Monday, January 21, 2008

தைப்பூசத்தன்று முத்துக்குமரன் தரிசனம்

கந்த கோட்டம்தை பூசத்தன்று ஜோதியான வள்ளலார் சுவாமிகள் "தருமமிகு சென்னையில் கந்த கோட்டத்தில் வளர் தலமோங்கு கந்த வேளே" என்று பாடிய முத்துக் குமார சுவாமியின் திருக்கோவிலைப் பற்றி இப்பதிவில் பார்ப்போமா?


ஸ்ரீ அகண்ட பரிபூரண சச்சிதானந்த திவ்ய தேஜோமய சொரூபியாய் விளங்கும் மமிடற்றண்ணலாம் சிவபெருமானது பால நேத்ர உத்பவராய், சரவணப் பொய்கையிலே திருஅவதாரம் செய்து, கார்த்திகை பெண்களால் வளர்க்கப்பட்டு, திருவிளையாடல் புரிந்து, அம்மை உமாதேவியாரிடம் சக்தி வேல் பெற்று சூரர் குலத்தை கருவறுத்து தேவர் குழாத்தைக் காத்தருளித் தம்மை வழிபடும் அடியவர் துயர் நீங்க போகாங்க மூர்த்த மாஞ்சக உருவந்தாங்கி ஆங்காங்கு திருக்கோவில் கொண்டருளியிருக்கும் படைவீடு முதலான தலங்களைப் போல தொண்டை மண்டலத்திலே, தருமமிகு சென்னையிலே, இராசப்ப செட்டி தெருவிலே, அருட்பெருஞ்ஜோதி, அருட்பெருஞ்ஜோதி, அருட்பெருஞ்ஜோதி, தனிப் பெருங்கருணை என்றும் வாடிய பயிரைக் கண்ட போது வாடினேன் என்று பாடிய வள்ளலார் சுவாமிகளால் " திரு ஓங்கு புண்ணிய செயல் ஓங்கி " என்று பாடல் பெற்ற தலம் தான் சென்னை ஸ்ரீ கந்தசுவாமி கோவிலென வழங்கப்படும் ஸ்ரீ முத்துக்குமார சுவாமி தேவஸ்தானம். ஸ்ரீ மத் பாம்பன் சுவாமிகள், வண்ண சரபம் தண்டபா சுவாமிகள், சிதம்பரம் சுவாமிகள் முதலாய ஞானியர்களால் பெரிதும் புகழ்ந்து பாடல் பெற்ற தலம். இத்தலத்தில் முருகப்பெருமான் கஜவல்லி, வனவள்ளி சமேதராய் கந்தசுவாமி என்னும் திருப் பெயருடன் மூலவராகவும், உடம்பு முழுவதும் முத்துக்கள் பெற்றிருப்பதால் முத்துக் குமார சுவாமி என்ற திரு நாமத்துடன் உற்சவராகவும் மேலும் சண்முகசுவாமி, மற்றும் ஞான தண்டாயுதபாயாகவும் எழுந்தருளி சோமசுந்தரர், மீனாக்ஷ’ மற்றும் சித்தி புத்தி சமேத விநாயகருடன் அ அருள் பாலிக்கின்றார் ஸ்கந்தன் இத்தலத்தில் எழுந்தருளி அருள்பாலிக்கின்றார். வாருங்கள் அந்த அழகன் முருகன் கொஞ்சி விளையாடும் அவன் தலத்தை தரிசிப்போம்.இந்த ஆலயம் சுமார் 360 ஆண்டுகளுக்கு முன் தோன்றிய வரலாறு மிகவும் சுவையானது, அவரது திருவிளையாடல் மூலமாகவே இவ்வாலயம் இங்கு உண்டானது, அதற்கு அவர் தேர்ந்தெடுத்தவர்தான் பேரி செட்டியார் வகுப்பைச் சார்ந்த மாரி செட்டியார். மாரி செட்டியார் அப்போது கிருத்திகை தோறும் சென்னையிலிருந்து திருப்போரூர் சென்று
