பாடி என்றழைக்கப்படும் திருவலிதாயம், குரு பரிகாரத்தலத்தின் பிரம்மோற்சவ காட்சிகள் தொடர்கின்றன. இன்றைய தினம் எட்டாம் திருநாள் இரவு குதிரைவாகன சேவையை காட்சிகளைக் காணலாம் அன்பர்களே.
இன்றைய தினம் கட்டளைதாரர்கள் அதிகம் என்பதால் மிகவும் சிறப்பான அலங்காரம் செய்யப்படுகின்றது.
சூாியனும் சந்திரனும் வழிபட்ட திருத்தலம்: தேவா்கள் அமுதம் வேண்டி பாற்கடலைக் கடைந்தனா். அமுதம் கிடைத்ததும் அதனை தேவா்களுக்குப் பறிமாறினாா் மோகினி. “சுவா்பானு” என்ற அரக்கன் தேவா்களின் வடிவெடுத்து அமுதம் பெற தேவா்களின் வாிசையில் நின்றான். சுவா்பானுவின் திட்டம் அறிந்த சூாியனும் சந்திரனும் அவன் தேவா்களின் வடிவம் எடுத்து வந்துள்ளதை மோகினியிடம் தொிவித்தனா். அமுதம் பாிமாறிய மோகினி, அரக்கனின் தலையில் அகப்பையால் ஓங்கி அடிக்க அவன் இரண்டு தூண்டாக ஆனான். பின்னா் ஈசனது திருவருளால் இராகு, கேது என்னும் நிழல் கிரகங்களாக மாறின அரக்கனின் இரண்டு உடல் பாகங்களும். தன்னைக் காட்டிக் கொடுத்த சூாியனையும் சந்திரனையும் இராகுவும், கேதுவும் கிரகணமாய் பிடித்தனா் என்பது புராணம். இராகு மற்றும் கேதுவின் பிடி நீங்க சூாியனும் சந்திரனும் வழிபட்ட தலம் திருவலிதாயம் ஆகும்.
பிட்சாடணர் உற்சவம்
இத்தலத்தில் சித்திரை மாதத்தில் நடைபெறும்
பிரம்மோற்சவ விழா மிகவும் சிறப்பானதாகும். குரு பரிகாரத்தலமாகையால் கரு பெயர்ச்சியும், குரு பகவானுக்கு லட்சர்ச்சனையுடன் மிக சிறப்பாக நடைபெறுகின்றது. நவராத்திரியின் போது அம்பாள் கொலுக் காட்சி அருளுகின்றாள். ஒன்பது நாட்களும் கலை நிகழ்ச்சிகளும் நடைபெறுகின்றன. தை கிருத்திகையும் சிறப்பாக கொண்டாடப்படுகின்றது. இப்பதிவுடன் திருவலிதாய தரிசனம் நிறைவு பெறுகின்றது. அடுத்த பதிவில் இனி ஒரு ஆலயத்தை தரிசிக்கலாம் அன்பர்களே.
2 comments:
திருவலிதாயம் தரிசனம் சிறப்பு. படங்கள் மூலம் சிறப்பான அலங்காரம் கண்டு களித்தேன். நன்றி.
மிக்க நன்றி வெங்கட் ஐயா.
Post a Comment