்ட விமானம்


அம்மையின் திவ்ய சொரூபத்தை தில்லை விடங்கன் மாரிமுத்துப் பிள்ளை இயற்றிய பஞ்சரத்தினத்தில்

பொட்டிட்ட நெற்றியும் கொப்பிட்ட செவியும்

பொருப்பை ஒப்பிட்ட தனமும்

புயலிட்ட அளகமும் கயலிட்ட கண்கடை

பொழிந்திட்ட கருணை அமுதும்

நெட்டிட்ட பைங்கழையை நிகரிட்ட தோளும்

இளநிலவிட்ட புன்முறுவலும்

நீரிட்ட சடையாளர் மணமிட்ட நாளில் அவர்

நெஞ்சு இட்டமொடு கரத்தால்

தொட்டிட்டு எடுத்து அம்மி மீதிட்ட பாதமும்

கலங்கிடக் கண்டிட்டு அடியான்

துதியிட்டு உன்னைத் தெண்டலிட்டு

இறைஞ்சிட அருள் சொரிந்திட்டு உகந்து ஆள்வையோ

மட்டிட்ட சோலை வளர் முல்லை நகர்

மாசிலாமணியிடத்து உறை கரும்பே! வாழ்த்தும்

அடியவர் தம்மை ஆழ்த்து பிறவியின் வெம்மை

மாற்று கொடியிடை அம்மையே!

பசும் சோலைகள் சூழப்பெற்ற திருமுல்லை வாயில் மாநகரில் மாசிலாம­­ணிஸ்வரருடன் உறையும் கரும்பினும் இனிய என் தாயே! கொடியிடை அம்மையே! விரிசடை அண்ணல் தம்மை மணம் புரிந்த நாளில் ஆர்வத்தோடு உம் பாதத்தை இறைவன் தன் திருக்கரங்களினால் தொட்டு எடுத்து அம்மி மீது வைத்த கண்கொள்ளா காட்சியை மனக்கண்ணால் கண்டு பணிந்து உன்னை பணிகின்றேன். தாயே, அடியவர்களின் மனதினை ஆழ்த்துகின்ற பிறவியான வெம்மையை அகற்றி அருள் செய்திடு என்று வேண்டுகின்றார். இதனால் நாம் அறிவது என்னவென்றால் அம்மை தன்னை வழிபட்டவர்களுக்கு இம்மை செல்வத்தை அருளுவதோடு பிறவி துன்பத்தையும் அழித்து பேரின்ப வாழ்வை அருள்வாள் என்பதே.

மனத்தில் அறியாமை என்னும் இருளை அகற்றி ஞானம் என்ற ஒளியினை ஏற்றி இப்பிறவியாம் வாழ்வில் மருளச்செய்திடும் பாசக்கடலினையும் கடக்க செய்திடுவாள் அம்மை.


திருமுல்லைவாயில் ஐதீகம்


இத்திருக்கோவிலில் 23 கல்வெட்டுக்கள் உள்ளன. இவ்வூரை வடதிருமுல்லைவாயில் ஜெயங் கொண்ட சோழ மண்டலத்துப் புழற்கோட்டத்துக் கானப்பேர் நாட்டுக்குட்பட்டிருந்தது என்பதை ஜடாவமன் சுந்தர பாண்டிய மன்னனின் கல்வெட்டு தெரிவிக்கின்றது. இனி இத்திருக்கோவிலின் அமைப்பைக் காணலாம். 1-12 ஏக்கர் பரப்பளவில் தெற்கு நோக்கிய 7 நிலை இராஜ கோபுரத்துடனும், மூன்று பிரகாரங்களுடனும், நடராஜர், சோழபுரீசர், குசலபூரீசர், அம்மை கொடியுடை நாயகி ஆகியோருக்கு தனி சன்னதிகள் உள்ளன.ஆடல் வல்லான் சன்னதிக்கு முன் அழகிய இரச லிங்கத்திருமேனி பிரதிஷ்டை செய்யபட்டுள்ளது.

விமானம் கஜபிருஷ்ட விமானம். பிக்ஷ‘டணர், நர்த்தன கணபதி, தக்ஷ’ணாமூர்த்தி, விஷ்ணு, பிரம்மா, துர்க்கை ஆகியோர் கோஷ்டத்தில் எழுந்தருளி அருள் பாலிக்கின்றனர். தெற்கு இராஜ கோபுரத்திற்கு முன் அழகிய சிற்பங்கள் நிறைந்த 16 கால் மண்டபம் உள்ளது. தல விருட்சம் - முல்லை. தீர்த்தம் - பாலாறு , சுப்பிரமணிய தீர்த்தம் . தொண்டை மண்டலத்தின் பாடல் பெற்ற தலங்களுள் 22வது தலம் இத்தலம். சுந்தரர் தேவாரம் பெற்றது. சுந்தரர் திருவொற்றியூரிலே சங்கலியாரை மணந்த பின்பு சத்தியத்தை மீறியதால் கண்ணொளி இழந்து திருவாரூர் இறைவனை தரிசிக்க புறப்பட்டு வரும் போது இத்தலத்தையடைந்து தமது துயரத்தை போக்கியருளுமாறு திருப்பதிகம் பாடி வழிபட்ட சிறப்புடைய தலம்.

