Showing posts with label பிட்சாடணர்.. Show all posts
Showing posts with label பிட்சாடணர்.. Show all posts

Thursday, August 22, 2019

சித்திரைப் பெருவிழாக்கள் 2019 -6


பாடி என்றழைக்கப்படும் திருவலிதாயம்,  குரு பரிகாரத்தலத்தின் பிரம்மோற்சவ காட்சிகள் தொடர்கின்றன. இன்றைய தினம் எட்டாம் திருநாள் இரவு குதிரைவாகன சேவையை  காட்சிகளைக் காணலாம் அன்பர்களே.




இன்றைய தினம் கட்டளைதாரர்கள் அதிகம் என்பதால் மிகவும் சிறப்பான அலங்காரம் செய்யப்படுகின்றது.



சூாியனும் சந்திரனும் வழிபட்ட திருத்தலம்தேவா்கள் அமுதம் வேண்டி பாற்கடலைக் கடைந்தனா்அமுதம் கிடைத்ததும் அதனை தேவா்களுக்குப் பறிமாறினாா் மோகினிசுவா்பானு என்ற அரக்கன் தேவா்களின் வடிவெடுத்து அமுதம் பெற தேவா்களின் வாிசையில் நின்றான்சுவா்பானுவின் திட்டம் அறிந்த சூாியனும் சந்திரனும் அவன் தேவா்களின் வடிவம் எடுத்து வந்துள்ளதை மோகினியிடம் தொிவித்தனா்அமுதம் பாிமாறிய மோகினிஅரக்கனின் தலையில் அகப்பையால் ஓங்கி அடிக்க அவன் இரண்டு தூண்டாக ஆனான்பின்னா் ஈசனது திருவருளால் இராகுகேது என்னும் நிழல் கிரகங்களாக மாறின அரக்கனின் இரண்டு உடல் பாகங்களும்தன்னைக் காட்டிக் கொடுத்த சூாியனையும் சந்திரனையும் இராகுவும்கேதுவும் கிரகணமாய் பிடித்தனா் என்பது புராணம்இராகு மற்றும் கேதுவின் பிடி நீங்க சூாியனும் சந்திரனும் வழிபட்ட தலம் திருவலிதாயம் ஆகும்.
  

பிட்சாடணர் உற்சவம் 








இத்தலத்தில் சித்திரை மாதத்தில் நடைபெறும் பிரம்மோற்சவ விழா மிகவும் சிறப்பானதாகும். குரு பரிகாரத்தலமாகையால் கரு பெயர்ச்சியும், குரு பகவானுக்கு லட்சர்ச்சனையுடன் மிக சிறப்பாக நடைபெறுகின்றது. நவராத்திரியின் போது அம்பாள் கொலுக் காட்சி அருளுகின்றாள். ஒன்பது நாட்களும் கலை நிகழ்ச்சிகளும் நடைபெறுகின்றன. தை கிருத்திகையும் சிறப்பாக கொண்டாடப்படுகின்றது. இப்பதிவுடன் திருவலிதாய தரிசனம் நிறைவு பெறுகின்றது. அடுத்த பதிவில் இனி ஒரு ஆலயத்தை தரிசிக்கலாம் அன்பர்களே.