Thursday, October 31, 2019

இமயமலையில் ஒரு இனிய யாத்திரை – 67சென்னை விமான நிலையத்தில்

இவ்வருடம் சென்னையிலிருந்து 25 அன்பர்களும், பெங்களூரிலிருந்து 15 அன்பர்களுமாக மொத்தம் 40 அன்பர்கள் யாத்திரை மேற்கொண்டோம். மூன்று மாதங்களுக்கு முன்பாகவே   டில்லி சென்று வர விமான சீட்டு, கேதார்நாத்திற்கு செல்ல ஹெலிகாப்டர்  சீட்டு மற்றும் பத்ரிநாத்தில் மாலை விஷ்ணு சஹஸ்ரநாமம் ஆகியவற்றுக்கான முன்பதிவை முடித்துக்கொண்டோம். வழக்கம் போல் சென்னையிலிருந்து டில்லி விமானம் மூலம் சென்று அங்கிருந்து டேராடூன் ஜன்சதாப்தி இரயில் மூலம் ஹரித்வாரை அடைந்தோம். முன்பு ஒரு முறை பௌர்ணமியன்று ஹரித்வாரை அடைந்தது போல இவ்வருடமும் அமைந்தது. குளிர் நிலவும், குளிர் தட்பவெப்பமும் எங்களை வரவேற்றது. இரயில் நிலையத்திலிருந்து பேருந்து மூலம், ஹரித்வாரத்தில் உள்ள மத்வாஸ்ரமத்தில் தங்கினோம். இரவில் கங்கையில் தீர்த்தமாடினோம்.


சென்னை விமான நிலைய சர்வதேச முனையத்தின் சில சிலைகள்இவ்வருடம் மழைக் காலம் நீடித்தால் பத்ரிநாத் செல்லும் வழியில் சில நிலச்சரிவுகள் ஏற்பட்டதை அறிந்திருந்தோம். மேலும் ஒரு வாரம் முன்பு கோவிந்காட் என்ற இடத்தில் ஒரே சமயத்தில் அதிக மழை கொட்டியதால் வாகனங்களுக்கு பெருத்த சேதம் ஏற்பட்டது என்றும் படித்திருந்தோம். எனவே எப்படி அவர் நமக்கு அளிக்கின்றாறோ அதை ஏற்றுக் கொள்வோம் என்ற மன நிலையுடன்தான் யாத்திரைக்குப் புறப்பட்டோம்.

                                  தில்லி விமானப்பயணம்

தில்லி விமான நிலையத்தில் முத்திரைகள் 

பத்ரிநாத் செல்ல அடியோங்கள் வண்டிகளுக்கு முன் பதிவு செய்திருந்த வாகன ஏற்பாட்டாளர், கடைசி நேரத்தில் நிலச்சரிவின் காரணமாக பத்ரிநாத்தில் சில வண்டிகள் சிக்கிக்கொண்டன, முன்னர் கூறியது போல சிற்றுந்துகள் அளிக்க முடியாது, வேண்டுமென்றால்  40 பேர் செல்லக்கூடிய பெரிய பேருந்து தருகிறேன் என்று கையை விரித்தார்மலை பிரதேசத்தில் பெரிய வண்டிகளில் செல்வதை விட சிறிய வண்டிகளில் செல்வதே உத்தம்மானது என்பதால் வேறு வாகன ஏற்பாட்டாளர்களுடன் பேசி நான்கு சிறு வண்டிகளை வாடகைக்கு அமர்த்திக் கொண்டு புறப்பட்ட போதே சுமார் இரண்டு மணி நேரம் காலதாமதமாகி விட்டது. மேலும் வழியிலும் கால தாமதம் ஏற்பட்டது. பிரதம மந்திரியின் கனவுத்திட்டமான சார்தாம் பாதைகளை அகலப்படுத்தும் பணிகள் முழு வீச்சில் நடந்து கொண்டிருந்ததால் பல இடங்களில் நின்று  செல்ல வேண்டி இருந்தது.


 

 ஹரித்வாருக்கு புகை வண்டிப்பயணம்


இப்பணிகளைப் பற்றிய சிறு விவரம், இமயமலையில் தேவபூமியான ரிஷிகேசில் இருந்து பத்ரிநாத் வரை மலைகளை குடைந்து சுமார் 900 கிலோமீட்டர் தூரத்திற்கு  பூகம்பங்களையும் தாங்கும் வகையில் அமைக்க போகும் இருவழி சாலைகள்தான் மிக முக்கியமானது. இந்து மதத்திற்கும் இமயமலைக்கும் உள்ள தொடர்பு இந்த உலகம் தோன்றிய காலத்தில் இருந்தே இருக்க வேண்டும். ஏனென்றால் இமயமலையில்  காற்று ஒலித்துக் கொண்டிருக்கும் ஓம் என்கிற சத்தத்தை விட அங்கு செல்லும் மக்கள் ஒலிக்கும் ஹர ஹர மகாதேவா என்கிற சத்தம்தான் காற்றின் ஒலியையும் கட்டுப்படுத்திக் கொண்டு இருக்கிறது.


முழு நிலவன்று கங்கையின் கரையில்

ஹரித்வார் புகைவண்டி நிலையத்தில் உள்ள சிவன் சிலை

மத்வாஸ்ரமத்தில்


இந்த ஹர ஹர மகாதேவா கோஷம் இமயமலையில் மட்டுமல்ல அது இந்தியா முழுவதும் இனி கேட்க வேண்டும் அதற்கு நிறைய பக்தர்களை வரவழைக்க வேண்டும் என்று நினைத்த பிரதமர்,  உத்தரகாண்ட்  மாநிலத்தில் இமயமலையில் இந்துக்கள் மேற்கொள்ளும் சார்தாம் யாத்திரையை ஊக்குவிக்க ரிசிகேசில் இருந்து இந்தியாவின் கடைசி கிராமமான மானா வரைக்கும் அனைத்து சீதோசன நிலைகளையும் தாங்கும் வண்ணம் சுமார் 900 கிலோமீட்டர் தூரத்திற்கு  இருவழி சாலைகளை 12,000 கோடி ரூபாய் செலவில் அமைக்க உள்ளார்.

கண்டம் என்னும் கடிநகர் புருஷோத்தமர் ஆலயம் 


மூன்று வருடங்களுக்கு முன் உத்தரகாண்ட்டில் பெய்த கனமழையினால் வெள்ளம் வந்த பொழுது  இந்த சார்தாம் யாத்திரைக்கு வந்த பக்தர்கள் 5000 க்கும் மேற்ப்பட்டவர்கள் நிலச்சரிவில் சிக்கி இறந்துபோனார்கள் அல்லவா. அந்த நிலை மீண்டும் வரக்கூடாது என்று மத்திய அரசு நினைத்து அதற்கான செயல் திட்டங்களில் இறங்கியது.

இதற்காக 13 பைபாஸ் ரோடுகளை மறு சீரமைத்து 2 சுரங்கப்பாதைகளை அமைத்து 25 பாலங்களை உருவாக்கி 3 மேம்பாலங்களை கட்டி 154 பேருந்து  நிறுத்தங்களை ஏற்படுத்தி மக்களின் யாத்திரை பயணத்தை பாதுகாப்பாக்கி இமயமலையெங்கும் 11,000 அடி உயரத்தில் ஹர ஹர மகாதேவா என்கிற மனித உயிரின் ஆத்ம ஒலியை ஒலிக்க இருக்கிறது  அரசு. இதற்கான துவக்க விழா இன்று ஆரம்பித்தது. 7 பகுதிகளாக நடைபெறும் இந்த வேலை இன்னும் மூன்று ஆண்டுகளில் முடிந்துவிட திட்டமிட்டிருக்கின்றனர்.


                                                                                                                                                                                                                                                                                                                                                         யாத்திரை தொடரும் .....


