Sunday, September 28, 2014

நவராத்திரி நாயகி - 7

திருமயிலை கற்பகாம்பாள் சரஸ்வதி அலங்காரம் சரஸ்வதி அலங்காரம்அன்னையின் அருகாமை காட்சி 


அம்மனின் பின்னழகு 

ஒரு சடை வீணைகளால் ஆனதை கவனியுங்கள். ஊஞ்சல் மண்டபத்தில் இன்று காய்கறிகளால் அலங்காரம் 


கண்ணாடியில்  காய்கறி கோல பிரதிபிம்பம் 


 ஓலமிட்ட விநாயகர்  மற்றும்  சுந்தரரும் சேரமான் பெருமாளும்


திருவையாற்றில் சுந்தரர் பாட காவேரி வழிவிட்ட வரலாறு 

******************* 

 திருமயிலை வெள்ளீச்சுரம்  காமாக்ஷி அம்பாள்
 சரஸ்வதி அலங்காரம் 
சுக்கிராச்சாரியார்  (வெள்ளி) வழிபட்ட வெள்ளீஸ்வரர் 


பொம்மைக்கொலு 


அபிராமி அம்மை பதிகம் 

கைப்போது கொண்டு உன் பதப்போது தன்னிற்
கணப்போதும் அர்ச்சிக்கிலேன்

கண் போதினால் உன் முகப்போது தன்னையான்
கண்டு தரிசனை புரிகிலேன்

முப்போதில் ஒரு போதும் என்மனப் போதிலே
முன்னி உன் ஆலயத்தின்

முன் போதுவார் தமதுபின் போத நினைகிலேன்
மோசமே போதுகின்றேன்

மைப்போதகத்திற்கு நிகர் எனப்போதும் எரு
மைக்கடா மிசை ஏறியே

மாகோர காலன் வரும்போது தமியேன்
மனம் கலங்கித் தியங்கும் 

அப்போது வந்து உனது அருட்போது தந்தருள்!
ஆதிகடவூரின் வாழ்வே!

அமுதீசர் ஒருபாகம் அகலாத சுகபாணி!
அருள்வாமி! அபிராமியே! (10)

பொருள்:  கையில் மலர்களைக் கொண்டு உனது திருவடித்தாமரையில் ஒரு நொடிப்போது கூட அர்ச்சனை செய்யவில்லை. கண்களால் உன் தாமரை போன்ற திருமுகத்தை தரிசிக்கவில்லை.  மூன்று நேரங்களில் ஒரு நேரம் கூட என் உள்ளத்தில் உன்னை  நினைத்து , உன் ஆலயம் செல்லும் அன்பர்கள்  பின் செல்ல நினைக்கவில்லை. ைதனால் மோசமே போகின்றேன்.  கரிய யானை போன்ற எருமைக்கடா மீது ஏறி மகா கோரமான யமன் என் முன் வரும் போது வந்து நிற்கும் போது அடியேன் மனம் கலங்கி தவிக்கும் போது  நீ வந்து  உன் அருள் என்னும் மலரைத்தந்து அருள வேண்டும், ஆதி க்டவூரில் உறைபவளே!, அமுதீசர் இடப்பாகம் அக்லாதவளே!, திருக்கரங்களீல் கிளியை தாங்கியவளே! அனைவருக்கும் அருள் புரிபவளே! அபிராமை அன்னையே!் என்று வேண்டுகிறார் அபிராமி பட்டர்.  

இப்பாடலில் "போது" என்ற சொல்லை அரும்பு, மலர், காலம், பொழுது என்ற பல பொருட்களில் பயன் படுத்து தனது கவிதா விலாசத்தை காட்டுகின்றார் அபிராமி பட்டர், 


மிகையும் துரத்த வெம்பிணியும் துரத்தமத
வெகுளி மேலும் துரத்த

மிடியும் துரத்த நரைதிரையும் துரத்த நனி
வேதனைகளும் துரத்தப்

பகையும் துரத்த வஞ்சனையும் துரத்த முப்
பசி என்பதும் துரத்தப்

பாவம் துரத்த அதி மோகம் துரத்தமுழு
நாணும் துரத்த வெகுவாய்

நாவறண்டோடி இருகால் தளர்ந்திர்டும் என்னை
நமனும் துரத்துவானோ?

 அகில உலகங்களுக்கு ஆதார தெய்வமே
ஆதி கடவூரின் வாழ்வே! 