சுயம்புவாக சிதம்பரம் சுவாமிகளுக்கு காட்சி தந்து அருள் பாலித்த கந்த சுவாமியை, ஒரு கை முகன் இளவளை, கந்தக் கடம்பனை, கார் மயில் வாகனனை, விளங்கு வள்ளி காந்தனை, மாயோன் மருகனை, வழிபடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். தன்னைக் காண வரும் அன்பனின் அருகிலேயே கோவில் கொள்ள விரும்பிய அழகன் ஒரு திருவிளையாடளை நடத்தினான். ஒரு கார்த்திகையன்று மாரி செட்டியாரும் அவரது நண்பர் கந்தசுவாமி தம்பிரானும் ஒரு மரத்தடியில் உறங்கிக் கொண்டிருந்த போது வெகு காலமாக ஒரு புற்றில் தான் இருப்பதாகவும் தன்னை எடுத்துச் சென்று ஒரு கோவில் கட்டுமாறும் அசரீரியாக கூறினார். உறக்கத்தில் இருந்து எழுந்த இருவரும் அருகில் இருந்த புற்றில் அடியில் கந்த வேளை தேவியர் இருவருடனும் கண்டெடுத்தனர். முருகனைக் கண்டு அதிசயித்து விழுந்து வணங்கி அந்த விக்கிரகத்தை பயபக்தியுடன் சென்னை கொண்டு வந்து தற்போது கோவில் உள்ள இடத்தில் பிரதிஷ்டை செய்தார். அன்பர் ஒருவர் தன்னுடைய பூந்தோட்டத்தை கோவில் கட்ட இலவசமாக கொடுத்தார், ஆதிகாலத்தில் சித்தி புத்தி விநாயகர் சன்னதி மட்டுமே இவ்விடத்தில் இருந்தது.தன் மனைவியின் நகைகளை விற்று திருக்கோவிலை உண்டாக்கினார். பிறகு ஆயிர வைசிய பேரி செட்டியார் சமூகத்தினரிடம் கோவிலை ஒப்படைத்தார். அவர்களும் இராஜ கோபுரத்தைக் கட்டி கோவிலுக்கு த்ய கட்டளைகள் ஏற்படுத்தி கோவிலை மேலும் விரிவு படுத்தினர். தொடர்ந்து இவர்களின் வாரிசுகள் இன்றும் எண்ணற்ற திருப்பகள் செய்து வருகின்றனர். மேலும் தங்களுக்கு வாரிசு இல்லாதவர்கள் பலர் தங்கள் சொத்தை இக்கோவிலுக்கு எழுதி வைத்து அறப்பக்கு தங்களை அர்ப்பத்துக் கொண்டார்கள். பள்ளிகள், கல்லு‘ரிகள், நு‘ல் லையம், கலாலயம், மருத்துவமனை, கருணை இல்லம் என்று பல் வேறு சமுதாயப்பகள் இத்திருக்கோவில் சார்பாக நடத்தப்பட்டு மக்களுக்கு சேவை செய்து வருகின்றனர் என்றால் அது அந்த முருகனின் அபார கருணையினால்தான்.மூலவராக எம்பெருமான் இக்கோவில் வந்து எழுந்தருளியதும் ஒரு அற்புத லீலை, அதே போல உற்சவராக முத்துக்குமார சுவாமியாக எழுந்தருளி அருள் பாலிப்பதும் ஒரு அற்புத லீலைதான்.