Sunday, October 27, 2019

இமயமலையில் ஒரு இனிய யாத்திரை – 66

அன்பர்கள் அனைவருக்கும் இனிய தீபாவளித் திருநாள்(2019) நல்வாழ்த்துக்கள். இந்நன்னாளில் இயமமலையின் இன்னொரு யாத்திரையின் விவரங்களுடன் தங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி.திருக்கேதாரம்

இன்றைய தினம் கேதார கௌரி விரத தினம் ஆகும், பல அன்பர்கள் இந்நோன்பை நோற்கின்றனர் . அனைவருக்கும் கௌரி அம்மன் அருள் வழங்க பிரார்த்தனை செய்கின்றேன்.  கேதார கௌரி விரதம் பற்றியை பதிவைப் படிக்க இங்கு செல்லவும்.  கேதார கௌரி விரதம்பத்ரிநாதம்


என்ன ஐயா மறுபடியும் ஒரு பயணமா? என்று உங்கள் மனதில் ஒரு வினா எழுவது புரிகின்றது. ஆயினும் முன்னமே பல முறை கூறியது போல இமயமலை ஒரு காந்தம் ஒரு முறை சென்றவர்களை பல முறை தன் பக்கம் ஈர்க்கும் என்பதில் எந்தவித ஐயமும் தேவையில்லை என்பதற்கு அடியேனே ஒரு சான்று. பார்த்த இடத்தையே மறுபடியும் மறுபடியும் பார்ப்பதால் என்ன பலன் என்றும் தோன்றலாம். ஒவ்வொரு தடவையும் ஒரு புது அனுபவம் கிட்டுவது மட்டுமல்லாமல் புதுப் புது தலங்களையும் தரிசிக்கும் வாய்ப்பும் கிட்டுகின்றது. 40 வருடங்களுக்கு மேலாகச் செல்லும் திருமயிலை கபாலீச்சரத்தில், கற்பகாம்பாள் சன்னதியின் கூரையில் உள்ள சிற்பத்தை இவ்வருடம்தான் பார்க்க கிட்டியது. எப்போதும் அம்மன் சன்னதிக்குள் நுழையும் போது இன்று அம்மன் எவ்வாறு அருட்காட்சி தருகின்றாள் என்ற நினைவாகவே உள்ளே செல்வோம் எனவே கூரையைப் பார்க்கவே இல்லை, இத்தடவை அம்மன் சன்னதியில் அம்மனுக்கு புடவை சாத்துவதற்காக திரையிடப்பட்டிருந்ததால் பார்வை கூரையில் சென்றது. அடிக்கடி செல்லும் ஆலயத்திலேயே இப்படி என்றால் எப்போதே செல்லும் ஆலயங்களில் புதிது புதிதாக நான் காணவேண்டியவை நிறைய உள்ளன.


ஊக்கிமத் ஓங்காரேஸ்வரர் ஆலயம்


ஆகவே இத்தடவை புதிதாக எத்தலங்களுக்கு சென்றீர்கள் என்று கேட்கத்தோன்றுகிறதா? இவ்வருடம் திருக்கேதாரம் மற்றும் பத்ரிநாத் தரிசனம் செய்ய திட்டம், சமயம் கிட்டும் போது பஞ்ச கேதாரங்களில் ஒன்றான பாரத கண்டத்தின் மிகவும் உயரமான சிவத்தலமான துங்கநாத் செல்லவும் அவனை வேண்டிக்கொண்டோம். இவ்வருடம்  செப்டெம்பர் மாதத்திலும் மழை பெய்து கொண்டுதான் இருந்தது. ஆயினும் அவனருளால் இம்மூன்று தலங்களை தரிசித்தது மட்டும் அல்லாமல்   திருக்கேதாரம் செல்லும் வழியில் உள்ள அகத்திய முனிவர் தவம் செய்த அகஸ்தியமுனி ஆலயத்தை தரிசித்தோம்புதிதாக கட்டப்பட்டுள்ள ஜோதிர்மட் நரசிம்மர் ஆலயத்தை தரிசித்தோம், ஜோதிர்மடத்தில் ஆதி சங்கரர் திருக்கயிலாயத்தில் இருந்து கொண்டு வந்து ஸ்தாபிதம் செய்த ஸ்படிக லிங்க தரிசனமும் கிட்டியது. மேலும் பஞ்ச பத்ரிகளில் ஒன்றான யோக பத்ரியையும் தரிசித்தோம். மேலும் பனிச் சறுக்கு விளையாட்டிற்கு புகழ் பெற்ற அவுலி நகருக்கும் உயரமான இழுவை கார்  மூலம்  சென்று வந்தோம்.பனி படர்ந்த சிகரங்கள்

