Sunday, October 30, 2011

அற்புத நவராத்திரி அலங்காரம் 8

காரைக்காலில் இருந்து அன்பர் பொன்.மனோகரன் அனுப்பிய கொலுக் காட்சிகள் இப்பதிவிலும் தொடர்கின்றன.


முதலில் காரைக்காலில் அன்னை மலைமகள் பார்வதி உலக உயிர்களுக்கிரங்கி தவம் செய்த வரலாற்றைப்பற்றி அறிந்து கொள்ளளாமா? பொன்னி நதி பாய்ந்து வளம் கொழிக்கும் தஞ்சை வளநாட்டிலே ஒரு சமயம் கடும் பஞ்சம் ஏற்பட்டது. அப்போது உயிர்கள் எல்லாம் உய்யும் பொருட்டு எம் அம்மை ஜகத்ஜனனி சாகம்பரியாக, தானே பூவுலகிற்கு அரி சொல் ஆற்றங் கரையிலே (அரிசலாறு) திருக்கயிலை மலையிலிருந்து தான் கொண்டு வந்த சிவலிங்கத்தை வைத்து பூஜை செய்ய இறையருளால் மழை பெய்து எங்கும் சுபிக்ஷம் ஏற்பட்டது. பின் அங்கேயே அம்மையும் சௌந்தராம்பிகை என்னும் திருநாமத்துடன், கைலாயநாதருடன்(திருக்கயிலையிலிருந்து வந்தவர் என்பதால்) திருக்கோவில் கொள்கின்றாள். இந்த புண்ணிய தலத்திலும், இவ்வாலயத்திற்கு எதிரே சோமநாயகி உடனமர் சோமநாயகி ஆலய வளாகம் உள்ளது,இவ்வளாகத்தில்தான் காரைக்காலம்மையாரின் திருக்கோவில் உள்ளது. இக்கோவிலில் நின்று அன்னம் பாலிக்கும் கோலத்தில் காரைக்காலம்மையார் அருள் பாலிக்கின்றார். இக்கொலு இவ்வாலய வளாகத்தில் வைக்கப்பட்ட கொலுவாகும்.
ஐயன்
அன்னை சிவபூஜை செய்யும் கோலம்


கொலுவின் பல்வேறு பொம்மைகள்தவழும் கண்ணன் கோல கொலு

ஸ்ரீ துர்க்கை சித்தர் அருளிய


துக்க நிவாரணி அஷ்டகம்
ஜெய ஜெய பாலா சாமுண்டேஸ்வரி
ஜெயஜெய ஸ்ரீதேவி
ஜெயஜெய துர்க்கா ஸ்ரீபரமேஸ்வரி
ஜெயஜெய ஸ்ரீதேவி
ஜெயஜெய ஜெயந்தி மங்கள காளி
ஜெயஜெய ஸ்ரீதேவி
ஜெய ஜெய சங்கரி கௌரி க்ருபாகரி
துக்க நிவாரணி காமாக்ஷி (8)
அம்மன் அருள் வளரும் .........

Friday, October 28, 2011

அற்புத நவராத்திரி அலங்காரம் 7

காரைக்காலில் இருந்து இந்தக் கொலுப்படங்களை அனுப்பி வைத்த அன்பர் திரு பொன். மனோகரன் அவர்கள், இவர் அடியேனது நண்பர்.

காரைக்கால் என்றவுடன் அனைவருக்கும் நினைவுக்கு வருவது காரைக்காலம்மையார்தான். அனைத்து உயிர்களுக்கு அமுது படைக்கும் ஆண்டவனுக்கே அமுது படைத்தவர்.

இன்றும் ஆணி பௌர்ணமியன்று இறைவன் பிச்சாண்டவராக அம்மையார் திருக்கோவிலுக்கு எழுந்தருளி அமுது கொள்கிறார் இவ்விழா மாங்கனித் திருவிழா என்று சிறப்பாக கொண்டாடப்படுகின்றது.

இறைவன் தனது திருவாயால் அம்மையே என்று அழைக்கப்பட்டவர். பேயுறு கொண்டு த்லையால் திருக்கயிலை ஏறிச்செல்லும் போது வருமிவள் எமைப்பேணும் அம்மை காண் என்று இறைவன் மலையரசன் பொற்பாவைக்கு அறிமுகம் செய்து வைக்கப்பட்டவர்.