அந்த அழகன் முருகனை, சிங்கார வேலனை, உற்சவராக வார்த்தெடுத்து எழில் கொஞ்சும் அந்த திருமுகத்தை சீரமைக்க தலைமை சிற்பி உளி கொண்டு செதுக்க முற்பட்டார், ஆனால் அவருக்கு கிடைத்ததோ ஒரு மின்னல் அதிர்ச்சி, அலமலந்து விட்டார் அவர் அப்படி ஒரு அதிர்ச்சி அவருக்கு கிடைத்தது. எனவே அவர் சிலையை செப்பனிடுவதை விடுத்து அப்படியே கோவில் அதிகாரிகளிடம் ஒப்படைத்து விட்டார். அவர்களும் உற்சவர் உக்ரமாகவும், சக்தி உடையவராகவும் அமைந்து விட்டார் என்று எண் அவரை வணங்க அஞ்சி ஒரு அறையில் வைத்து வெகு நாட்கள் பூட்டி வைத்து விட்டனர். பின்பு அந்த எம்பெருமானின் அருளால் ஒரு முருக பக்தர் வந்து பல் வேறு பூஜைகள் சாந்திகள் செய்து முத்துக் குமார சுவாமியின் உக்ரத்தை குறைத்த பின் மீண்டும் அவரை வழிபடத் தொடங்கினர். இன்றும் முத்து குமார சுவாமியின் உடம்பு முழுவதும் முத்துக்களாக இருப்பதையும், வலது கண் அப்படியே முழுமை பெறாமல் இருப்பதையும் இன்றும் நாம் காணலாம். தாயார் இருவரும் அவ்வாறே சிறு சிறு முத்துக்களுடன் விளங்குவதையும் காணலாம். எனவே மூலவரைப் போலவே இத்தலத்தில் உற்சவரும் சிறப்பு வாய்ந்தவர்.திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள், கச்சி வரதராஜப்பெருமாள்கள் ஆகியோரின் திருமுக மண்டலங்களில் முத்துக்கள் உள்ளது போல அந்த மால் மருகன் முகத்திலும் முத்துக்கள், எனவே அந்த அழகன் முருகனை தங்கக் கவசம் பூட்டி பாதுகாக்கின்றனர் இத்தலத்தில், கந்த வேளுக்கு வருடத்தில் ஒன்பது நாட்கள் மட்டுமே முழு அபிஷேகம் மற்ற நாட்களில் ஐயனின் பாதங்களில் மட்டும் பன்னீர் அபிஷேகம் செய்யப்படுகின்றது.
இக்கோவிலைப் பற்றி கூறும் போது திருஅருட்பிரகாச வள்ளலார் சுவாமிகளைப் பற்றி கூறாமல் இருக்க முடியாது. வள்ளலார் சுவாமிகளுக்கு அந்த ஞானத்தை அளித்தவர் தான் கந்த சுவாமி. ஒரு சமயம் வள்ளலார் சுவாமியின் ஆசிரியர் எல்லாவற்றையும் ஆகாது, கூடாது, முடியாது என்று எதிர் மறையாகவே கூறிக்கொண்டிருந்த போது வள்ளலார் எழுந்து ஐயா எதிர் மறையாகவே பேசாமல் நேர் மறையாக உரையாடலாமே என்ற போது ஆசிரியர் எங்கே நீ நேர் மறையாக பாடு என்ற போது பாடிய திருஅருட்பா
ஒருமையுடன் னதுதிரு மலரடி னைக்கின்றஉத்தமர்தம் உறவு வேண்டும்