இனி இவ்வருட யாத்திரைகான அனைத்து ஏற்பாடுகளையும் பெங்களூரைச் சார்ந்த திரு.தேஷ்பாண்டே அவர்கள் கவனித்துக்கொண்டார்கள். சென்ற தடவை 2016ல் கேதார்நாத் மற்றும் பத்ரிநாத் சென்றோம். அடுத்த வருடம் யாரும் யாத்திரை செல்லவில்லை. சென்ற வருடம் சிலர் பத்ரிநாத் மற்றும் சென்று வந்தனர்அடியேனால் சென்ற வருடம் செல்ல இயலவில்லை. சென்ற வருடம் சென்ற பல அன்பர்கள்   இவ்வருடம் கேதார்நாத் செல்ல விழைந்தனர் எனவே இவ்வருடம் கேதாரத்துடன் துங்கநாத்தும் செல்ல திட்டமிடப்பட்டது. அடியோங்கள் சென்ற சமயம் பித்ரு பக்ஷம் என்பதால் அவர்களுக்கான கடமையையும் பத்ரிநாத்தில் செய்யும் பாக்கியம் கிட்டியது.


துங்கநாத் ஆலயம்


ஜோஷிர்மடம் நூதன ஆலயம்

யோக பத்ரி - பாண்டுகேஷ்வர்   பத்ரிநாத்தில் இராமானுஜர் 


பத்ரிநாதம் - மின்னொளியில்  


ஆதி சங்கரர் திருக்கயிலையிலிருந்து கொணர்ந்த ஸ்படிக லிங்கம்


 அவுலி பயணம் 

ஹரித்வார்


யாத்திரைக்கான திட்டம் இவ்வாறு இருந்தது. 14.09.2019 சென்னையிலிருந்து விமானம் மூலம் கிளம்பி டெல்லி சென்று அன்றைய தினமே டேராடூன் சதாப்தி  இரயில்  மூலம் ஹரித்வார் அடைந்து பின்னர் அங்கிருந்து வண்டி மூலம் முதலில் திருக்கேதாரம், பின்னர் துங்கநாத் மலையேற்றம்,  தரிசனம். அடுத்து ஜோஷிர்மடம் தரிசனம், பின்னர் பத்ரிநாதர்  தரிசனம் என்று திட்டமிட்டிருந்தோம், சிறு மாறுதல்கள் தேவைப்பட்டது ஆனால் திட்டமிட்டபடி 22-09-2019 அன்று யாத்திரை சுபமாக முடிந்தது அவர் கருணையே. வாருங்கள் அன்பர்களே அடியேனுடன். 

KEDARNATH / BADRINATH PROGRAM SCHEDULE
S.No. DATE DAY FROM TO MODE FLIGHT/TRAIN NUMBER DEP ARR REMARKS
1 14-09-2019 SATURDAY CHENNAI DELHI FLIGHT AI 143 - AIR INDIA 0840 HRS 1135 HRS Darshan at Krishna Mandir and Have prasadam and Leave to New Delhi Railway Station.