அமுதீசர் ஒருபாகம் அகலாத சுகபாணி!
அருள்வாமி! அபிராமியே! (11)

பொருள்:  துன்பம், கொடிய நோய், கோபம் மதம், வறுமை, மூப்பு, தளர்ச்சி, மிக்க வேதனைகள், பகை, சூழ்ச்சி, பெண்ணாசை, பொன்னாசை, மண்ணாசை, பாவம், மோகம், மலங்கள், ஊழ்வினை, வெட்கம் இவையெல்லாம் அடியேனை துரத்துகின்றன.  இதனால் நாக்கு வறண்டு, ஓதியோடிக் காலகளும் தளர்ந்து போயின. இந்நிலையில் எமனும் வந்து எனை துரத்துவானோ?  அவ்வாறு துரத்தினால் நீயே கதி! அனைத்து உலகங்களுக்கும் ஆதாரம் என்று சொல்லப்படும் கடவூரின் வாழ்வே!  அமுதீசர் இடப்பாகத்தை ஒரு போதும் அகலாதவளே! கிளியை  தனது இடக்கரத்தில் ஏந்தியிருப்பவளே!  அனைத்து உயிர்களுக்கும் அருள் புரிபவளே! அபிராமி அன்னையே!  என்று  உலக மக்கள் படும் அவஸ்தைகளை பட்டியல் இட்டு இவற்றிலிருந்து  காப்பாற்ற வேண்டுகிறார் அபிராமி பட்டர்.   


இந்த வருட நவராத்திரிப் பதிவுகள் இத்துடன் நிறைவேறுகின்றன.  வந்து தரிசித்த அனைவருக்கும் அம்மன் அருள் கிட்ட பிரார்த்த்ர்க்கின்றேன். 
  


நவராத்திரி நாயகி - 6

பல்வேறு ஆலயங்களின் அம்மன் அலங்காரங்கள்


 பிரஹத் சுந்தர குஜாம்பாள் 

மீனாக்ஷி அலங்காரம்
ஆலயம்: மகாலிங்கேஸ்வரர் ஆலயம், மஹாலிங்கபுரம் , சென்னை. 

******************விசாலாக்ஷி ஊஞ்சல் 
பழனி மலைக் கொலு 

ஆலயம் : காசி விஸ்வநாதர் ஆலயம், மேற்கு மாம்பலம்,     சென்னை
********************சொர்ணாம்பாள் அன்னபூரணி அலங்காரம் 
சொர்ணாம்பாள்  மீனாக்ஷி அலங்காரம் 

ஆலயம்: சொர்ணபுரீஸ்வரர் ஆலயம், அசோக்நகர் , சென்னை 

******************


சலதி உலகத்திற் சராசரங்களை ஈன்ற
தாயாகினால் எனக்குத்

தாயல்லாவோ? யான் உந்தன் மைந்தன் அன்றோ? எனது
சஞ்சலம் தீர்த்து நின்றன்

முலை சுரந்து ஒழுகு பால் ஊட்டி என் முகத்தினை உன் 
முந்தாணையால் துடைத்து

மொழிகின்ற மழலைக்கு உகந்து கொண்டு இள நிலா
முறுவலும் பூத்து அருகில் யான்

குலவி விளையாடல் கண்டு அருள் மழை பொழிந்து அங்கை
கொட்டி வா என்று அழைத்துக்

குஞ்சரமுகன் குமரனுக்கு இளையன் என்று எனைக்
கூறினால் ஈனம் உண்டோ?

அலைகடலிலே தோன்றும் ஆராத அமுதமே!
ஆதி கடவூரின் வாழ்வே!

அமுதீசர் ஒரு பாகம் அகலாத சுகபாணி!
அருள்வாமி! அபிராமியே! (9) 

பொருள்: அபிராமி அன்னையே! இந்த கடல் சூழ்ந்த உலகத்தில் அனைத்து ஜீவராசிகளையும் ஈன்றெடுத்த அன்னை நீ அல்லவா? அப்படியென்றால் நீ எனக்கும் அன்னைதானே, எனது கவலைகளைப் போக்கி, உன்னுடைய முலைப்பாலை ஊட்டி, என் முகத்தை உன் முந்தானையால் துடைத்து, என் மழலைச் சொல் கேட்டு மகிழ்ந்து , மகிழ்ச்சியுடன் விளையாடுவது கண்டு மகிழ்ந்து, அருள் மழை பொழிந்து அன்பு திருக்கரங்களால் வா என்று அழைத்து , விநாயகனுக்கும், முருகனுக்கும் இளையவன் என்று கூறினால் அதனால் தங்களுக்கு ஒரு தாழ்வு ஏற்படுமோ? . அலைகள் நிறைந்த   கடலில் தோன்றிய தெவிட்டாத அமுதமே! ஆதி கடவூரில் உறைபவளே ! அமுதீசர் இடப்பாகம் அகலாத அனையே! கிளியைத் திருக்கரத்தில் ஏந்தியவளே!  அருள் புரியும் அபிராமியே! என்று உரிமையுடன் வேண்டுகின்றார் அபிராமிபட்டர்.   


                                                                                                                                                                         அம்மன் அருள் தொடரும். . . . .. ... 

Saturday, September 27, 2014

நவராத்திரி நாயகி - 5


முத்து மாரியம்மன் நவராத்திரி அலங்காரங்கள் 

முதல் நாள் மூலவர் முத்து மாரியம்மன் அலங்காரம் 

  
உற்சவர் முத்து மாரியம்மன் அலங்காரம் 

**********

இரண்டாம் நாள் 


மூலவர் காயத்ரி அலங்காரம் 


உற்சவர் கண ஸ்கந்த மாதா அலங்காரம் 

(தன் இரு புதல்வர்களுடன் அன்னை மலைமகள் பார்வதி)லலிதா சகஸ்ர நாமத்தில் வரும் சில நாமக்கள்

காமேச்வர  - முகாலோக - கல்பித - ஸ்ரீகணேச்வராயை நம: 

காமேசுவரனது முக தரிசனத்தினால் கணேசனைப் பெற்றவள். 

மஹா கணேச - நிர்பின்ன - விக்ன யந்த்ர - ப்ரஹர்ஷிதாயை நம:

விக்ன யந்திரத்தைப் பொடிப்பொடியாக்கிய கணேசரைக் கண்டு மகிழ்ந்தவள். 

கணாம்பாயை நம:

கணங்களுக்கும் கணபதிக்கும் தாய். 

குமார கணநாதாம்பாயை நம:

குமரனுக்கும் கணபதிக்கும் தாய். 

குஹாம்பாயை நம:

குஹப்பெருமானின் தாய்.

குஹ ஜென்ம புவே நம: 

குமரக்கடவுளின் ஜென்மஸ்தானம் .***********

மூன்றாம் நாள் 


மூலவர் ஜெய துர்க்கா தேவி  அலங்காரம் 
ஜெய ஜெய தேவி ஜெய ஜெய தேவி 

துர்கா தேவி சரணம்  கனக துர்கா தேவி சரணம்உற்சவர் நர்த்தன மஹா கௌரி அலங்காரம் 
 லாஸ்ய - பிரியாயை நம:
(லாஸ்ய - பெண்கள் ஆடும் நடனம். தாண்டவம் - ஆண்கள் ஆடும் நடனம்.)

(லாஸ்ய) நர்த்தனத்தில் பிரியம் உள்ளவள்.


நடேச்வர்யை நம:  

நடனம் செய்யும் நடராஜனை அனுசரித்து நடனம் செய்யும் ஈஸ்வரி.     


மஹேஸ்வர - மஹாகல்ப - மஹா தாண்டவ - ஸாக்ஷிண்யை: 

மஹா கல்பத்தில் மஹேசுவரர் செய்யும் மஹா தாண்டவத்திற்கு சாட்சியாக இருப்பவள்.                                                                                                                                                                                                              
************

               இவ்வாலயம் சென்னை வெங்கடநாராயணா சாலையில் உள்ளது.                                                                                                                                                               
                                              அபிராமி அம்மை பதிகம்                                                   

ஞானம் தழைத்து உன் சொரூபத்தை அறிகின்ற
நல்லோர் இடத்தினில் போய்

நடுவினில் இருந்து உவந்து அடிமையும் பூண்டு அவர்
நவிற்றும் உபதேசம் உட்கொண்டு

ஈனம்தன்னைத் தள்ளிஎனது நான் எனும் மானம்
இல்லாமலே துரத்தி

இந்திரிய வாயில்களை இறுகப்புதைத்து நெஞ்சு
இருள் அற விளக்கு ஏற்றியே

வான் அந்தம் ஆனவிழி அன்னமே உன்னை என்
மனத் தாமரைப் போதிலே

வைத்து வேறே கவலை அற்றுமேல் உற்றுபர
வசமாகி அழியாதது ஓர்

ஆனந்த வாரிதியில் ஆழ்கின்றது என்று காண்?
ஆதிகடவூரின் வாழ்வே!

