Friday, August 30, 2019

சித்திரைப் பெருவிழாக்கள் 2019 - 7

கோயம்பேடு குறுங்காலீஸ்வரர் ஆலயம்


சித்திரைத் திருவிழா பதிவுகளில் அடுத்து நாம் தரிசிக்கப்போகின்ற திருக்கோவில்  கோசை என்றழைக்கப்படும் கோயம்பேடு குறுங்காலீஸ்வரர் ஆலயம் ஆகும். இத்தலத்தின் சிறப்புகள் வடக்குப் பார்த்த லிங்கம் அமைந்துள்ள முக்தித்தலம் ஆகும். இத்தலத்தில் அம்பாள் அறம் வளர்த்த நாயகி பக்தர்களுக்கு அருளும் விதமாக இடது காலை முன் வைத்த கோலத்தில் தரிசனம் அருள்கின்றாள். இத்தல முருகனை அருணகிரிநாதர் தனது திருப்புகழில் பாடியுள்ளார். இத்தல நந்தியெம்பெருமான் மூக்கணாம் கயிறுடன் எழுந்தருளியுள்ளார். வாருங்கள் பழமை வாய்ந்த கலை அம்சம் நிறைந்த இவ்வாலயத்தை தரிசிக்கலாம்.

சென்னை பூந்தமல்லி நெடுஞ்சாலையில் கோயம்பேட்டில் அமைந்துள்ளது அருள்மிகு அறம் வளர்த்த நாயகி உடனுறை  குறுங்காலீஸ்வரர் திருக்கோவில். க்கோவில் சுமார் 1,500 ஆண்டுகளுக்கு முற்பட்ட பழமையான திருத்தலமாகும். வால்மீகி முனிவர், பகவான் ராமனின் குமார்ர்களான  லவன், குசன் ஆகியோர் வழிபட்ட புண்ணியத்தலமாக க்கோவில் விளங்கி வருகிறது.

குறுங்காலீஸ்வரர் திருக்கோயில் ஒரு காலத்தில் வால்மீகி முனிவர் ஆசிரமமாக இருந்தது. அங்கே லவன் - குசன் என்ற தன் குழந்தையுடன் சீதை வாழ்ந்தாள். வனவாசம் முடிந்து இராவணனுடன் போரிட்டு வெற்றி அடைந்தாயிற்று. சீதையை மீட்டுக் கொண்டு அயோத்தி திரும்பியாயிற்று. பட்டாபிஷேகமும் நடந்தாயிற்று. ஒரு சமயம் தன் குடிமகன் கருத்திற்கு மதிப்பளிக்கும் விதமாக இராமர், தனது சகோதரன் க்குவணை அழைத்து, ‘சீதையை அழைத்துப் போய் காட்டில் விட்டு வாஎன்று கூறினார்.



அன்று சீதை காட்டில்  விடப்பட்டார்.  அந்த காட்டில்  வால்மீகி முனிவர் ஆசிரமம் அமைத்து வாழ்ந்து வந்தார். காட்டில் விடப்பட்ட.  சீதையைக் கண்டார் முனிவர். அவள் கர்ப்பவதியாக இருப்பதை அறிந்து, உடனே தன் ஆசிரமத்திற்கு அழைத்துச் சென்று வேண்டிய உதவிகளைச் செய்தார்.  சீதையின் புதல்வர்களான லவன் - குசன் என்கிற இரு குழந்தைகளும் காட்டிலேயே வளர்ந்து அவர்கள் ஞானக்கல்வியும், வீரக் கல்வியும் கற்றனர்.


ஒருநாள் கம்பீரமாக குதிரை ஒன்றுடன் சில வீரர்கள் காட்டைக் கடக்க முயன்ற போது அவர்களை லவனும் - குசனும் தடுத்து நிறுத்தினர்இது அஸ்வமேத யாகத்திற்காக தன்னை வெற்றிகொள்ள யாருமில்லை என்பதை அறிவிக்கும் விதமாக ஸ்ரீராமர் அனுப்பி வைத்த குதிரை” என்றனர் வீரர்கள்.   அப்படியாஎன்று ஆச்சரியப்பட்ட சகோதரர்கள்அந்த வீரர்களுடன் போரிட்டு அவர்களை விரட்டி விட்டு,  குதிரையைப் பிடித்து கட்டி வைத்தனர்குதிரையை மீட்க வந்தவர்களை லவ குசர்கள் தோற்கடித்து விரட்டினர்.  அனுமன் வந்து விஸ்வரூபமாய் நின்றார்அவரை ராமநாமம் சொல்லி இயல்புக்கு வரவழைத்து தியானத்தில் மூழ்கடித்து வீழ்த்தி விட்டனர்கடைசியில் ராமரே வந்தார்வந்திருப்பது யார் என்பதை அறியாத லவ குசர்கள் அவரை எதிர்த்து உக்கிரமாய் போரிடவே தகவல் வால்மீகிக்கு போனது.




ஒடோடி வந்து அவரிடையே புகுந்து சமாதானம் செய்து வைத்ததுடன் ஒருவருக்கு ஒருவர்  அறிமுகம் செய்து வைத்தார். தந்தையை எதிர்த்து போரிட்ட காரணத்தால் லவ குசர்களை பித்ரு தோஷம் பிடித்துக் கொண்டது. அந்த தோஷம் நீங்க வழி கூறுமாறு வால்மீகியிடம் வேண்டினார் லவ-குசர்கள். சிவலிங்கம் ஒன்றை ஸ்தாபித்து பூஜை செய்து வழிபட்டால் உங்கள் தோஷம் நீங்கும் என்றார் முனிவர். அதன்படி தாங்கள் போரிட்ட அதே இடத்தில் ஒரு பலாமரத்தின் அடியில் சிவலிங்கத்தை நிறுவி வழிபட்டனர். 

லிங்கம் பெரியதாக இருந்ததால் சிறுவர்களான லவ-குசர்களால் நிமிர்ந்து நின்று பூசிப்பது சிரமமாக இருந்தது. லவ-குசர்கள் எளிதாய் பூசிக்க ஏற்றவாறு தன் திருமேனியை குறுக்கிக் கொண்டு குறுங்காலீஸ்வரராய் காட்சி அளித்தார். ஈசனின் கருணையைக் கண்டு புளகாங்கிதம் அடைந்த லவ-குசர்கள் தொடர்ந்து வழிபட்டு தோஷ நிவார்த்தி அடைந்தனர். முன்பு குசவபுரிஸ்வரர் என்று பின்பு குறுங்காலீஸ்வரர் என்றும் அழைக்கப்பட்டார். அவரை நினைத்து வழிபட பித்ருதோஷம் நீங்கும் என்பது ஐதீகம்.