2 14-09-2019 SATURDAY CHENNAI DELHI FLIGHT AI 440 - AIR INDIA 0610 HRS 0855 HRS

3 14-09-2019 SATURDAY BANGALORE DELHI FLIGHT 6E 2367 - INDIGO 0830 HRS 1120 HRS

4 14-09-2019 SATURDAY MUMBAI DELHI FLIGHT AI 833 - AIR INDIA 0900 HRS 1130 HRS

5 14-09-2019 SATURDAY NEW DELHI HARIDWAR TRAIN 12055 - JANSHATABDI EXP C2 36,37 & 60 TO 66 1520 HRS 1950 HRS Ganga Snan & Rest at Madhava Ashram, Haridwar

6 15-09-2019 SUNDAY HARIDWAR KEDARNATH BASE CAMP TT TRAVEL FROM HARIDWAR TO KEDARNATH 0600 HRS 1800 HRS On the way, Ganga Snan & Darshan at Dev Prayag (Kandam enum Kadinagaram, Divyadarsanam,Ancient Rama Temple.) Halt at Base Camp i.e. Gupt Kashi / FATA / Visit Gupt Kashi, Ukhimath Temple

7 16-09-2019 MONDAY KEDARNATH TT Darshan at Kedarnath Temple 0500 HRS 1600 HRS Early morning Chopper to Kedarnath and back / Visit Gupt Kashi, Ukhimath Temple

8 16-09-2019 MONDAY BASE CAMP CHAMOLI TT 1600 HRS 2000 HRS Night Halt at Chamoli

9 17-09-2019 TUESDAY CHAMOLI TUNGNATH TREK Trek and Darshan at Tungnath Temple (One of Panch Kedar) (Optional) 0600 HRS 1500 HRS Trekking for Tungnath & back to Chamoli for 3+2 hours - 3kms

10 17-09-2019 TUESDAY CHAMOLI JOSHIMUTT TT Darshan at Gopeshwar Temple on the way 1500 HRS 2000 HRS Night Halt at Joshi Mutt

11 18-09-2019 WEDNESDAY JOSHI MUTT BADRINATH TT JOSHI MUTT POOJA, BADRINATH DARSHAN 0900 HRS 1400 HRS Morning Pooja at Joshi Mutt (Thiruprithi, Divyadesam), Proceed to Badrinath, Darshan and Halt at Ananth Mutt.

12 19-09-2019 THURSDAY BADRINATH TT BADRINATH, MANA AND EKADASHI GUFA 0800 HRS 1900 HRS In and around Badrinath

13 20-09-2019 FRIDAY BADRINATH HARIDWAR TT 0630 HRS 1900 HRS Halt at Madhava Ashram, Haridwar.

14 21-09-2019 SATURDAY HARIDWAR TT LOCAL TRIP HARIDWAR, RISHIKESH, AARTI DARSHAN 0800 HRS 1900 HRS Local Trip to temples

15 21-09-2019 SATURDAY HARIDWAR DELHI TRAIN 14042 - MUSSORIE EXP B1 9,23,24,35,37,38,40,45,46 2245 HRS 0700 HRS Arrival at Delhi

16 22-09-2019 SUNDAY DELHI LOCAL SIGHT SEEING 0900 HRS 1500 HRS OWN ARRANGEMENT

17 22-09-2019 SUNDAY DELHI CHENNAI FLIGHT AI 42 - AIR INDIA 1720 HRS 2000 HRS

18 22-09-2019 SUNDAY DELHI BANGALORE FLIGHT SG 197 - SPICEJET 1725 HRS 2015 HRS


இப்பதிவில் யாத்திரையின் அனைத்து தலங்களின் முக்கிய படங்கள் இடம் பெற்றுள்ளன.  தொடர்ந்து வாருங்கள் அன்பர்களே.

நாளை முதல் கந்தர் சஷ்டி அனைத்து சுப்பிரமணிய தலங்களிலும் துவங்குகின்றது. கந்தன் கருணை அனைவருக்கும் கிட்ட பிரார்த்தனை செய்கின்றேன்.

யாத்திரை தொடரும் .....