Sunday, October 27, 2019

இமயமலையில் ஒரு இனிய யாத்திரை – 66

அன்பர்கள் அனைவருக்கும் இனிய தீபாவளித் திருநாள்(2019) நல்வாழ்த்துக்கள். இந்நன்னாளில் இயமமலையின் இன்னொரு யாத்திரையின் விவரங்களுடன் தங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி.



திருக்கேதாரம்

இன்றைய தினம் கேதார கௌரி விரத தினம் ஆகும், பல அன்பர்கள் இந்நோன்பை நோற்கின்றனர் . அனைவருக்கும் கௌரி அம்மன் அருள் வழங்க பிரார்த்தனை செய்கின்றேன்.  கேதார கௌரி விரதம் பற்றியை பதிவைப் படிக்க இங்கு செல்லவும்.  கேதார கௌரி விரதம்



பத்ரிநாதம்


என்ன ஐயா மறுபடியும் ஒரு பயணமா? என்று உங்கள் மனதில் ஒரு வினா எழுவது புரிகின்றது. ஆயினும் முன்னமே பல முறை கூறியது போல இமயமலை ஒரு காந்தம் ஒரு முறை சென்றவர்களை பல முறை தன் பக்கம் ஈர்க்கும் என்பதில் எந்தவித ஐயமும் தேவையில்லை என்பதற்கு அடியேனே ஒரு சான்று. பார்த்த இடத்தையே மறுபடியும் மறுபடியும் பார்ப்பதால் என்ன பலன் என்றும் தோன்றலாம். ஒவ்வொரு தடவையும் ஒரு புது அனுபவம் கிட்டுவது மட்டுமல்லாமல் புதுப் புது தலங்களையும் தரிசிக்கும் வாய்ப்பும் கிட்டுகின்றது. 40 வருடங்களுக்கு மேலாகச் செல்லும் திருமயிலை கபாலீச்சரத்தில், கற்பகாம்பாள் சன்னதியின் கூரையில் உள்ள சிற்பத்தை இவ்வருடம்தான் பார்க்க கிட்டியது. எப்போதும் அம்மன் சன்னதிக்குள் நுழையும் போது இன்று அம்மன் எவ்வாறு அருட்காட்சி தருகின்றாள் என்ற நினைவாகவே உள்ளே செல்வோம் எனவே கூரையைப் பார்க்கவே இல்லை, இத்தடவை அம்மன் சன்னதியில் அம்மனுக்கு புடவை சாத்துவதற்காக திரையிடப்பட்டிருந்ததால் பார்வை கூரையில் சென்றது. அடிக்கடி செல்லும் ஆலயத்திலேயே இப்படி என்றால் எப்போதே செல்லும் ஆலயங்களில் புதிது புதிதாக நான் காணவேண்டியவை நிறைய உள்ளன.


ஊக்கிமத் ஓங்காரேஸ்வரர் ஆலயம்


ஆகவே இத்தடவை புதிதாக எத்தலங்களுக்கு சென்றீர்கள் என்று கேட்கத்தோன்றுகிறதா? இவ்வருடம் திருக்கேதாரம் மற்றும் பத்ரிநாத் தரிசனம் செய்ய திட்டம், சமயம் கிட்டும் போது பஞ்ச கேதாரங்களில் ஒன்றான பாரத கண்டத்தின் மிகவும் உயரமான சிவத்தலமான துங்கநாத் செல்லவும் அவனை வேண்டிக்கொண்டோம். இவ்வருடம்  செப்டெம்பர் மாதத்திலும் மழை பெய்து கொண்டுதான் இருந்தது. ஆயினும் அவனருளால் இம்மூன்று தலங்களை தரிசித்தது மட்டும் அல்லாமல்   திருக்கேதாரம் செல்லும் வழியில் உள்ள அகத்திய முனிவர் தவம் செய்த அகஸ்தியமுனி ஆலயத்தை தரிசித்தோம்புதிதாக கட்டப்பட்டுள்ள ஜோதிர்மட் நரசிம்மர் ஆலயத்தை தரிசித்தோம், ஜோதிர்மடத்தில் ஆதி சங்கரர் திருக்கயிலாயத்தில் இருந்து கொண்டு வந்து ஸ்தாபிதம் செய்த ஸ்படிக லிங்க தரிசனமும் கிட்டியது. மேலும் பஞ்ச பத்ரிகளில் ஒன்றான யோக பத்ரியையும் தரிசித்தோம். மேலும் பனிச் சறுக்கு விளையாட்டிற்கு புகழ் பெற்ற அவுலி நகருக்கும் உயரமான இழுவை கார்  மூலம்  சென்று வந்தோம்.



பனி படர்ந்த சிகரங்கள்

இனி இவ்வருட யாத்திரைகான அனைத்து ஏற்பாடுகளையும் பெங்களூரைச் சார்ந்த திரு.தேஷ்பாண்டே அவர்கள் கவனித்துக்கொண்டார்கள். சென்ற தடவை 2016ல் கேதார்நாத் மற்றும் பத்ரிநாத் சென்றோம். அடுத்த வருடம் யாரும் யாத்திரை செல்லவில்லை. சென்ற வருடம் சிலர் பத்ரிநாத் மற்றும் சென்று வந்தனர்அடியேனால் சென்ற வருடம் செல்ல இயலவில்லை. சென்ற வருடம் சென்ற பல அன்பர்கள்   இவ்வருடம் கேதார்நாத் செல்ல விழைந்தனர் எனவே இவ்வருடம் கேதாரத்துடன் துங்கநாத்தும் செல்ல திட்டமிடப்பட்டது. அடியோங்கள் சென்ற சமயம் பித்ரு பக்ஷம் என்பதால் அவர்களுக்கான கடமையையும் பத்ரிநாத்தில் செய்யும் பாக்கியம் கிட்டியது.






துங்கநாத் ஆலயம்


ஜோஷிர்மடம் நூதன ஆலயம்

யோக பத்ரி - பாண்டுகேஷ்வர்  



 பத்ரிநாத்தில் இராமானுஜர் 


பத்ரிநாதம் - மின்னொளியில்  


ஆதி சங்கரர் திருக்கயிலையிலிருந்து கொணர்ந்த ஸ்படிக லிங்கம்


 அவுலி பயணம் 

ஹரித்வார்


யாத்திரைக்கான திட்டம் இவ்வாறு இருந்தது. 14.09.2019 சென்னையிலிருந்து விமானம் மூலம் கிளம்பி டெல்லி சென்று அன்றைய தினமே டேராடூன் சதாப்தி  இரயில்  மூலம் ஹரித்வார் அடைந்து பின்னர் அங்கிருந்து வண்டி மூலம் முதலில் திருக்கேதாரம், பின்னர் துங்கநாத் மலையேற்றம்,  தரிசனம். அடுத்து ஜோஷிர்மடம் தரிசனம், பின்னர் பத்ரிநாதர்  தரிசனம் என்று திட்டமிட்டிருந்தோம், சிறு மாறுதல்கள் தேவைப்பட்டது ஆனால் திட்டமிட்டபடி 22-09-2019 அன்று யாத்திரை சுபமாக முடிந்தது அவர் கருணையே. வாருங்கள் அன்பர்களே அடியேனுடன். 

KEDARNATH / BADRINATH PROGRAM SCHEDULE
S.No. DATE DAY FROM TO MODE FLIGHT/TRAIN NUMBER DEP ARR REMARKS
1 14-09-2019 SATURDAY CHENNAI DELHI FLIGHT AI 143 - AIR INDIA 0840 HRS 1135 HRS Darshan at Krishna Mandir and Have prasadam and Leave to New Delhi Railway Station.

2 14-09-2019 SATURDAY CHENNAI DELHI FLIGHT AI 440 - AIR INDIA 0610 HRS 0855 HRS

3 14-09-2019 SATURDAY BANGALORE DELHI FLIGHT 6E 2367 - INDIGO 0830 HRS 1120 HRS

4 14-09-2019 SATURDAY MUMBAI DELHI FLIGHT AI 833 - AIR INDIA 0900 HRS 1130 HRS

5 14-09-2019 SATURDAY NEW DELHI HARIDWAR TRAIN 12055 - JANSHATABDI EXP C2 36,37 & 60 TO 66 1520 HRS 1950 HRS Ganga Snan & Rest at Madhava Ashram, Haridwar

6 15-09-2019 SUNDAY HARIDWAR KEDARNATH BASE CAMP TT TRAVEL FROM HARIDWAR TO KEDARNATH 0600 HRS 1800 HRS On the way, Ganga Snan & Darshan at Dev Prayag (Kandam enum Kadinagaram, Divyadarsanam,Ancient Rama Temple.) Halt at Base Camp i.e. Gupt Kashi / FATA / Visit Gupt Kashi, Ukhimath Temple

7 16-09-2019 MONDAY KEDARNATH TT Darshan at Kedarnath Temple 0500 HRS 1600 HRS Early morning Chopper to Kedarnath and back / Visit Gupt Kashi, Ukhimath Temple

8 16-09-2019 MONDAY BASE CAMP CHAMOLI TT 1600 HRS 2000 HRS Night Halt at Chamoli

9 17-09-2019 TUESDAY CHAMOLI TUNGNATH TREK Trek and Darshan at Tungnath Temple (One of Panch Kedar) (Optional) 0600 HRS 1500 HRS Trekking for Tungnath & back to Chamoli for 3+2 hours - 3kms

10 17-09-2019 TUESDAY CHAMOLI JOSHIMUTT TT Darshan at Gopeshwar Temple on the way 1500 HRS 2000 HRS Night Halt at Joshi Mutt

11 18-09-2019 WEDNESDAY JOSHI MUTT BADRINATH TT JOSHI MUTT POOJA, BADRINATH DARSHAN 0900 HRS 1400 HRS Morning Pooja at Joshi Mutt (Thiruprithi, Divyadesam), Proceed to Badrinath, Darshan and Halt at Ananth Mutt.

12 19-09-2019 THURSDAY BADRINATH TT BADRINATH, MANA AND EKADASHI GUFA 0800 HRS 1900 HRS In and around Badrinath

13 20-09-2019 FRIDAY BADRINATH HARIDWAR TT 0630 HRS 1900 HRS Halt at Madhava Ashram, Haridwar.

14 21-09-2019 SATURDAY HARIDWAR TT LOCAL TRIP HARIDWAR, RISHIKESH, AARTI DARSHAN 0800 HRS 1900 HRS Local Trip to temples

15 21-09-2019 SATURDAY HARIDWAR DELHI TRAIN 14042 - MUSSORIE EXP B1 9,23,24,35,37,38,40,45,46 2245 HRS 0700 HRS Arrival at Delhi

16 22-09-2019 SUNDAY DELHI LOCAL SIGHT SEEING 0900 HRS 1500 HRS OWN ARRANGEMENT

17 22-09-2019 SUNDAY DELHI CHENNAI FLIGHT AI 42 - AIR INDIA 1720 HRS 2000 HRS

18 22-09-2019 SUNDAY DELHI BANGALORE FLIGHT SG 197 - SPICEJET 1725 HRS 2015 HRS


இப்பதிவில் யாத்திரையின் அனைத்து தலங்களின் முக்கிய படங்கள் இடம் பெற்றுள்ளன.  தொடர்ந்து வாருங்கள் அன்பர்களே.

நாளை முதல் கந்தர் சஷ்டி அனைத்து சுப்பிரமணிய தலங்களிலும் துவங்குகின்றது. கந்தன் கருணை அனைவருக்கும் கிட்ட பிரார்த்தனை செய்கின்றேன்.

யாத்திரை தொடரும் .....

4 comments:

கோமதி அரசு said...

கேதாரத்துடன் துங்கநாத்தும்//

துங்கநாத் பார்த்தது இல்லை.
மற்ற இடங்கள் தரிசனம் செய்து இருக்கிறோம்.

உங்கள் தொடரை தொடர்கிறேன்.
தரிசனம் செய்ய கொடுத்து வைத்து இருக்க வேண்டும்.
தீபாவளி நல் வாழ்த்துக்கள்.
வாழ்க வளமுடன்.

S.Muruganandam said...

மிக்க நன்றி. தொடர்ந்து வாருங்கள். பல புதிய செய்திகளை பகிர்ந்து கொள்கிறேன். தங்களுக்கும் இனிய தீபாவளி நல்வாழத்துக்கள்.

வெங்கட் நாகராஜ் said...

நல்லதொரு பயணம். பயணம் நல்லது! ஆதலினால் பயணம் செய்வோம்.

படங்கள் சிறப்பாக இருக்கின்றன.

S.Muruganandam said...

//ஆதலினால் பயணம் செய்வோம்.// உண்மை ஐயா.

மிக்க நன்றி. தொடர்ந்து வாருங்கள். சமயம் கிடைத்தால் திருக்கயிலாய யாத்திரையைப் பற்றியும் படியுங்கள் ஐயா.

https://kailashi.blogspot.com/2019/10/1.html