பாலாற்றின் கிளைநதியொன்று பழைய காலத்தில் இவ்வழியாக சென்றதை மேலே உள்ள பதிகப் பாடலின் மூலம் அறியலாம். இத்தலத்து முருகன் மீது அருணகிரியார் திருப்புகழ் பாடியுள்ளார். இராமலிங்க அடிகள் வழிபட்ட தலம். தினமும் காலை சந்தி, உச்சிக்காலம், மாலை ஆகிய மூன்று கால பூஜை நடைபெறுகின்றது. பிரம்மோற்சவம் வைகாசி மாதம் கடக இராசி விசாக நன்னாளில் முடியும் படி ஆண்டுப் பெருவிழா நடைபெறுகின்றது.
மாசிக் கிருத்திகையன்று தெப்போற்சவம் நடைபெறுகின்றது.
வானோர் சேர் செந்நெல் கழனி சூழ் திணி பொழில் சூழ்
செம்பொன் மாளிகை சூழ்
முருகர் சோலை சூழ் திரு முல்லை வாயிலாய்
வாயினால் உன்னைப் பரவிடும் அடியேன்
படுதுயர் களையாய் பாசுப தாபரஞ் சுடரே!
என்று சுந்தரர் பாடிய, தேவர்களும், முனிவர்களும் வழிபட்டு அருள் பெற்ற கொடியுடை நாயகி உடனமர் மாசிலாமணீஸ்வரரின் நிர்மால்ய தரிசனம் ( நிஜ ஸ்வரூபம் காண) பெற கிளம்பி விட்டீர்களா?

நேற்று காலை தொடங்கி நிர்மால்ய தரிசனம். 30-05-08 அபிஷேகம் மற்றும் சந்தன காப்பு சென்று தரிசனம் பெறுங்கள்.
* * * *

சித்திரை சதய அபூர்வ நிர்மால்ய தரிசனம் - 1

உன் வாளால் வெட்டுப்பட்டாலும் நான் மாசிலாமணியே

திருமுல்லைவாயில்
கொடியிடை நாயகி (லலிதா) சமேத மாசிலாம்ணீஸ்வரர் நித்ய சொரூபத்தில்சந்தன வேருங் காரகிற் குறடுந் தண்மயிற் பீலியுங்கரியின் தந்தமுந் தரளக் குவைகளும் பவளக் கொடிகளுஞ் சுமந்து கொண் டுந்திவந்திழி பாலி வடகரை முல்லை வாயிலாய் மாசிலா மணியேபந்தனை கெடுத்தென் படுதுயர் களையாய் பாசுப தாபரஞ் சுடரே - சுந்தரர்


ஆதியும் அந்தமுமில்லாத அந்த சிவபரம்பொருள் நாம் அனைவரும் உய்யும் பொருட்டு தானே சுயம்புவாய் எழுந்தருளிய தலங்கள் அனேகம். அவற்றுள்ளும் தென்னாடுடைய சிவனே என்று போற்றப்படும் எம்பெருமான் தொண்டை மண்டலத்திலே கோவில் கொண்ட தேவாரப் பாடல் பெற்ற தலங்கள் 32. அத்தகைய புராணப் பெருமையும் புராதனமும் நிறைந்த தலம் தான் சென்னை - ஆவடி சாலையில் அமைந்துள்ள திருமுல்லை வாயில் தலம். வட திருமுல்லைவாயில், சண்பகவனம் என்று அறியப்படும் இத்தலத்திலே சுயம்புவாக எம்பெருமான் தொண்டைமான் மன்னனுக்காக எழுந்தருளி அவன் வாளால் வெட்டும் பட்டு, ஆயினும் தான் மாசிலாமணி என்று திருநாமமும் கொண்டருளினார்.

ஐயன், அம்மை, நந்தி மூவரும் கிழக்கு நோக்கி அமைந்த சிறப்புடைய தலம். திருமால், கிருஷ்ணன், இராம லட்சுமணர், பிரம்மா, முருகப்பெருமான், லவ குசன், இந்திராணி,சந்திரன், சூரியன், துர்வாசர், காமதேனு, வசிஷ்டர், நைமிசாரண்ய முனிவர்கள், அர்ச்சுனன், தொண்டைமான், ஐராவதம், தேவமித்ரன், சித்திரவர்மன். நட்சித்திரங்கள் ஆகியோர் பூசித்த தலம். தொண்டை மண்டல மூன்று மகா சக்தி தலங்களுள் இத்தலம் "கிரியா சக்தி தலம்" ஆகும். சுந்தர மூர்த்தி சுவாமிகள் பதிகம் பாடிய தலம். அருணகிரியாரின் திருப்புகழ் பெற்ற தலம். இனி இத்தலத்தின் இச்சிறப்புகளை விரிவாக காணலாம்.

ர்க்கலாம்.பழம்பெருமை வாய்ந்த இத்தலத்தில் இறைவனை வழிபட்டு அருள் பெற்றோர் பலர், வட திருமுல்லைவாயில் தலபுராணத்தில் கூறப்பட்டுள்ளன. வட திருமுல்லைவாயில் தல புராணம் 1458 பாடல் கொண்ட 23 படலங்கள் கொண்டது. நைமிசாரண்யத்தில் தவம் புரிந்திடும் முனிவர்களுக்கு சூத புராணிகர் இத்தலத்து பெருமைகளை உரைப்பதாக உள்ளது.. அம்பிகைக்கு ஐயன் திருமுன்பு காண்பித்த தலம். அம்பிகைக்கு நடராச கோலம் காட்டிய தலம். பிரம்மன் வழிபட்டதால் பிரம்மநாதேஸ்வரர் எனப்படுகிறார் எம்பெருமான் , பிரம்மாவே எம்பெருமானுக்கு திருவிழாவும் நடத்தினார். மஹா விஷ்ணுவும், லக்ஷ்மியும் வழிபட்ட நிர்மலமணிஸ்வரர். வள்ளி தெய்வானையுடன் குமாரக் கடவுள் பூஜித்த தலம். பிருகு முனிவருக்கு ரத்தின மழை பொழியச் செய்த அகளங்க ரத்னேஸ்வரர், வசிஷ்டர் பூஜித்து காமதேனுவைப் பெற்ற வில்வேஸ்வரர். சந்திரன் பூஜித்த சம்பகேஸ்வரர். உஷா, பிரதியுஷாவுடன் சூரியன் பூஜித்த பாசுபதேஸ்வரர், இராமர், ஸ“தா, லக்ஷ்மணன் பூஜித்த முல்லையழகர், லவ குசர்கள் பூஜித்த குசலபுரீஸ்வரர். இந்திரன் இந்திராணி பூஜித்த அகளங்க ரத்னேஸ்வரர். ஐராவதம் பூஜித்த ஐராவதேஸ்வரர். கிருஷ்ணனும் அர்ச்சுனனும் பூஜித்த மாலதீஸ்வரர். இந்திரன் திருவிழா நடத்திய யதிகாபுரீஸ்வரர். தேவ மித்ரன் பூஜித்து சிவகதி பெற்ற தலம். ஐயனை மட்டுமல்ல அம்மையையும் பலர் பூஜித்து அருள் பெற்றுள்ளனர். கிருத்திகா, ரோகிணி நட்சத்திரங்கள் பூஜித்த சித்திர மத்ய நாயகி, இந்திராணி பூஜித்த மனோ பிரம்ம நாயகி . ஓர் நாமம் ஓர் உருவம் இல்லாத இறைவனுக்கும் இறைவிக்கும் தான் எத்தனை திரு நாமங்கள் இத்தலத்தில். இனி இத்தலத்தில் சித்திரை சதய நாளன்று எம் ஐயன் அளிக்கும் நிர்மால்ய தரிசனத்திற்க்கான திருவிளையாடலை பாசித்திரை சதய நாளன்று எம்பெருமான் தரிசனம்


காஞ்சி மண்டலத்தை அப்போது சிவ பக்தனான தொண்டைமான் ஆண்டு கொண்டிருந்த சமயம், ஓணன், காந்தன் என்ற இரு அசுரர்கள் புழல் கோட்டையில் ஆட்சி செய்து கொண்டிருந்தனர். தொண்டைமான் திக்விஜயம் செய்ய புறப்பட்டான். படைகளோடு அவன் கோழம்பேடு என்னும் கிராமத்தில் தண்டு இறங்கியிருந்தான். அப்போது இறையருளால் இரவிலே அவனுக்கு மணியோசை கேட்டது. இயல்பிலேயே பக்திமானான தொண்டைமான் பக்கத்தில் ஏதோ ஆலயம் இருக்க வேண்டும் நாளை அந்தக் கோவிலிலே சென்று இறைவனை தரிசிப்போம் என்று தீர்மானித்துக் கொண்டு உறக்கத்தை தொடர்ந்தான். மறு நாள் காலை படைகள் இல்லாமல் தனியாக பட்டத்து யானை மீது ஏறி கோவிலைத் தேடி புறப்பட்டான். அவன் தனியாக வருவதை அறிந்த குறு நில மன்னன் தனது படையோடு கிளம்பி தொண்டைமானை வீழ்த்த வந்தான். படை பலம் இல்லாமல் தனியாக அவர்களிடம் சிக்கிக் கொண்டால் ஆபத்து என்பதை உணர்ந்த மன்னன் சேனைகளை துணைக்கு கொள்ள யானையை விரட்டிக் கொண்டு பின்வாங்கினான். அப்போது முல்லைக் கொடிகள் அடர்ந்திருந்த ஒரு பகுதியில் யானையின் கால்களை கொடிகள் சுற்றிக் கொண்டன. உடனே யானை மீது அமர்ந்தபடியே தனது நீண்ட வாளினால் அந்த முல்லைக் கொடிகளை வெட்டித் தள்ள ஆரம்பித்தான். அவ்வாறு அவன் வெட்டிய போது முல்லை கொடிகளிலே மறைந்திருந்த இறைவனின் இலிங்கத் திருமேனியிலே மன்னன் வாள் பட்டு குருதிப் பெருகத் தொடங்கியது. அதைக் கண்டு மனம் பதைத்த மன்னன் உடனே கீழே குதித்து முல்லைக் கொடிகளை கைகளால் விலக்கிப் பார்த்தான். அவன் கண்ட காட்சி அவனை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அங்கே எம்பெருமான் நீலகண்டர், உமாபதி, ஜடதாரர் , கங்காதீஸ்வரர், சிவலிங்க திருமேனியாய் எழுந்தருளியிருப்பதையும் வாள் பட்டு அவர் பாணத்திலிருந்து இரத்தம் பெருகுவதையும் கண்டான். தான் செய்த சிவஅபசாரத்திற்க்காக தன்னையே மாய்த்துக் கொள்ள முயன்றான். அப்போது பவளம் போன்ற மேனியில் பால் வெண்ணிற்றுடனும் பவளக்கொடியாம் உமையம்மனுடனும், அறமாம் வெள்ளை விடையில் கோடி சூரியப் பிரகாசத்துடன் காட்சியளித்த அந்த கருணாமூர்த்தி, தொண்டைமானே கலங்க வேண்டாம் உன் மூலமாக நான் வெளிப்பட நான் ஆடிய திருவிளையாடல் இது. உனக்கு மணியோசையை உணர்த்தியது நான் தான். "அஞ்சாதே வெட்டுப்பட்டாலும் நான் மாசு இல்லாதா மணியே! எனது முதற் தொண்டனான நந்தி தேவரை உன்னுடன் நான் அனுப்புகிறேன் உன்னை வெல்ல யாராலும் முடியாது. நீ திக்விஜயத்தில் வெற்றி கண்டு புகழ் பெறுவாயாக" என்று வாழ்த்தி மறைந்தருளினார். இறைவன் தாமே தனக்கு " மாசிலாமணி " என்று பெயர் சூட்டிக் கொண்டதால் இன்றும் அவர் இன்றும் அத்திருநாமத்துடனே நமக்கு அருள்பாலிக்கின்றார். முல்லைக் கொடியை வாயிலாகக்கொண்டு எம்பெருமான் வெளிப்பட்டதால் இத்தலம் முல்லை வாயில் எனப்பட்டது.


திசை மாறிய நந்தியெம்பெருமான்


இறையருளாலும் நந்தியெம்பெருமானின் உதவியாலும் ஓணன், காந்தன் மற்றும் தனது பகைவர்கள் அனைவரையும் வெற்றி கொண்ட தொண்டைமான் அவர்கள் அரண்மனையில் இருந்த இரு எருக்கம் து‘ண்களை ஜயஸ்தம்பமாக கொணர்ந்து மாசிலாமணிஸ்வருக்கு திருக்கோவில அமைத்த போது அர்த்த மண்டபத்தில் நாட்டினான். இன்றும் இத்து‘ண்களை இத்திருக்கோவிலில் நாம் காணலாம். எனவே தொண்டைமாணுக்கு உதவச் சென்ற நந்தி இறைவனைப் பார்க்காமல் எதிரே கோவில் கோபுரத்தை நோக்கி அமைந்துள்ளது இக்கோவிலின் ஒரு தனி சிறப்பு. இந்நந்தியை வேண்டிக் கொண்டால் தடைப்பட்ட திருமணங்கள் எல்லாவித தடைகளும் நீங்கப் பெற்று நடந்தேறும் எம்பது ஐதீகம்.


இவ்வரலாற்றை எம்பிரான் தோழராம் சுந்தர மூர்த்தி நாயனார் தம் பதிகத்திலே இவ்வாறு பாடுகின்றார்.


சொல்லரும் புகழான் தொண்டைமான் களிற்றைச் சூழ் கொடி முல்லையாற் கட்டிட யெல்லையில் இன்பம் அவன் பெற வெளிப்பட் டருளியஇறைவனே என்றும்


நல்லவர் பரவுஞ் திருமுல்லை வாயில் நாதனே நரைவிடை ஏறீ பல்கலை பொருளே படுதுயர் களையாய் பாசுப தாபரஞ் சுடரே!தன் வாளால் வெட்டுப்பட்டதால் இறைவனின் திருமேனி எரியுமே என்ற கவலையினால் நல்ல மணம் கமழும் சந்தனத்தை அரைத்து இறைவன் திருமேனியெங்கும் காப்பிட்டான் தொண்டைமான். எனவே இன்றும் வருடம் முழுவதும் சந்தனக் காப்புடனே தரிசனம் தருகின்றார் மாசிலமணிஸ்வரர். ஒவ்வொரு வருடமும் இறைவன் தானே வெளிப்பட்ட அந்த சித்திரை சதய நாளன்று அவருக்கு புது சந்தன காப்பிடப்படுகின்றது.


எனவே அதற்கு இரு நாள் முன் பழைய சந்தனக் காப்பு நீக்கப்படுகின்றது. அப்போது நமக்கு கிடைக்கின்றது வெட்டுக் காயத்தின் தழும்புடன் எம் ஐயனின் "அபூர்வ நிர்மால்ய தரிசனம்". இறைவனை நிஜ ரூபத்தில் இந்த இரண்டு நாட்கள் நாம் கண்டு உய்யலாம்.சித்திரை சதய நாளன்று காலை சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடை பெற்று மீண்டும் மூலவருக்கு புதிதாக சந்தனம் அரைத்து சாத்துகின்றனர். அன்று திருகோவிலில் சந்தனம் அரைத்து பேறு பெறுவோர் அநேகர்.

இன்று காலை தொடங்கி நிர்மால்ய தரிசனம். 30-05-08 அபிஷேகம் மற்றும் சந்தன காப்பு சென்று தர்சனம் பெறுங்கள்.
தொடரும்.....................

சித்திரைத் திருவோணம்


சித்திரைத் திருவோணம்
இன்றுதான் ..............

ம்பலத்தாடும் ஐயனுக்கு
னந்த கூத்தனுக்கு
க பர சுகம் அருளும் நாதனுக்கு
கை செம்மலுக்கு
லகெலாம் உணர்ந்து ஓதற்குரியவனுக்கு
ழி நாதனுக்கு
ன்னப்பன் என்தாயனவனுக்கு
னக் குருளைக்கு அருளியவருக்கு
ந்தொழில் புரியும் அரசனுக்கு
ப்பிலா மணிக்கு
ங்கார வடிவானவனுக்கு
டதமாய் காப்பவனுக்குஆனந்த நடராசர் தரிசனம்
சிவானந்தவல்லி தரிசனம்
தென் தில்லை மன்றில் பொற்சபையில் இடது பதம் தூக்கி ஆடும் ஆனந்த நடராச பெருமானுக்கு தேவர்கள் செய்யும் உச்சிக்கால அபிஷேகம். மானிடர்களாகிய நம்முடைய ஒரு வருடம் தேவர்களுக்கு ஒரு நாள். அவர்கள் செய்யும் ஆறு கால பூஜையே அம்பலவாணருக்கு நடைபெறும் ஆறு அபிஷேகங்கள்.சிவகாம சுந்தரி தரிசனம்அம்பலவாணர் தரிசனம்

சித்திரை ஓணமும், சீரானியுத்திரமாம்
சத்ததனு ஆதிரையும் சார் வாளும் -பத்திமிகு
மாசியரி கன்னி மருது சதுர்த்தசி மன்
றீசர பிடேக தினமாம்
.

அதாவது
சித்திரை - திருவோணம்
ஆனி - உத்திரம்
மார்கழி - திருவாதிரை
மாசி - வளர் பிறை சதுர்த்தசி( பௌர்ணமிக்கு முந்தைய நாள்)
ஆவணி - வளர் பிறை சதுர்த்தசி( பௌர்ணமிக்கு முந்தைய நாள்)
புரட்டாசி - வளர் பிறை சதுர்த்தசி( பௌர்ணமிக்கு முந்தைய நாள்)
( தனுர் - மார்கழி, யரி(சிம்மம்) - ஆவணி, கன்னி- புரட்டாசி)

ஆகிய ஆறு தினங்களே மன்றினில் ஆடும் மன்னனுக்கு உரிய அபிஷேக தினங்கள்.சித்திரை திருவோண தினமான இன்று தில்லையில் அம்பலவாணர் சித் சபையிலிருந்து பொற்சபைக்கு எழுந்தருளி மாலையில் அபிஷேகம் கண்டருளுகின்றார். மாலை சுமார் 6 மணிக்கு துவங்கும் அபிஷேகம் இரவு 9 மணி வரை நடக்கின்றது. உண்மையாக நதியாகவே பாய்கின்றன ஐயனுக்கும் அம்மைக்கும் அபிஷேக திரவியங்கள். மற்ற திருத்தலங்களில் உச்சி காலத்தில் அபிஷேகம் நடைபெறுகின்றது.அம்பலத்தரசர் அருள் தரிசனம்சிவானந்த வல்லி

அந்த பிறப்பிறப்பில்லா , ஆண் பெண் அலியல்லா, ஆதியும் அந்தமும் இல்லா ஆனந்த கூத்தனின் சில அருட் தரிசனங்களை கண்டு உய்ய வாருங்கள்.


ஐயனின் ஆனந்த தரிசனம் கண்டோம் இனி அவர் ஆடும் ஐந்து சபைகள் எதுவென்று பார்ப்போம்.

சிதம்பரம் - பொன்னம்பலம் - கனக சபை - ஆனந்த தாண்டவம்.
மதுரை - வெள்ளியம்பலம் - ரதஜ சபை - சந்த்யா தாண்டவம்
(பாண்டிய மன்னனுக்காக கால் மாறி ஆடிய ஆட்டம்)
திருநெல்வேலி - தாமிராம்பலம் - தாமிர சபை - முனி தாண்டவம்
திருக்குற்றாலம் - சித்திரம்பலம் - சித்ர சபை - திரிபுர தாண்டவம்
திருவாலங்காடு - மணியம்பலம் - ரதன சபை - ஊர்த்துவ தாண்டவம்
( காளியை தோற்கடிக்க காலை வானை நோக்கி உயர்த்தி ஆடிய ஆட்டம்)

கோபுர வாசலில் எங்கோன் தரிசனம்


கூத்த பிரான் தரிசனம்அம்மை சிவகாமி

பிறப்பறுக்கும் பிஞ்ஞகன் புறப்பாடுவேதங்களாட மிகுவாக மாதல்
கீதங்களாடக் கிளரண்ட மேழாடப்
பூதங்க ளாடப்புவன முழுதாட
நாதங் கொண்டாடினான் ஞானான்ந்த கூத்தே!


என்றபடி சகல புவனங்களையும் ஆட்டுவிக்கும் ஆனந்த கூத்தனின் அருள் அபிஷேகம் கண்டு நன்மையடைவோமாக.

Tuesday, April 22, 2008

சித்திரைப் பெருந்திருவிழா பரத்வாஜேஸ்வரம் - 12

பன்னிரு திருமுறை உற்சவம்

பெருவிழாவின் பதினொன்றாம் நாள் காலை பரத்வாஜேஸ்வ்ரத்தில் நால்வர் பெருமக்களும் மற்ற ஆசிரியர்களும் இயற்றிய பன்னிரு திருமுறைகள் உற்சவம் சிறப்பாக நடைபெறுகின்றது. நடராஜப் பெருமானையும் சிவகாமி அம்பாளையும் தரிசனம் செய்யும் போது திருமுறைக் கோவிலையும் தரிசித்திருப்பீர்கள். திருமுறை கண்ட சோழன் இராஜ இராஜனால் பூட்டியிருந்த அறைக்குள் இருந்து வெளியே கொண்டுவரப்பட்டு நம்பியாண்தார் நம்பிகளால் தொகுக்கப்பட்ட பன்னிரு திருமுறை விழா.
திருமுறை நூல்களையே இறைவனைப் போல அலங்காரம் செய்து வழிபாடு நடத்தப்பட்டு வீதி உலாவும் நடைபெறுகின்றது. தமிழ அறிஞர்கள் திருமுறைகளின் அருமையை உணர்த்துகின்றனர். சமணர்களை துரத்தியது திருமுறையின் சில பதிகங்கள், பச்சைப்பதிகம் தீயிலும் எரியாமல் அப்படியே இருந்தது. வைகையிலே இட்ட போது இப்பதிகங்கள் ஆற்றுப் போக்கை எதிர்த்து வந்தன. தீராத நோய்களை தீர்த்து வைத்தன. திற்வாமல் இருந்த கதவை திறந்தன இப்பதிகங்கள். இறந்து என்பான பெண்ணையும், முதலை விழுங்கிய சிறுவனையும் உயிருடன் கொண்டு வந்தன பதிகங்கள் ஓடாமல் நின்ற தேரையும், ஏறாமல் நின்ற கொடியையும் ஏற்றின இப்பதிகங்கள்.. இறைவன் இறைவியின் புகழை மட்டுமல்ல அவர்களது திருத்தொண்டர்களின் சிறப்பையும் பரவின இப்பதிகங்கள்.


திருமுறைகள் உற்சவம்


புஷ்பதகுத்து சிறப்புக்காட்சி
பதினொன்றாம் நாள் இரவு அம்மையப்பர் புஷ்ப பல்லக்கில் பஞ்ச மூர்த்திகளுடன் வலம் வந்து அருள் பாலிக்கின்றனர். சிறப்பு அலங்காரம் செய்யப்படுகின்றது இறைவனுக்கு இன்று.

புஷ்ப நாக ஊஞ்சல்
பன்னிரண்டாம் நாள் மாலை பரதவாஜேஸ்வரத்தில் புஷ்ப ஊஞ்சல் உற்சவம். அம்மையப்பரை தியாகராஜப் பெருமான் போல அலங்காரம் செய்கின்றனர். பரத்வாஜேஸ்வரர் தியாகராஜராக ஊஞ்சல் சேவை தந்தருளுகின்றார்.
சீரார் பவளங்கால் முத்தம் கயிறாக
ஏராரும் பொற்பலகை ஏறி இனிதமர்ந்து
நாராயணன் அறியா நாள் மலர்த்தாள் நாய் அடியேற்க்கு
ஊர் ஆகத்தந்தருளும் புலியூர்
ஆரா அமுதன் அம்மையுடன் பொன்னூசல் ஆடுகின்றார்
நாம் எல்லாம் உய்ய. ஒருருவம் ஓர் நாமம் இல்லதார்க்கு ஆயிரம் பேர் சொல்லி தெள்ளேணம் கொட்டோமோ என்று மாணிக்க வாசக சுவாமிகள் பாடியபடி பரம் பொருளுக்கு, பக்த வத்சலருக்கு, தியாக ராஜருக்கு, பரத்வாஜேஸ்வரருக்கு சிறப்பு சகஸ்ரநாம அர்ச்சனை நடைபெறுகின்றது.