அமுதீசர் ஒரு பாகம் அகலாத சுகபாணி!
அருள்வாமி! அபிராமியே! (8)

பொருள்:  இப்பாடலில் பல அரிய கருத்துக்களை அபிராமிபட்டர் கூறியுள்ளார். சத்சங்கத்தின் மேன்மையும். ஐம்புலன்களையும் அடக்கி, ஆணவத்தை வென்று மனத்தாமரையில் அன்னையை அமரச்செய்வதே ஒரு ஆத்மசாதகன் முக்தி அடைய செய்ய வேண்டும் என்பதை அருமையாக காட்டுகின்றார் அபிராமி பட்டர். 

                                                                                                                                                                                      அம்மன் அருள் தொடரும். . . . .. ... 

நவராத்திரி நாயகி - 4

ஓமந்தூர்  பாலம்பிகை  மூலவர் அலங்காரங்கள்

வனவாசத்தின் போது பீமனுக்கு பசி போக்க பால் வழங்கியவள் என்பதால் அம்மனின் திருநாமம்  "பாலம்பிகை"  (க்ஷீராம்பிகை) பீமன் வழிபட்டதால் ஐயனுக்கு "பீமேசுவரர்"  என்று திருநாமம். இவ்வலங்காரங்கள் சென்ற வருடத்தியவை. 

மதுரை மீனாட்சி அலங்காரம்


காஞ்சி காமாட்சி அலங்காரம் 

வாராகி அலங்காரம்


அன்னபூரணி அலங்காரம்

அன்னபூர்ணே சதாபூர்ணே சங்கர ப்ராண வல்லபே|

ஞான வைராக்ய சித்தியர்த்தம் பிக்ஷாம் தேஹி ச பார்வதி||  

கருமாரி அம்மன் அலங்காரம் 

உமையொரு  பாகர் அலங்காரம்

அம்மையப்பர் போற்றி

தேவார திருவாசங்களில் திரட்டிய போற்றிகள்

ஓம் அணங்கின் மணவாளா போற்றி
ஓம் அம்மையப்பா போற்றி
ஓம் அம்மையே அப்பா ஒப்பிலா மணீயே போற்றி
ஓம் அர்த்தநாரீஸ்வரா போற்றி
ஓம் அரியாடிய கண்ணாள் பங்க போற்றி
ஓம் அரிதரு கண்ணி யாள் ஒரு பாகா போற்றி
ஓம் இமவான் மகட்கு தன்னுடைய கேள்வனே போற்றி
ஓம் இளமுலையாள் உமை பாகா போற்றி
ஒம் இமயமென்னும் குன்றரைக் கண்ணன் குலமகட் பாவை கூற போற்றி
ஓம் உடையாள் உன் தன் நடுவிருக்க உடையாள் நடுவுள் நீயிருத்தி போற்றி
ஓம் உண்ணாமுலை உமையாளுடனாகிய ஒருவன் போற்றி
ஓம் உமையாள் கணவா  போற்றி
ஓம் உமையவள் பங்கா போற்றி
ஓம் உமை நங்கையோர் பங்குடையாய் போற்றி
ஓம் ஏலம் ஏலும் நற்குழலி பங்கனே போற்றி
ஓம் ஏலவார் குழலி நாயக்னே போற்றி
ஓம் ஏலவார் குழல் உமை நங்கை ஏத்தி வழிபட்ட காலகாலனே போற்றி
ஓம் கயல்மாண்ட கண்ணி தன் பங்க போற்றி
ஓம் காவி சேரும் கயல் கண்ணாள் பங்கா போற்றி
ஓம் கிளி வந்த மென்மொழியாள் கேழ் கிளரும் பாதியனே போற்றி
ஓம் குரவங்கமழ் நறுமென் குழல் உமை பங்க போற்றி
ஓம் கொடி ஏர் இடையாள் கூறா எம் கோவே போற்றி
ஓம் கொம்பர் ஆர் மருங்குல் மங்கை கூற வெண்ணீற போற்றி
ஓம் கொத்தலர் குழலி பாக போற்றி
ஓம் கொம்மை வரிமுலை கொம்பு அணிஅயாள் கூற போற்றி
ஓம் கோல் வளையாள் பாகா போற்றி
ஓம் கோங்கு அலர் சேர் குவி முலையாள் கூற போற்றி
ஓம் கோலப் பொங்கு அரா அல்குல் செவ்வாய் வெண்ணகைக் கரியவாள்கண்
       மங்கையோர் பங்க போற்றி
ஓம் கோல் வளையாள் பங்க போற்றி
ஓம் சிறு மருங்குல் மை ஆர் தடங்கண் மடந்தை மணவாளா போற்றி
ஓம் சுரிகுழல பணை முலை மடந்தை பாதியே போற்றி
ஓம் செப்பு ஆர் முலை பங்கனே போற்றி
ஓம் செப்பிள முலை நன் மங்கை யொரு பாக போற்றி
ஓம் செந்துவர் வாயுமை பங்க போற்றி
ஓம் தளரா முலை முறுவல்லுமை தலைவா போற்றி
ஓம் திதலைச்செய் பூண்முலை மங்கை பங்க போற்றி
ஓம் துடி கொள் நேர் இடையாள் சுரி குழல் மடந்தை பங்கனே போற்றி
ஓம் தையல் ஒர் பங்கினர் போற்றி
ஓம் தையல் ஒர் பாகம் வாழ் ஜகந்நாதனே போற்றி
ஓம் தையல் இடம் கொண்ட பிரான் போற்றி
ஓம் தோடுடைய சிவியா போற்றி
ஓம் மதி நுதல் மங்கை பங்க போற்றி
ஓம் மலைக்கு மருகனே போற்றி
ஓம் மலையான் மருகனாய் நின்றாய் போற்றி
ஓம் மலை மாது ஒரு பாகா போற்றி
ஓம் மலையரையன் பொன் பாவை வாள் நுதலாள் பெண் திரு நாயக போற்றி
ஓம் மலை மகளை ஒரு பாகம் வைத்தானே போற்றி
ஓம் மரு ஆர் மலர்க்குழல் மாது பங்க போற்றி
ஓம் மட்டுவார் குழல் மங்கையாளை ஓர் பாகம் வைத்த அழகா போற்றி
ஓம் மாவடு வகிர் அன்ன  கண்ணி பங்க போற்றி
ஓம் மாது இருக்கும் பாதியனே போற்றி
ஓம் மாது நல்லாள் உமை மங்கை பங்கன் போற்றி
ஓம் மாது ஒரு கூறு உடைய பிரான் தன் கழலே போற்றி
ஓம் மாதினுக்கு உடம்பிடம் கொடுத்தானே போற்றி
ஓம் மைத்தடங்கண் வெருள்புரி மான் அன்ன நோக்கி தன் பங்க போற்றி
ஓம் மையார் ஒண் கண் நல்லாள் உமையாள் வளர் மார்பினனே போற்றி
ஓம் பஞ்சேர் அடியாள் பங்க போற்றி
ஓம் பஞ்சு ஏர் அடியாள் பாகத்து ஒருவா போற்றி
ஓம் பஞ்சின் மெல்லடியாள் பங்க போற்றி
ஓம் பந்து அணை விரலி(விரலாள்) பங்க போற்றி
ஓம் பருவரை மங்கை  தன் பங்க போற்றி
ஓம் பணைமுலைப் பாக போற்றி
ஓம் பண் தனை வென்ற இன்சொற் பாவையோர் பங்க போற்றி
ஓம் பண்ணின் நேர் மொழியாள் பங்க போற்றி
ஓம் பண் ஆர்ந்த மொழி மங்கை பங்க போற்றி
ஓம் பாகம் பெண்ணுரு ஆனாய் போற்றி
ஓம் பாடக மெல் அடி ஆர்க்கும் மங்கை பங்க போற்றி
ஓம் பாதி மாதொடும் கூடிய பரம்பரனே போற்றி
ஓம் பழுது இல் தொல் புகழாள் பங்க போற்றி
ஓம் புன வேய் அனவளை தோளி பங்க போற்றி
ஓம் பூண் முலையாள் பங்க போற்றி
ஓம் பெண் சுமந்த பாகத்தா போற்றி
ஓம் பெண் ஆளும் பாகனே போற்றி
ஓம் பெண் பால் உகந்த பெரும் பித்தா போற்றி
ஓம் பெண்ணை தென் பால் வைத்தாய் போற்றி
ஓம் பெண்ணின் நல்லாள் பங்க போற்றி
ஓம் பெண்ணோர் பாகா போற்றி
ஓம் பெண்ணாகிய பெருமான் போற்றி
ஓம் பெந்நாப்பட அரவு ஏர் அல்குல் உமை பாகா போற்றி
ஓம் போகமார்த்த பூண் முலையாள் பாகா போற்றி
ஓம் போரில் பொலியும் வெள்கண்ணாள் பங்க போற்றி
ஓம் மாதொரு பாகனே போற்றி
ஓம் மாது இயலும் பாதியனே போற்றி
ஓம் மாது ஆடும் பாகத்தா போற்றி
ஓம் மஞ்சாடும் ,மங்கை மணாளா போற்றி
ஓம் மான் ஓர் பங்கா போற்றி
ஓம் மானேர் நோக்கி மணாளா போற்றி
ஓம் மான் நேர் நோக்கி  உமையாள் பங்க போற்றி
ஓம் மான் பழித்து ஆண்ட மெல் நோக்கி மணாளா போற்றீ
ஓம் மலையாள் மணவாளா போற்றி
ஓம் மை இலங்கு நல்கண்ணி பங்கனே போற்றி
ஓம் நங்கடம்பனை பெற்றவள் பங்க போற்றி
ஓம் நாரி பாகனே போற்றி
ஓம் வரை ஆடு மங்கை தன் பங்க போற்றி
ஓம் வார் உறு பூண் முலையாள் பங்க போற்றி
ஓம் வார்கொண்ட வன முலையாள் உமை பங்க போற்றி
ஓம் வெண்ணகை கருங்கண்  திரைசேர் மடந்தை மணந்த திருப்பொற் புயங்க போற்றி
ஓம் வேயுறு தோளி பங்க போற்றி


கலை மகள் அலங்காரம் 

பிரத்தியங்கிரா தேவி அலங்காரம் 

புகைப்படங்கள்  அடியேனது நண்பர் சுந்தர் அவர்களுடையது. அவருடைய அருமையான புகைப்படங்களை இங்கு காணலாம் சுந்தரின் புகைப்படங்கள்

                                                 அபிராமி அம்மை பதிகம்

நீடுலகங்களுக்கு ஆதாரமாய் நின்று 
நித்தமும் மூர்த்தி வடிவாய்

நியமமுடன் முப்பத்திரண்டு அறம் வளர்க்கின்ற
 நீ மனைவியாய் இருந்தும்

வீடு வீடுகள் தோறும் ஓடிப்புகுந்து கால்
வேஸற்று இலச்சையும் போய்

வெண்துகில் அரைக்கணிய விதியற்று நிர்வாண
வேடமும் கொண்டு கைக்கோர்

ஓடு ஏந்தி நாடெங்கும் உள்ளம் தளர்ந்து நின்று
உன்மத்தன் ஆகி அம்மா

உன் கணவன் எங்கெங்கும் ஐயம் புகுந்து ஏங்கி
உழல்கின்றது ஏது சொல்லாய்?

ஆடு கொடி மாடமிசை மாதர் விளையாடி வரும்
                                                       ஆதி கடவூரின் வாழ்வே!
 
                              அமுதீசர் ஒரு பாகம் அகலாத சுகபாணி!
                                                  அருள்வாமி! அபிராமியே!   (7)பொருள்: அன்னை அபிராமியே அனைத்து  உலங்களுக்கும் ஆதாரமாக இருப்பவள்.  அவளே பல ஸ்தலங்களில் பல் வேறு வடிவங்களில் அன்பர்களுக்கு  அருள் புரிகின்றாள். சிவபெருமான் அளித்த இரு நாழி நெல்லைக் கொண்டு முப்பதிரண்டு அறங்களையும்  முறையாக செய்த தர்ம ஸம்வர்த்தினியும் அவளே . இவ்வளவு  சிறப்புக்களையும்   நீ பெற்ற  இருந்தும் உன் கணவனாகிய சிவபெருமான், வீடு தோறும் சென்று,  கால் நோக  வெட்கத்தையும் விட்டு, இதையில் அணிய ஆடையும் இல்லாமல் திகம்பரராக  கையில் ஓடு ஏந்தி மனம் தளர்ந்து பித்தனாகி பிச்சைக் கேட்டு அலைவது ஏன்? என்று கொடிகள் ஆடி அசைகின்ற மாடங்களில் பெண்கள் விளையாடுகின்ற பெருமை வாய்ந்த திருக்கடவூரின் வாழ்வை ! அமிர்த கடேஸ்வரரின் இடப்பாகம் அகலாத அன்னையை ! கிளியை திருக்கரத்தில் ஏந்தியவளை! அனைவருக்கும் அருள்புரிபவளை! அபிராமி அன்னையை உரிமையுடன் வினவுகின்றார் அபிராமி பட்டர். 

                                                                                                                                                                                    அம்மன் அருள் தொடரும். . . . .. ...