உள்ளொன்று வைத்து புறமொன்று பேசுவார்

உறவு கலவாமை வேண்டும்

பெருமைபெறு நினது புகழ் பேச வேண்டும்

பொய்மை பேசாதிருக்க வேண்டும்

பெருநெறி பிடித்தொழுக வேண்டும் மதமான

பேய் பிடியாதிருக்க வேண்டும்

மருவுபெண் ஆசையை மறக்க வேண்டும்

உனை மறவாதிருக்க வேண்டும்


மதி வேண்டும் நின்கருணை நிதி வேண்டும்

நோயற்ற வாழ்வு நான் வாழ வேண்டும்


தருமமிகு சென்னையில் கந்த கோட்டத்துள்

வளர் தலமோங்கு கந்த வேளே


தண்முகத் துய்யமணி உன்முகச் சைவ மணி

சண்முகத் தெய்வமணியே.


என்று தெய்வ மணி மாலையில் பாடுகின்றார் வள்ளலார் சுவாமிகள்.
இவ்வளவு புகழ் பெற்று அழகுடனும் அருளுடனும் எழுந்தருளி தைப்பூச பிரம்மோற்சவம் கண்டருளும் முத்துக் குமரனை, கந்தவேளை, கடம்பனை, கார் மயில் வாகனனை வணங்கி நன்மை அடைவோமாக.இவ்வாறு அம்பலத்தாடும் அரசை ஆடையிலே மணந்த மணவாளனை, பொதுவில் நட்டம் நவிலும் நாதனை வேண்டி வள்ளலார் பாடிய இன்னொரு பாடல்


அப்பாநான் வேண்டுதல்கேட் டருள் புரிதல் வேண்டும்
ஆருயிர்கட் கெல்லாம் நான் அன்பு செயல் வேண்டும்
எப்பாரும் எப்பதமும் எங்கணும் நான் சென்றே
எந்தைநின தருட்புகழை இயம்பியிடல் வேண்டும்
செப்பாத மேல் நிலைமேல் சுத்தசிவ மார்க்கம்
திகழ்ந்தோங்க அருட்சோதி செலுத்தியிடல் வேண்டும
தப்பேது நான் செயினும் நீபொறுத்தல் வேண்டும்
தலைவநிணைப் பிரியாத நிலைமையும் வேண் டுவனே.

Sunday, January 20, 2008

தை மாதத்தில் குருபூசத்தில் ஆனந்த நடனம் ஆடீனார்பழனி ஆண்டவர்
நடனம் ஆடீனார் வெகு நாகரீகமாகவே
கனக சபையில் ஆனந்த நடனம் ஆடினார் (நடனம்)

வடகயிலையில் முன்னாள் மாமுனிக்கருள் செய்தபடி
தவறாமல் தில்லைப் பதியில் வந்து தை மாதத்தில்
குரு பூசத்தில் பகல் நேரத்தில்


தாம் ததிகிட தகஜம் தகணம் திரிதோம் தித்ருஜோம்

தகஜம் தரிணம் ததினுஜ தாரம் தத்தனு துது தைய தைய

த்த்கிட தான தக்கிட திடதாம் தத்தோம் திடதோம் என்று

அட்ட திசையும் கிடுகிடுங்க சேடன் தலை நடுங்க
அண்டமதிர கங்கைத்துளி சிதற கொண்டாரடும் கொண்டாட


இட்டமுடனே கோபால கிருஷ்ணன் பாட சடையாட
அரவ படமாட தோளில் தொடியாட தொந்தோமென்று
பல வேகத்தில் தந்தோமென்று


, தில்லையிலே கனக சபை அமைத்து அம்மை சிவகாமியுடன் முதன் முதலில் ஆனந்த தாண்டவம் ஆடிய நாள் தைப்பூசம் ஆகும்,  சிவபெருmaaனின் நெற்றிக் கண்ணிலிருந்து உற்பவித்த பால நேத்ர முருகப்பெருமானுக்கே உரிய சிறப்பான விழாவாக தைப்பூச விழா மிக சிறப்பாக கொண்டாடப்படுகின்றது. குன்று தோறும் குடியிருக்கும் குமரனுக்கு அன்று உண்மையிலேயே கொண்டாட்டம். தமிழகமெங்கும் லட்சக்கணக்கான பக்தர்கள் காவடி சுமந்து கந்தனுக்கு அரோகரா முருகனுக்கு அரோகரா, வேலனுக்கு அரோகரா, வேல் முருகா, வெற்றி வேல் முருகா, என்று ஊனும், உள்ளமும் உருக பாத யாத்திரையாக வந்து முருகனுக்கு அபிஷேகம் செய்து வழிபடும் நாள். 

முருகப்பெருமான் பார்வதியிடம் வேல் வாங்கிய நாள், முருகப்பெருமான் வள்ளி நாயகியை மணந்த நாள் என்று பல்வேறு ஐதீகங்களால் தைப்பூசம் முருகன் திருத்தலங்களில் கொண்டாடப்படுகின்றது. தட்சன் நடத்திய முறையற்ற யாகத்தில் கலந்து கொண்டதற்காக தேவர்கள் எல்லாம் சூரபத்மனின் மூலம் துன்பப்பட்டுக் கொண்டிருந்து போது , தேவ குரு வியாழ பகவானின் அறிவுறையின் பேரில் மத்தமும் மதியமும் அணியும் அரன் மகன் அழகன் முருகனிடம் என்று தங்கள் குறையை முறையிட்ட நாள் என்பாரும் உண்டு. பின் ஏறு ஊர்வார் ஏறு ஸ்கந்தப் பெருமான் சூரர்களை அழித்து சகலருக்கும் அருள் பாலித்தார். அது போல இந்நாள் நாமும் நம் குறைகளை அந்த ஞான தண்டாயுத சுவாமியின் திருப்பாதங்களில் சம்ர்பிக்க அவர் அவற்றை நீக்கி அருளுவார் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

பழனி, மருதமலை முதலிய தலங்களில் திருத்தேரோட்டம் நடை பெறும் நாள். எண்கண் தலத்திலே 10 நாள் பிரம்மோற்சவம், தைப்பூசத்தன்று தீர்த்தவாரி , ஆறுமுகப் பெருமானின் சபா அபிஷேகமும் காணக்கிடைக்கும் இன்று. வாடிய பயிரைக் கண்டபோது வாடினேன் என்று ஜீவ காருண்யத்திற்கு இலக்கணமாக திகழ்ந்த வள்ளலார் அந்த அருட் பெருஞ்ஜோதியுடன் ஜோதியாக கலந்த நாள். வடலூரிலே ஏழு திரை விலக்கி ஜோதி தரிசனம் காணும் நாள். இந்த மானுட வாழ்வின் நோக்கம் அந்த ஜோதி வடிவான இறைவனுடன் நாமும் நமது மலங்களை ஒழித்து ஜோதியாக சேர வேண்டும் என்பதை உணர்த்தும் நாள். திருவிடை மருதூரிலே மஹாலிங்கேஸ்வரர் பத்து நாள் பெருவிழாக் கண்டருளி காவிரியில் தைப்பூசத்தன்று தீர்த்தவாரி கண்டருளுகின்றார்.


இராஜ அலங்காரத்தில் ஞான தண்டாயுதபாணி சுவாமி
பழனி, குன்றக்குடி, திருப்புடை மருது‘ர், காஞ்சிபுரம், திருநெல்வேலி, மதுரை, திருப்பரங்குன்றம் முதலிய தலங்களில் தைப்பூச பெருவிழா சிறப்பாக நடைபெறுகின்றது. திருநெல்வேலியிலே தாமிர சபா நடனம் தந்தருளுகின்றார் ஆடல் வல்லான். கருமாரியாக சுயம்புவாக எழுந்தருளி அம்மை அருள் புரியும் திருவேற்காட்டிலே அம்மனுக்கு பிரம்மோற்சவமும், தெப்ப உற்சவமும் தைப்பூசத்தை ஒட்டித்தான். அங்கயற்கண் அம்மை உடனுறை ஆலவாய் அண்ணல் எழுந்தருளி அருள் பாலிக்கும் மதுரையில் பத்து நாள் உற்சவம் இத்திருவிழாவிலே சொக்க நாதப்பெருமான் வலை வீசி மீன் பிடித்த லீலை, நாட்கதிரறுப்பு விழா முதலியன கண்டருளி தைப்பூசத்தன்று வண்டியூர் எழுந்தருளிப்போற்சவம் கண்டருளுகிறார். திருமயிலையில் கபாலீஸ்வரர் திருக்கோவில், சைதை காரஸ்வரர் திருக்கோவில், குன்றக்குடி , திருப்புடை மருதூர் முதலிய தலங்களில் தெப்போற்சவம் நடை பெறுகின்றது

பெரிய தங்க மயில் வாகன சேவை

ஞானப்பழம் கிடைக்காத கோபத்தில் கோபம் கொண்டு கார்த்திகேயன் வந்த தலமான திருஆவினன்குடியின் திருவிழாக்கள் இரண்டு ஒன்று தைப்பூசம் , பக்தர்களின் நடைப்பயணத்திற்க்கு புகழ் பெற்றது. இரண்டாவது பங்குனி உத்திரம் முருகனுக்கு விருப்பமான காவடிக்கு பேர் போன விழா. பழனியில் தைப்பூசம் பத்து நாள் விழாவாகக் கொண்டாடப்படுகின்றது. உற்சவத்தின் முதல் நாள் காலை பெரிய நாயகி அம்மன் ஆலயத்தில் கொடியேற்றம். வேல் மயில் வளர் பிறை வரையப்பட்ட மஞ்சள் கொடி ஏற்றப்படுகின்றது. உச்சிக் காலத்தில் மலைக் கோவிலில் காப்புக்கட்டுதல். திருவிழா நாட்களில் தினமும் அதிகாலை 4 மணிக்கு விஸ்வரூப தரிசனம் , விளா பூஜை மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற்கின்றன. மாலையில் வெள்ளி ஆட்டுக்கிடா, வெள்ளிக் காமதேனு,புதுச்சேரி சப்பரம், பெரிய த்ந்தப் பல்லக்கு, பெரிய தங்க மயில் வாகனம் என்று வாகன சேவை தந்தருளுகின்றார் முத்துக்குமார சுவாமி. ஆறாம் நாள் மாலை இரவு 7.30 மணிக்கு வள்ளி, தெய்வநாயகி, முத்துகுமார சுவாமி திருக்கல்யாணம், பின் வெள்ளித் தேரோட்டம், ஏழாம் நாள் தைப்பூசத்தன்று மஹா தேரோட்டம். காலை 11 மணிக்கு முத்துகுமார சுவாமி திருத்தேரில் எழுந்தருளல், மாலை 4.30 மணிக்கு திருத்தேர் வடம் பிடித்தல், நான்கு வீதிகளில் தேரோட்டம். பத்தாம் நாளன்று அதிகாலை 5 மணிக்கு சண்முக நதியில் தீர்த்தவாரி, இரவு 7 மணிக்கு பெரிய நாயகி அம்மன் கோவில் அருகே உள்ள தெப்பத்தில் தெப்பத்தேர் நிகழ்ச்சி என்று பழனியிலே தைப்பூசம் சிறப்பாக கொண்டாதப்படுகின்றது. தைப்பூசத்தின் போது முருகனைக் காண நடந்து வரும் பக்தர்கள் இலடச்சக்கணக்கானோர்.

தைப்பூச தேர்

புலம் பெயர்ந்த தமிழர்களாலும் தங்கள் இஷ்டதெய்வத்தை மறக்க முடியவில்லை. வாழ வந்த இடத்தில் கூட மறக்கவில்லை முருகா! வடிவேலன் துணை இல்லாமல் சிறல்லவில்லை முருகா என்று சிங்கப்ப்பூர், மலேசிய. மொரீஷிய தமிழர்கள் (சீனர்களும் கூட) பத்தினி இருவரை விட்டுவிட்டு பாய்மரக் கப்பலில் வந்த முருகனுக்காக காவடி எடுத்தும், அலகு குத்தியும் கொண்டாடும் தைப்பூச திருநாளில் தமிழெடுத்து அருணகிரி நாதர் அருளிய ஒரு திருப்புகழைப் பாடி மகிழ்வோம்.

நாத விந்துக லாதீந மோநம
வேத மந்த்ரசொ ரூபாந மோநம
ஞான பண்டித சாமீந மோநம
வெகுகோடிநாம சம்புகு மாராந மோநம
போக அந்தரி பாலாந மோநம
நாக பந்தம யூராந மோநம
பரசூராசேத தண்டவி நோதாந் மோநம
கீத கிண்கிணி பாதாந மோநம
தீர சம்ப்ரம வீராந மோநம
கிரிராசதீப மங்கள சோதீந மோநம
தூய அம்பல லீலாந மோநம
தேவகுஞ்சரி பாகாந மோநம
அருள் தாராய்ஈத லும்பல கோலால பூசையும்
ஓத லுங்குண ஆசார நீதியும்
ஈர முங்குரு சீர்பாத சேவையு
மறவாதஏழ்த லம்புகழ் காவேரி யால்விளை
சோழ மண்டல மீதேம னோகர
ராச கெம்பிர நாடாளு நாயக
வயலூராஆத ரம்பயி லாரூரர் தோழமை
சேர்தல் கொண்டவ ரோடேமுன் நாளினில்
ஆடல் வெம்பரி மீதேறி மாகயி
லையேகி


ஆதி யந்தவு லாவாசு பாடிய
சேரர் கொங்குவை காவூர்நன் நாடதில்
ஆவி னன் குடி வாழ்வான தேவர்கள்
பெருமாளே.


வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா!