Showing posts with label அதிகார நந்தி சேவை. Show all posts
Showing posts with label அதிகார நந்தி சேவை. Show all posts

Sunday, September 29, 2019

சித்திரைப் பெருவிழாக்கள் 2019 - 9


சித்திரைத்திருவிழாவின் மூன்றாம் நாள் காலை  அதிகாரநந்தி சேவையை இப்பதிவில் கண்டு அருள் பெறலாம் அன்பர்களே.


குறுங்காலீஸ்வரர் அதிகார நந்தி சேவை 



வ்வாலயத்தில் சுமார்  900 ஆண்டுகளுக்கு முன்பு குலோத்துங்க சோழன் காலத்தில் திருப்பணி செய்யப்பட்டுள்ளது. ஆனால் ராஜகோபுரம் கட்டும் பணி தொடங்கப்பட்டு அது நின்று போய் மொட்டையாக இருந்தது. பல நூறு ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த 2000-ஆம் ஆண்டில் நூதன  7 நிலைகள் கொண்ட ராஜகோபுரம் பக்தர்களின் நன்கொடையால் கட்டப்பட்டு, திருப்பணிகள்  நடந்து மகா கும்பாபிஷேகம் நடைபெற்து. தூய்மையான- கம்பீரமான ஆலயம். புராண- வரலாற்றுப் பெருமைகளை தன்னகத்தே கொண்டு, கோயில் என்ற இலக்கணத்துக்கு உட்பட்டு, பாங்காக அமைந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கும் தலமாக குறுங்காலீஸ்வரர் ஆலயம் விளங்குகின்றது.   கோவில் மிகவும் பிரசித்தி பெற்று விளங்கியதாக 21 கல்வெட்டுகள் உள்ளன.



கற்பூர ஆரத்தி 


நாற்பது தூண்களுடன் கூடிய பிரமாண்ட முன் மண்டபம். நுழையும்போது நமக்கு வலப் புறம் அருள்மிகு விசாலாட்சி சமேத விஸ்வநாதர் சந்நிதியும், சோமாஸ்கந்தர் சந்நிதியும் காணப்படுகின்றன. சோமாஸ்கந்தர் தியாகராஜர் கோலத்தில் அருள் பாலிக்கின்றார். இத்தூண்களில் ஏராளமான சிற்பங்கள் அழகாக வடிக்கப்பட்டுள்ளன. அதில் யாகக் குதிரையைக் கடிவாளத்தோடு பிடித்த நிலையில் காணப்படும் குச - லவர்களின் கம்பீரமான காட்சி, கலைநயம் மிக்கது.இந்த மண்டபத்தில்தான் குசலவ புரீஸ்வரர் என்கிற குறுங்காலீஸ்வரர் சந்நிதியும், அறம் வளர்த்த நாயகி எனப்படும் தர்மசம்வர்த்தனி அம்மன் சந்நிதியும் அடுத்தடுத்து இடம்பெற்றுள்ளன. ஐயன் குள்ளமாக, லவ –குசர்களுக்காக தன்னை குறுக்கிக்கொண்ட குறுங்காலீஸ்வரராக அருள் பாலிக்கின்றார். அவரை வணங்கி உட்பிரகார வலம்  வநதால் துவக்கத்தில் தெற்கு நோக்கி நடராஜர், சூரியன், சந்திரன் ஆகியோர் அருள் பாலிக்கின்றனர். பிராகார வலம் வரும் போது சண்டிகேஸ்வரர் (கோமுக தீர்த்தம் விழும் இடத்தில்), விநாயகர், ஜுரகரேஸ்வரர், அகத்தீஸ்வரர், இன்னொரு விநாயகர், சாஸ்தா, சுப்ரமண்யர், சிவலிங்கம், லட்சுமி, அப்பர், ஞானசம்பந்தர், சுந்தரமூர்த்தி, மாணிக்கவாசகர், ஞானசரஸ்வதி, நாகர்கள் ஆகியோரை  தரிசிக்கலாம். பிரகார சுவற்றில் சுதர்சன அஷ்டகம், துர்கா ஸுக்தம், சிவப்புராணம், ஸங்காஷ்ட நாஸன கணேச ஸ்தோத்திரம் சலவைக்கல்லில் அமைத்துள்ளனர்




 அடுத்து அம்மன் சன்னதி   அம்பாள் சந்நிதிக்குச் செல்கிறோம். திருவையாறில் அருள் பாலிக்கும் அருள்மிகு அறம் வளர்த்த நாயகி எனும் தர்மசம்வர்த்தினி. பாசம்அங்குசம்வரதம்அபயம் தாங்கிய நான்கு கரங்களுடன் காட்சி தருகிறாள். நின்ற திருக்கோலத்தில்இடது திருவடியை முன் எடுத்து வைத்த பாவத்தில் பக்தர்களின் துயர் தீர்க்கப் புறப்படத் தயாராக இருக்கிறாள் இந்த அம்பிகை  .அம்மனை வழிபட்டால் திருமணம் ஆகாதவர்களுக்குத் திருமணப் பேறு வாய்க்கும். தீரா
 வியாதிகள், மனக் குழப்பங்கள் அகலும்.


Thursday, April 5, 2018

பங்குனிப் பெருவிழா - 4

மேற்கு மாம்பலம் 
காசி விஸ்வநாதர் அதிகார நந்தி சேவை 

விநாயகர் மூஷிக வாகன சேவை 




 விஸ்வநாதர் அதிகார நந்தி சேவை 

விசாலாக்ஷி அம்பாள் காமதேனு வாகன சேவை 

முருகர் மயில் வாகன் சேவை

 சண்டிகேஸ்வரர் ரிஷப வாகன சேவை 


                                                                                               பங்குனி உத்திர தரிசனம் தொடரும் . . . . . . .

Friday, April 15, 2016

அதி அற்புத அதிகார நந்தி சேவை -3


சென்னை சிந்தாதிரிப்பேட்டை ஆதிபுரீஸ்வரர் ஆலயம்
அதிகார நந்தி  சேவை 


மூஷிக வாகனத்தில் விநாயகர்

மூன்று ஆடுக்குகளாக இந்த பொம்மைகளை அமைத்துள்ளனர். முழு முதற்க் கடவுள் விநாயகர், மும்மூர்த்திகளான பிரம்மா, ஸ்ரீ மஹா விஷ்ணு,  சிவபெருமானின் ஆனந்தத் தாண்டவம் கண்டு களித்த  பதஞ்சலி, புலிக்கால் முனிவர் இசைக்கு இலக்கணம் வகுத்த நாரத முனிவர், தும்புரு முனிவர் பொம்மைகளும்,, பிருங்கி முனிவர், சுக முனிவர் பொம்மைகளும் உள்ளன. கயிலாய மலையில் ஒரு காலில் நின்றபடி, யோக பட்டம் காட்டியபடி என, பல்வேறு நிலைகளில் தவம் புரியும் முனிவர்கள் பொம்மைகளும் உள்ளனஅனைத்து பொம்மைகளும் தாமரை பீடத்தில் நின்ற கோலத்தில் உள்ளது ஒரு தனி அழகு.   அதிகார நந்தியின் மேற்பகுதியில் சுவாமியும் அம்மனும் அமரும் பீடத்தின் அடிப் பகுதியின் இரு பக்கத்திலும் பறக்கும் கந்தர்வ பொம்மைகள் வைக்கப்படுகின்றன. இவை அனைத்தையும் சேர்த்துப் பார்த்தால், இசைக் கடலில் மூழ்கியபடி, அந்தப் பேரானந்தத்தில் திளைத்தபடி இறைவனைச் சுமக்கத் தயார் என, நந்தி தேவர் வீறார்ந்த காட்சி அளிப்பது போலவே தோன்றுகிறது.


காமதேனு வாகனத்தில் திரிபுரசுந்தரி அம்பாள்


அம்பாள் உலா வரும் காமதேனு வாகனமும்  அற்புத கலை நயம் கொண்டதாய் விளங்குகின்றது. அப்படியே ஒவ்வொரு பகுதியிலும் அருமையான வேலைப்பாடுகள். அதிகார நந்தி வாகனத்திலும் இதில் பொருத்தப்படும் பொம்மைகளும், காமதேனு வாகனமும் தங்க ரேக்குகளால் அலங்கரிக்கப்பட்டு, முலாம் பூசப்பட்டது போல் காட்சியளிக்கின்றன.




பூத வாகனத்தில் முருகர் 


200வது ஆண்டில் காலடி வைத்துள்ள  பூத வாகனம் அதிகார நந்தி வாகனத்தின் புகழுக்குச் சற்றும் குறையாதது. பொன்னுசாமி கிராமணியின் முன்னோர் சுப்பராய கிராமணி என்பவர், 1812ம் ஆண்டில் இந்த வாகனத்தைச் செய்து கொடுத்துள்ளார். இதுவரை இரண்டு முறை மட்டுமே இந்த வாகனம் வண்ணப்பூச்சு கண்டிருக்கிறது. சமீபத்தில் தான் இரண்டாவது முறையாக வண்ணம் பூசப்பட்டுள்ளது.பூத வாகனத்தின் முன்னிரு கைகளும் இறைவனின் திருவடிகளை ஏந்துவது போல் அமைக்கப்பட்டிருக்க, பின்னிரு கரங்களில் கத்தியும், கேடயமும் உள்ளன. மொத்தம், ஏழு அடி உயரம் உள்ள இந்த வாகனத்தின் ஒவ்வொரு பாகத்திலும் ஸ்தபதி புகுந்து விளையாடியிருக்கிறார். இவருடைய தலை முடி போர்த்துக்கீசியர்களின் அமைப்பில் உள்ளது இதன் தொன்மையை பறை சாற்றுகின்றது.  உருட்டும் விழிகளுடனும், மிரட்டும் வெட்டரிவாள் மீசையுடனும், கட்டுமஸ்தான தேகத்துடனும், ஒரு காலை மடித்து ஒரு காலை நீட்டி எழுந்திருக்கத் தயார் நிலையில் உள்ளது கடந்த, 200 ஆண்டுகளாக இந்தப் பூத வாகனம் தொடர்ந்து, வீதியுலா வந்து கொண்டிருக்கிறது என்பதை நினைக்கும் போது, நமக்கு புளகாங்கிதம் ஏற்படுகிறது. இரவு முருகர் இந்த பூத வாகனத்தில் எழுந்தருளி அருள் பாலிக்கின்றார். 





ஆதிபுரீஸ்வரர் அதிகார நந்தி சேவை 









ரிஷப வாகனத்தில் சண்டிகேஸ்வரர்

****************

இப்பதிவுடன் இணைந்த மற்ற பதிவுகள்