புஷ்ப ஊஞ்சலில் தியாகராஜர்

சொர்ணாம்பிகை அம்மன்
பிறகு இரவு தியாகராஜ இயந்திரம் என்று அழைக்கபடும் சிறப்பு வாரையில் தியாகராஜரைப் போல இருந்தாடி அழகாக வீதி வலம் வந்து அருளுகின்றார் எம்பெருமான். தியாகராஜ சுவாமியை சபத விடங்க ஸ்தலங்களிலோ அலல்து தொண்டை மண்டல தியாகத் தலங்களில் தரிசித்த அதே அனுபவத்தை இன்று பரதவாஜேஸ்வரத்திலும் பெறலாம்.

பதிமூன்றாம் நாள் காலை உற்சவ சாந்தி சிறப்பு அபிஷேகம். ஆகம் விதிகளின் படி இறைவனின் திருமூர்த்தங்களை திருக்கோவிலை விட்டு வெளியே கொண்டு சென்று விட்டு வரும் போது சாந்தி அபிஷேகம் செய்ய வேண்தும் என்பது மரபு. மேலும் கடந்த பன்னிரண்டு நாட்களாக, எளி வந்த கருணையினால் தானே வெளியே வந்து காலையும் மாலையும் திருக்காட்சி தந்த தயாபரன் அந்த களைப்பு தீர நீராடுவதக ஐதீகம்.
விடையாற்றி உற்சவம்
பதினான்காம் நாள் மாலை விடையாற்றி உற்சவ சாந்தி இசை நிகழ்ச்சி, இனிய இசை கேட்டு களைப்பைப் போக்கிக் கொள்கிறார் சொர்ணாம்பிகை சமேத பரத்வாஜேஸ்வரர்.

கடந்து 12 நாட்களாக ஐயனின் சிறப்புக் கோலங்களை அன்பர்களான தங்களுக்கு கொண்டு செல்ல அனுமதித்த சிவ சக்திக்கு திருக்கயிலை நாதருக்கு நன்றி கூறி இத்துடன் இத்தொடரை நிறைவு செய்கின்றேன். வந்து தரிசனம் செய்தவர்களுக்கு நன்றி.

சித்திரைத் திருவிழா காரணீஸ்வரம் - 14


புஷ்ப பல்லக்கு
இந்திரன் வழிபட்ட காரணீஸ்வரத்தில் பதினொன்றாம் காலை சிவ சொரூப காட்சி, மாலை அம்மையப்பர் புஷ்ப பல்லக்கு சேவை தந்தருளுகின்றனர், ஏகாந்தமாக ஐயனும் அம்மையும் புஷ்ப பல்லக்கில் எழுந்தருளி மாட வீதி வலம் வந்து அருள் பாலிக்கின்றனர்.


புஷ்ப பல்லக்கிற்க்கு புறப்படும் அம்மையப்பர்


புஷ்ப பல்லக்கு
பன்னிரண்டாம் நாள் மாலை நான்கு மணியளவில் திருமுறை உற்சவம்.
வெள்ளை யானையில் பன்னிரு திருமுறைகள் புறப்பாடுதிருமுறையே சைவநெறிக் கருவூலம் தென் தமிழின் தேன்பா காகும்
திருமுறையே கயிலையின்கண சிவபெருமான் செவிமடுத்த செந்தமிழ் வேதம்
திருமுறையே நடராசன் கரம்வருந்த எழுதிய அருள் தெய்வ நூலாம்
திருமுறையே சொக்கேசன் மதிமலிவாய் மலர்ந்தருளும் சிறப்பிற்றாமால்

ன்று சிறப்பித்துப் பாடிய பன்னிரு திருமுறைகள் வெள்ளை யானை மேல் அலங்காரம் செய்யப்பெற்று திருவிதி வலம் வருகின்றன. ஓதுவார் மூர்த்திகள் பன்னிரு திருமுறைகளைப் பாடியபடி உதன் வலம் வருகின்றனர். ஐயனின் அருளை, கருணையை, புக்ழைப் பாடும் பதிகங்களுக்கும் அவருக்கு செய்யும் சிறப்பு செய்யப்படுகின்றது.


மாலை ஆறு மணியளவில் பஞ்ச மூர்த்திகளுக்கு உற்சவ சாந்தி சிறப்பு நவ கலச அபிஷேகம். சோமாஸ்கந்த மூர்த்தத்தில் மூன்று மூர்த்தங்கள், முருகர் வள்ளி தேய்வானையுடன், விநாயகர், சொர்ணாம்பாள் மற்றும் சண்டிகேஸ்வர் என்று ஒன்பது மூர்த்தங்களுக்கு தனித் தனியாக கலசம் ஸ்தாபித்து மந்திரப் பூர்வமாக சுத்திகரித்து நதியாய்ப் பாயும் திரவியங்களால் அபிஷேகம் நடைபெறுகின்றது. பின்னர் உற்சவ சாந்தி தேவார இன்னிசைக் கேட்டருளி யதாஸ்தானம் திரும்புகின்றனர் பஞ்ச மூர்த்திகள்.


இது வரை யான் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம் என்று திருக்காரணீச்சரத்தில் ஐயனுக்கு கோலாகலமாக நடைபெற்ற பெருவிழாவில் அவர் அளித்த அருட்காட்சிகளை உங்கள் வரை கொண்டு வர அனுமதித்த திருக்கயிலை நாதருக்கும் மலையரசன் பொற்பாவைக்கும் அனந்த கோடி நமஸ்காரங்கள். வந்து தரிசித்த அன்பர்களுக்கும் நன்றி. இப்பதிவுடன் இந்த தொடர் நிறைவடைகின்றது.

Monday, April 21, 2008

சித்திரைப் பெருந்திருவிழா பரத்வாஜேஸ்வரம் - 11

சித்ரா பௌர்ணமி திருக்கல்யாணம்
சைவத்தலங்களில் பெருவிழாக்கள் அனைத்தும் அம்மையப்பரின் திருக்கல்யாணத்துடன் நிறைவடைகின்றன. பத்தாம் நாள் இரவு திருக்கலயாணம் நடைபெறுகின்றது. பொதுவாக திருக்கலயாணம் என்பது ஜீவாதமா மற்றும் பரமாத்மாவின் ஐக்கியத்தை குறிக்கின்றது. பாசத்தால் சூழப்பாட்டிருக்கின்ற பசுவானது அந்த பாசம், ஆணவம் முதலிய மலங்கள் நீங்கி பதியுடன் சேருவதைக் குறிக்கின்றது. ஆகவேதான் சிவபெருமான் பசுபதி என்று அழைக்கப்படுகின்றார்.

விநாயகப் பெருமான்


சொர்ணாம்பிகை அம்பாள் கல்யாண கோலம்

பரத்வாஜேஸ்வரர் கல்யாணக் கோலம்


அழகன் முருகன் தேவியருடன்
திருக்கலயாணம் முடிந்த பின்பு அம்மையப்பர் திருக்கயிலாய வாகனத்தில் சேவை சாதிக்கின்றார், ஐயனும் அம்மையும் உறையும் தம் திருக்கயிலாயம். சகல புவனங்களையும் படைத்தும் காத்தும், அழித்தும், அருளியும் மறைத்தும் ஐந்தொழில் புரியும் ஐயனும் அவரின் பாதி சக்தி அம்மையும் யோகத்தில் அமர்ந்து சகல புவனத்தையும் பரிபாலிக்கின்றனர். எனவே திருக்கயிலாய வாகனம் சிவபெருமானுக்கே உரியது பூதம், ரிஷபம், அதிகார நந்தி போல. அடாத செயல் செய்த இராவணனின் ஆணவத்தை ஐயம் தன்து இடது பெரு விரலால் சிறிதாக் அழுத்தி அடக்கியதை உனர்த்தும் வகையில் கைலாய வாகனத்தின் முன் ஆணவ இராவணனின் சிலை இருக்கும். திருவிதி உலா முடிந்து பஞ்ச மூர்த்திகள் திருக்கோவில் திரும்பியதும் கொடியிறக்கம்.இதுவரை தேவ லோகத்தை விட்டு பிரம்மோற்சவத்தை காண வந்த சகல தேவர்களையும் தங்கள் தங்கள் யதாஸ்தானம் செல்லுமாறு வேண்டப்பட்டு பெருவிழாவின் நிறைவை குறிக்கும் வகையில் கொடியிறக்கப்படுகின்றது. பின் சண்டிகேஸ்வரர் உற்சவம்.பரத்வாஜேஸ்வரர் புறப்பாடு


திருக்கயிலாயத்தில் எப்போதும் பூத கணங்கள் புடை சூழ வலம் வருபவர் சிவபெருமான். ஐயனின் சேவகர்கள் பூத கணங்கள். ஐயன் ஆடும் போது பூத கணங்கள் வாத்தியம் வாசிக்கும் ஒரு அற்புதக் காட்சியை பரத்வாஜேஸ்வரத்தில் திருக்கல்யாண தினத்தன்று காணக் கிடைக்கப்பெற்றேன். அந்த அற்புத அனுபவத்தை அன்பர்களாகிய உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றேன். மொத்தம் 10-12 பேர் கொண்ட குழு அனைவரின் உடல் முழுவதும் திருநீற்று பட்டை கழுத்தில் ருத்திராக்ஷ மாலைகள். சிவ சொரூபமாக ( பூத கணங்களாகவே) அடியேன் கண்ணுக்குப்பட்டது. அவர்கள் வாசித்த தாள வாத்தியத்தின் பெயர் திருஉடல் திருக்கயிலாயத்தில் ஐயன் ஆடும் போது பூத கணங்கள் வாசிக்கும் அதே வாத்தியம். ஆறு திருஉடலுன் நான்கு பிரம்ம தாள்ம், இரண்டு கொம்பு, இரண்டு எக்காளம், சங்கு, மாட்டு கொம்பு வாத்தியம் ஒன்று என்று அவர்கள் வாசித்த போது நமக்கே ஆட வேண்டும் என்ற உணர்வு தோன்றியது. இவ்வாறு பூத கணங்கள் வாத்தியம் வாசிக்க திருக்கயிலை வாசன் தனது பரிவாரத்துடன் திருவீதி வலம் வந்த அழகைக் காண வார்த்தைகளே இல்லை. நடுவில் ஒருவர் கையில் தூபக்காலை வைத்துக் கொண்து ஆடினார், குழுவின் தலைவர் போல தோன்றினார் அவர் நந்தி தேவரை ஞாபகப்படுத்தினார். உண்மையிலேயே இது ஒரு தெய்வீக அனுபவம் அதை அளித்த அம்மையப்பருக்கு நன்றி.
ரிஷ்ப வாகனத்தில் சொர்ணாம்பாள் புறப்பாடு

மயில் வாகனத்தில் எழில் முருகன்சண்டிகேஸ்வரர் ரிஷ்ப வாகனத்தில் புறப்பாடுசித்திரைத் திருவிழா காரணீஸ்வரம் - 13

காரணீஸ்வரர் சொர்ணாம்பிகை திருக்கலயாணம்

சைவத்தலங்களில் பெருவிழாக்கள் அனைத்தும் அம்மையப்பரின் திருக்கல்யாணத்துடன் நிறைவடைகின்றன. பத்தாம் நாள் இரவு திருக்கலயாணம் நடைபெறுகின்றது. பொதுவாக திருக்கலயாணம் என்பது ஜீவாதமா மற்றும் பரமாத்மாவின் ஐக்கியத்தை குறிக்கின்றது. பாசத்தால் சூழப்பாட்டிருக்கின்ற பசுவானது அந்த பாசம், ஆணவம் முதலிய மலங்கள் நீங்கி பதியுடன் சேருவதைக் குறிக்கின்றது. ஆகவேதான் சிவபெருமான் பசுபதி என்று அழைக்கப்படுகின்றார்.
திருக்கலயாணம் முடிந்த பின்பு அம்மையப்பர் திருக்கயிலாய வாகனத்தில் சேவை சாதிக்கின்றார், ஐயனும் அம்மையும் உறையும் தம் திருக்கயிலாயம். சகல புவனங்களையும் படைத்தும் காத்தும், அழித்தும், அருளியும் மறைத்தும் ஐந்தொழில் புரியும் ஐயனும் அவரின் பாதி சக்தி அம்மையும் யோகத்தில் அமர்ந்து சகல புவனத்தையும் பரிபாலிக்கின்றனர். எனவே திருக்கயிலாய வாகனம் சிவபெருமானுக்கே உரியது பூதம், ரிஷபம், அதிகார நந்தி போல. அடாத செயல் செய்த இராவணனின் ஆணவத்தை ஐயம் தன்து இடது பெரு விரலால் சிறிதாக் அழுத்தி அடக்கியதை உனர்த்தும் வகையில் கைலாய வாகனத்தின் முன் ஆணவ இராவணனின் சிலை இருக்கும்.
அம்மையப்பர் கலயாணக் கோலம்

சொர்ணாம்பிகை அம்மன் கல்யாணக் கோலம்
முருகனின் அருட்கோலம்திருக்கயிலாய வாகனத்தில் கயிலை நாதர்
கோடி புண்னியம் தரும் கோபுர வாசல் தரிசனம்திருவிதி உலா முதிந்து பஞ்ச மூர்த்திகள் திருக்கோவில் திரும்பியதும் கொடியிறக்கம்.
இதுவரை தேவ லோகத்தை விட்டு பிரம்மோற்சவத்தை காண வந்த சகல தேவர்களையும் தங்கள் தங்கள் யதாஸ்தானம் செல்லுமாறு வேண்டப்பட்டு பெருவிழாவின் நிறைவை குறிக்கும் வகையில் கொடியிறக்கப்படுகின்றது. பின் சண்டிகேஸ்வரர் உற்சவம்.

சித்திரைத் திருவிழா காரணீஸ்வரம் - 12

நடராஜர் உற்சவம்
சிதரா பௌர்ணமி உற்சவ தீர்த்தவாரி
பெருவிழாவின் பத்தாம் நாள் அதிகாலை முதல் உற்சவங்கள்தான். அதிகாலை ஆனந்த நடராசர் சிவகாம சுந்தரி அம்பாளுக்கும், காரைக்கால் அம்மையார், மாணிக்க வாசகர், வியாக்ரபாதர், பதஞ்சலிக்கும் அபிஷேகம். பின் ஆன்ந்த தாண்டவக் கோலத்துடன் அம்பலக்ககூத்தர் அம்மை சிவகாமவல்லியுடன் மாட வீதி வலம் வந்து அருள் தரிசனம் தருகின்றார்.

பின்னர் 11 மணியளவில் தீர்த்த வாரி பஞ்ச மூர்த்திகளும் இந்திர தீர்த்தத்திற்கு எழுந்தருளி தீர்த்தம் கொடுக்கின்றனர் சித்ரா பௌர்ணமியன்று. குளக்கரையில் அஸ்திர தேவருக்கு அபிஷேகம் நடைபெறுகின்றது. முளைப்பாலிகை இட்ட மண் மற்றும் கங்கணங்கள் கங்கை சேர்க்கப்படுகின்றன. திருக்குளத்தில் திருமுழுக்கிட்டு குளத்தை தூய்மைப்படுத்துகிறார் அஸ்திர தேவர் அப்போது பகதர்களும் குளத்தில் மூழ்குகின்றனர்.


தீர்த்தம் கொடுக்க வரும் காரணீஸ்வரப் பெருமான்

சிவ சொர்ணாம்பிகை அம்மன்

அஸ்திர தேவர்

இந்திரக் குளக்கரையில் பஞ்ச மூர்த்திகள்

அடுத்த பதிவில் அம்மையப்பரின் திருக்கல்யாண கோலத்தைக் காணலாம்.

சித்திரைப் பெருந்திருவிழா பரத்வாஜேஸ்வரம் - 10

சித்ரா பௌர்ணமி திருக்கல்யாண மஹோத்சவம்

சிவாலயங்களில் பெருவிழாக்கள் ஒரு தீர்த்த நாளை அடிப்படையாக வைத்தே கொண்டாடபப்டுகின்றன. பரத்வாஜேஸ்வரத்தில் சித்ரா பௌர்ணமி தீர்த்த நாளாகும்.

பெருவிழாவின் பத்தாம் நாள் காலை ஆனந்த நடராசர் உற்சவம். அதிகாலை அபிஷேகம் கண்டருளி அம்மை சிவகாம சுந்தரியுடன் அருட்காட்சி தருகின்றார் சூரியோதய காலத்தில்.


ஆன்ந்த நடராசர் தரிசனம்

சிவானந்தவல்லி தரிசனம்மதிய நேரம் தீர்த்தவாரி. அஸ்திர தேவருடன் சந்திர சேகரர் தீர்த்தக்கரைக்கு எழுந்தருளி அபிஷேகம்.

இரவு அம்மையப்பர் திருக்கல்யாணம். பின்பு கைலாய வாகனத்தில் திருவிதிஉலா. கொடியிறக்கம் சண்டிகேஸ்வரர் திருவிழா


விநாயகர் சிறப்பு அலங்காரம்அம்மையப்பர் திருக்கல்யாணக் கோலம்

சொர்ணாம்பாள் கலயாணக் கோலம்

அழகன் முருகன்


சண்டிகேஸ்வரர்
இப்படங்கள் முதன் முதலில்(1999) எடுக்கபட்டவை. இன்றைய படங்கள் அடுத்த பதிவில்.