Monday, October 14, 2019

சித்திரைப் பெருவிழாக்கள் 2019 - 10

கோசை என்றழைக்கப்படும் கோயம்பேடு ஆலயத்தின் பிரம்மோற்சவத்தின் ஆறாம் நாள் மாலை குதிரை வாகன சேவை காட்சிகள் மற்றும் சூர சம்ஹாரத்தன்று முருகன் கோலம் இப்பதிவில் இடம் பெறுகின்றது. 




குதிரை வாகனத்தில் குறுங்காலீஸ்வரர்


வெளிப்பிரகாரத்தில்  அம்மன் சன்னதிக்கு எதிராக நான்கு கால் ஊஞ்சல் மண்டபம்.  இம்மண்டபத்தின் தூண்களிலும் அருமையான சிற்பங்கள் அமைந்துள்ளன. நந்தவனம்கோசாலைகன்னி மூலையில் வில்வ விநாயகர்மடப்பள்ளிதல மரங்களான  மாபலா அமைந்துள்ளன. 





குதிரை வாகனத்தில் சூர சம்ஹார கோலத்தில் முருகர் 




அருகில்  கனகவல்லி தாயார் சமேத வைகுண்ட வாசப் பெருமாள்  ஆலயம் அமைந்துள்ளது. இவ்வாலயத்தில்   குசனும் லவனும் அருகில் இருக்க .வால்மீகி முனிவர்   தவம் இருக்கும்  ஒரு சிலா   விக்கிரகம்   உள்ளது.  இதன் அருகிலேயே  கர்ப்பவதியாக  சீதை நின்று கொண்டிருக்கும்  மற்றொரு சிலா விக்கிரகமும் காணப்படுகிறது. மேலும் இராமன் இலக்குவன் மற்றும் அனுமன் இல்லாமல் சீதாதேவியுடன் அருள் பாலிக்கின்றார். இராமர் மரவுரியுடனும்சீதா தேவி கோடாலிக் கொண்டையுடனும் உற்சவர்களாக எழுந்தருளியுள்ளது ஒரு சிறப்பு.


வால்மீகி முனிவர் தவம், சீதை கானகம் அடைதல், லவ குசர்கள் ஜனனம்,  அஸ்வமேத குதிரையை பிடித்து செல்லும் சுதைச் சிற்பங்கள்.



மேலும் இக்கோவிலின் பிராகாரத்தில் இரண்டு வில்வ மரங்களுக்கு இடையில் ஒரு வேப்பமரம் பின்னிப் பிணைந்து வளர்ந்திருக்கிறது. வேப்பமரம், பார்வதி. வில்வமரங்கள் சிவனும் விஷ்ணுவும், அதாவது விஷ்ணு தன் தங்கையை சிவனுக்குத் திருமணம் செய்து கொடுத்ததையே இந்த மரங்கள் மெய்ப்பிப்பதாக நம்பிக்கை. திருமணத்திற்கும் குழந்தைப் பேற்றிற்கும் இங்கே பக்தர்கள் பிரார்த்தனை செய்கிறார்கள். பக்தர்கள் இம்மரங்களை ஸ்வயம்வர பார்வதி என்று வழிபடுகின்றனர்.

தல தீர்த்தம்: லவகுச தீர்த்தம். இரண்டு ஆலயங்களுக்கும் பொது.  சித்ரா பௌர்ணமி, வைகாசி விசாகம், ஆனி பிரம்மோற்சவம், ஆடிப் பூரம், நவராத்திரி, கார்த்திகை தீபம், மாசி மகம் உள்ளிட்ட பல திருவிழாக்கள் இத்திருத்தலத்தில் கோலாகலமாகக் கொண்டாடப்படுகின்றன.

சமயம் கிடைக்கும் போது வந்து அறம் வளர்த்த நாயகி   உடனுறை   குறுங்காலீஸ்வரரையும்,   கனகவல்லி உடனுறை வைகுண்டவாச பெருமாளையும் தரிசியுங்கள். 


No comments: