Showing posts with label விசாலாக்ஷி. Show all posts
Showing posts with label விசாலாக்ஷி. Show all posts

Friday, April 13, 2018

பங்குனிப் பெருவிழா - 9

விஸ்வநாதர் நாக வாகன சேவை

விநாயகர் 

விசாலாக்ஷி அம்பாள்


முருகர் 




நாக வாகனத்தில் விஸ்வநாதர் 

பள்ளி கொண்ட கோலம் 

விசாலாக்ஷி அம்பாள் நாக வாகன சேவை 

மயில் வாகனத்தில் முருகர் 

இடப வாகனத்தில் சண்டிகேஸ்வரர் 






                                                                                பங்குனி உத்திர தரிசனம் தொடரும் . . . . . . .

Thursday, April 5, 2018

பங்குனிப் பெருவிழா - 4

மேற்கு மாம்பலம் 
காசி விஸ்வநாதர் அதிகார நந்தி சேவை 

விநாயகர் மூஷிக வாகன சேவை 




 விஸ்வநாதர் அதிகார நந்தி சேவை 

விசாலாக்ஷி அம்பாள் காமதேனு வாகன சேவை 

முருகர் மயில் வாகன் சேவை

 சண்டிகேஸ்வரர் ரிஷப வாகன சேவை 


                                                                                               பங்குனி உத்திர தரிசனம் தொடரும் . . . . . . .

Monday, September 25, 2017

ஸ்ரீசக்ர நாயகி - 7

ஆறாவது ஆவரணம்  


மேற்கு மாம்பலம்  விசாலாக்ஷியம்மன் 
ஊஞ்சல் சேவை 



கொலு கொடி மரத்தில் கொடி ஏற்றியுள்ளனர் 

திருமயிலை   அங்காளம்மன் 

திரௌபதியம்மன் 

முண்டகக்கண்ணியம்மன்
 சரஸ்வதி அலங்காரம் 




**************


ஆறாவது ஆவர்ணம்

ராகம் - புன்னாகவராளி                                                                  தாளம் - ரூபகம்

பல்லவி

கமலாம்பிகாயாஸ்தவ  பக்த்தோஹம்  ஹம்சங்கர்யா:
ஸ்ரீகர்யா: சங்கீத ரஸிகாயா   ( ஸ்ரீகமலாம்பிகாயா)

அனுபல்லவி

ஸுமஸர இக்ஷு கோதண்ட பாஸாங்குஸ பாண்யா: 
அதி மதுர தர வாண்யா: ஸர்வாண்யா: கல்யாண்யா:

மத்யமம்
ரமணீய புன்னாக வராளீ விஜித வேண்யா:  (ஸ்ரீகமலாம்பிகாயா..)

சரணம்

தச கலாத்மக வஹ்நி ஸ்வரூப பிரகாஸாந்தர்த்தஸார
 ஸர்வ ரக்ஷாகர சக்ரேஸ்வர்யா: திரிதஸாதிநுத
 கசவர்கத்வயமய ஸர்வஜ்ஞாதிதஸ சக்தி ஸமேத
 மாலினி சக்ரேஸ்வர்யா:  திரிதஸ விம்ஸத்வர்ண கர்பிணீ குண்டலிந்யா:

தசமுத்ரா ஸமாராதித கௌளிந்யா;தஸரதாதி நுத குருகுஹ-ஜநக ஸிவபோதிந்யா:
தஸகரண வ்ருத்தி மரீசி நிகர்ப யோகிந்யா: (ஸ்ரீகமலாம்பிகாயா)

பக்தர்களுக்கு அளப்பரிய  செல்வத்தை அள்ளி வழங்கும், சங்கீத ரசிகையான பரமசிவனின் பத்னியுமான  கமலாம்பிகையின் பக்தன் யான்.

நான்கு திருக்கரங்களில்  மலரம்புகள், கரும்பு வில், பாசம், அங்குசம் தரித்திருப்பவள். மிகவும் இனிமையான குரல் உள்ளவள்,  சர்வன்  பரமசிவனின் பத்னி  மங்கல வடிவினள் கமலாம்பிகையின் பக்தன் யான்.

புன்னை மலர்களில் வாசம் செய்யும்  கருவண்டுகளை பழிக்கும்  கரிய கூந்தலை உடையவள், புன்னாகவராளி ராகத்திற்கும் ஆடும் ஸர்பத்தைபோல ஆடும் கூந்தல் அளாகாபாரம் உடையவளுமான ஸ்ரீகமலாம்பிகையின் பக்தன் யான்.

பத்து கலைகளை கொண்ட  அக்னி ஜுவாலையின் மத்தியில், பத்து தளமுடைய ஸர்வரக்ஷாகரம் என்னும் சக்கரத்தில் மிளிர்பவள், தேவர்களால் துதிசெய்யப்பட்ட க மற்றும் ச என்ற எழுத்துக்களான ஸர்வஜ்ஞாதி சக்திகளான பதின்மரோடு கூடிய மாலினீ ஸக்ரேஸ்வரியாக இருப்பவள்.

முப்பது மற்றும் இருபது அக்ஷரங்களை உள்ளடக்கிய குண்டலிநீ சக்தி ஸ்வரூபிணியாக இருப்பவள், தசமுத்ரா தேவியரால் துதிக்கப்படும் கௌலீனீயாக இருப்பவள், தசரதர் போன்ற பேரரசர்களால்  துதிக்கப்படுபவள், குருகுஹனை உலகுக்கு அளித்தவள், சிவபெருமானின் சிவஞானபோதம் அருளும் சிவஞான பிரதாயினீ இவளே, இந்திரியங்களின் செயல்பாடுகளின் கிரணங்கள் வடிவான நிகர்ப்ப யோகினிகளாக இருப்பவள், இவ்வளவு சிறப்புகள் பெற்ற  ஸ்ரீ கமலாம்பிகைக்கு நான் பக்தன்.

ந்த ஆறாம் ஆவரணத்தின் சக்ரம் சர்வ ரக்ஷாகர சக்ரம் ஆகும். இச்சக்ரம்  உள் பத்து முக்கோணங்களாக  விளங்குகின்றது. இச்சக்கரத்தின் நாயகி திரிபுராமாலினி. இதில் அட்டித்து விளங்கும் யோகினி நிகர்ப்ப  யோகினி. அவஸ்தை உபதேசம் ஆகும். இதில் விளங்கும் தேவதைகள் ஸர்வஸம்க்ஷோபினி  முதலான பதின்மர் ஆவர். இக்கீர்த்தனத்தின் சிறப்புப் பலன்கள், இசை ஞானம், குரல் வளம், பேச்சாற்றல், மங்கலங்கள் பெருகும், நோய்கள் நெருங்கா, கர்ம ஞானேந்திரியங்கள் ஆற்றலுடன் விளங்கும், மனோரதங்கள் கைகூடும். 


முந்தைய பதிவு                                                   அடுத்த பதிவு




                                                                                                              அன்னையின் தரிசனம் தொடரும் . . . . . . 

Sunday, September 28, 2014

நவராத்திரி நாயகி - 6

பல்வேறு ஆலயங்களின் அம்மன் அலங்காரங்கள்


 பிரஹத் சுந்தர குஜாம்பாள் 

மீனாக்ஷி அலங்காரம்




ஆலயம்: மகாலிங்கேஸ்வரர் ஆலயம், மஹாலிங்கபுரம் , சென்னை. 

******************



விசாலாக்ஷி ஊஞ்சல் 




பழனி மலைக் கொலு 

ஆலயம் : காசி விஸ்வநாதர் ஆலயம், மேற்கு மாம்பலம்,     சென்னை
********************



சொர்ணாம்பாள் அன்னபூரணி அலங்காரம் 




சொர்ணாம்பாள்  மீனாக்ஷி அலங்காரம் 

ஆலயம்: சொர்ணபுரீஸ்வரர் ஆலயம், அசோக்நகர் , சென்னை 

******************


சலதி உலகத்திற் சராசரங்களை ஈன்ற
தாயாகினால் எனக்குத்

தாயல்லாவோ? யான் உந்தன் மைந்தன் அன்றோ? எனது
சஞ்சலம் தீர்த்து நின்றன்

முலை சுரந்து ஒழுகு பால் ஊட்டி என் முகத்தினை உன் 
முந்தாணையால் துடைத்து

மொழிகின்ற மழலைக்கு உகந்து கொண்டு இள நிலா
முறுவலும் பூத்து அருகில் யான்

குலவி விளையாடல் கண்டு அருள் மழை பொழிந்து அங்கை
கொட்டி வா என்று அழைத்துக்

குஞ்சரமுகன் குமரனுக்கு இளையன் என்று எனைக்
கூறினால் ஈனம் உண்டோ?

அலைகடலிலே தோன்றும் ஆராத அமுதமே!
ஆதி கடவூரின் வாழ்வே!

அமுதீசர் ஒரு பாகம் அகலாத சுகபாணி!
அருள்வாமி! அபிராமியே! (9) 

பொருள்: அபிராமி அன்னையே! இந்த கடல் சூழ்ந்த உலகத்தில் அனைத்து ஜீவராசிகளையும் ஈன்றெடுத்த அன்னை நீ அல்லவா? அப்படியென்றால் நீ எனக்கும் அன்னைதானே, எனது கவலைகளைப் போக்கி, உன்னுடைய முலைப்பாலை ஊட்டி, என் முகத்தை உன் முந்தானையால் துடைத்து, என் மழலைச் சொல் கேட்டு மகிழ்ந்து , மகிழ்ச்சியுடன் விளையாடுவது கண்டு மகிழ்ந்து, அருள் மழை பொழிந்து அன்பு திருக்கரங்களால் வா என்று அழைத்து , விநாயகனுக்கும், முருகனுக்கும் இளையவன் என்று கூறினால் அதனால் தங்களுக்கு ஒரு தாழ்வு ஏற்படுமோ? . அலைகள் நிறைந்த   கடலில் தோன்றிய தெவிட்டாத அமுதமே! ஆதி கடவூரில் உறைபவளே ! அமுதீசர் இடப்பாகம் அகலாத அனையே! கிளியைத் திருக்கரத்தில் ஏந்தியவளே!  அருள் புரியும் அபிராமியே! என்று உரிமையுடன் வேண்டுகின்றார் அபிராமிபட்டர்.   


                                                                                                                                                                         அம்மன் அருள் தொடரும். . . . .. ... 

Tuesday, October 12, 2010

நவராத்திரி அலங்காரங்கள் -4


நவராத்திரி நான்காம் நாள்


வெள்ளீஸ்வரம் காமாக்ஷி அம்மன்
கௌரி அலங்காரம்


நவராத்திரியின் நான்காம் நாள் அன்னையை ஐந்து வயது குழந்தையாக பாவித்து ரோகிணி என்னும் கன்யாவாக வழிபடுகின்றோம். அன்னையை இவ்வாறு வழிபடுவதால் கல்வி வளர்ச்சி உண்டாகும். இன்றைய ஸ்லோகம்

ரோஹயந்தீச பீஜாநி பிராக்ஜன்ம ஸஞ்சிதாநிவ யாதேவி

ஸர்வபூதானாம் ரோஹிணீம் பூஜயாம்யஹம் ||

(எல்லா ஜீவரசிகளின் பாவங்களையும் எந்தச் சக்தியினால் நிவர்த்தி செய்கிறாளோ அந்த சக்தியாகிய ரோகிணியை வணங்குகிறேன்.)


கூஷ்மாண்டா துர்கா

நவராத்திரியின் நான்காம் நாள் அன்னை நவதுர்கைகளில் , சூரிய மண்டலத்தின் நடுவில் அமர்ந்து கொண்டு இந்த புவனம் முழுவதற்கும் வெப்பத்தை வழங்கிக்கொண்டிருக்கும் கூஷ்மாண்டா துர்காவாக வழிபடுகின்றோம். இந்த பிரம்மாண்டம் முழுவதையும் சிருஷ்டிப்பவள் இவளால்தான்.

கமண்டலம், வில், அம்பு, தாமரை, அமிர்தகலசம், சக்கரம், கதை, ஆகியவைகளை ஏழு கரங்களில் ஏந்தியபடி எட்டாவது கரத்தில் எட்டு சித்திகள், ஒன்பது நிதிகள் அடங்கிய ஜப மாலையோடு, சிம்மத்தை வாகனமாகக் கொண்டு திவ்யமாகக் காட்சி கொடுக்கிறாள் அன்னை. தன்னை நாடி வரும் பக்தர்களுக்கு நோயற்ற வாழ்க்கையைக் கொடுத்து அருள் புரிகிறாள். எல்லாவற்றிக்கும் ஆதியாக ஊதா வண்ணத்தவளாக விளங்குகின்றாள் இந்த துர்கா.

அன்னை தன் சக்தி முழுவதையும் சூரியனுக்கு அளித்து சிருஷ்டியை துவக்குகிறாள் அன்னை.

ஸுராஸம்பூர்ண கலசம் ருதிராப்லுத மேவசம் |

ததாநா ஹஸ்த பத்மாப்யாம் கூக்ஷ்மாண்டா சுபதாஸ்துமே ||


என்பது கூஷ்மாண்டா துர்காவின் ஸ்லோகம் ஆகும்.

( தனது இரு தாமரைக் கரங்களில் இரத்தம் நிரம்பிய இரு பூரண கலசங்களை ஏந்தி, சிருஷ்டியை ஸ்த்தி சம்ஹாரத்தை தனது கண் இமைப்பில் நடத்தும் கூஷ்மாண்டா தேவி அடியேனுக்கு எல்லா வளங்களையும் வழங்கட்டும். )

இன்று நாம் காணப்போகும் அன்னையின் அலங்காரங்கள் மயிலை வெள்ளீஸ்வர ஆலயத்தின் கோலாகலக் காட்சிகள்.

காமாக்ஷியம்மன் காமதேனு வாகனத்தில்
கௌரியாக கொலு வீற்றிருக்கும் அழகு



அம்மனுடன் கொலுவிருக்கும் மஹா லக்ஷ்மி
மற்றும் வெள்ளீஸ்வரம் ஐதீகம்

( சுக்ராச்சாரியார் சிவபூஜை செய்யும் காட்சி)



குகையில் உறையும் சிவனை
சகல ஜீவராசிகளும் வணங்கும் காட்சி



மேற்கு மாம்பலம் விசாலாக்ஷி அம்பாள்
ஊஞ்சல் சேவை

Align Center


ரோக நிவாரண அஷ்டகம்

நாரணி நீயே நான்முகன் தாயே
நாகினி யாயே துர்க் கையளே |

ஊரணி மாயே ஊற்று தாயே
ஊற்றுவ யாயே ஊர் ஒளியே ||

காரணி மாயே காருணி தாயே
காளக யாயே காசினியே |

ரோக நிவாரணி சோக நிவாரணி
தாபநி வாரணி ஜெய துர்க்கா || (4)


அம்மன் அருள் வளரும்