பதிக முறைப் பாடல்களை முதலில் பாடியவர் நால்வருக்கும் முன்னோடி.

இவ்வளவு சிறப்பு மிக்க காரைக்கால் அம்மையார் ஆலயம் காரைக்காலில் சௌந்தராம்பாள் உடனாய கைலாசநாதர் ஆலயத்திற்கு எதிரே, சோமநாயகி உடனாய சோமநாதர் ஆலய வளாகத்தில் அமைந்துள்ளது. ஆலயத்திற்கு அருகில் சந்திர குளம் புதுப்பிக்கப்பட்டு எழிலாக விளங்குகின்றது. குளத்தின் மறுகரையில் பெருமாள் பள்ளிகொண்ட கோலத்தில் மஹா லக்ஷ்மித்தாயாருடன் நித்ய கல்யாண பெருமாளாக சேவை சாதிக்கின்றார்.

வாருங்கள் அன்பர்களே காரைக்கால் கொலுவின் சில காட்சிகளை இப்பதிவில் காணலாம்.


முதலில் அச்சது பொடி செய்த அதிதீரன்

புகைப்படம் எடுத்துக்கொள்ளுங்கள் என்று அன்பாக அனுமதியும் கொடுத்துள்ளனர்

மறுபக்கம் பொம்மை
வரவேற்பில் நந்தி தேவர்


வள்ளி தெய்வானையுடன் தேவ சேனாதிபதி
கண்ணன், பாற் கடல் வண்ணன். விஸ்வரூபன்


காரைக்கால் அம்மையார் வரலாறு 1
(புனிதவதியாய் அவதாரம் செய்தது முதல் ஆலங்காட்டில் ஐயனின் திருப்பாதத்தில் அமரும் வரை)


அம்மையார் வரலாறுபற்றி அறிய சொடுக்குங்கள் இங்கே.காரைக்கால் அம்மையார் வரலாறு 2அம்மை சிவ பூஜை செய்யும் கோலம்


அம்மைக்கு சேவை செய்ய பூதகணங்கள்

பன்னிரு திருமுறைகளால் ஆன சிவலிங்கம்


ஸ்ரீ துர்க்கை சித்தர் அருளிய


துக்க நிவாரணி அஷ்டகம்இடர்தரு தொல்லை இனிமேல் இல்லை


யென்று நீ சொல்லிடுவாய்


சுடர்தரு அமுதே சுருதிகள் கூறிச்


சுகமதைத் தந்திடுவாய்


படர்தரு இருளில் பரிதியாய்வந்து


பழவிணை ஓட்டிடுவாய்


ஜெய ஜெய சங்கரி கௌரி க்ருபாகரி


துக்க நிவாரணி காமாக்ஷி (7)அம்மன் அருள் வளரும் .........


Thursday, October 27, 2011

அற்புத நவராத்திரி அலங்காரம் 6

என்னடா நவராத்திரி முடிந்து, தீபாவளியும் முடிந்து கந்த சஷ்டி நேரத்தில் நவராத்திரி பதிவா? என்று யோசிக்கிறீர்களா, பணி நிமித்தம் சென்று விட்டதால் பதிவிடமுடியவில்லை. ஆகவே ஆரம்பித்த தொடரை முடிக்க தொடர்கிறேன் வந்து தரிசனம் பெறவும். காரைக்காலில் இருந்தும், மும்பையிலிருந்தும் சில படங்கள் வந்துள்ளன அதையும் கண்டு அம்மன் அருள் பெறுங்கள்.
ஓம் சக்திமூலவர் காமாக்ஷி அலங்காரம்அழகான காஞ்சியில் புகழாக வாழ்ந்திடும்
அன்னை கானாட்சியுமையே

உற்சவர் காமாக்ஷி அலங்காரம்உற்சவர் கருமாரியம்மன் அலங்காரம்


கற்பூர நாயகியே கனகவல்லி
காளி மகமாயி கருமாரியம்மா

மூலவர் மாரியம்மன் அலங்காரம்
ஸ்ரீ துர்க்கை சித்தர் அருளிய

துக்க நிவாரணி அஷ்டகம்

எண்ணியபடிநீ யருளிட வருவாய்
எம்குல தேவியளே
பண்ணிய செயலின் பலனது நலமாய்ப்
பல்கிட அருளிடுவாய்
கண்ணொளி யதனால் கருணையே காட்டிக்
கவலைகள் தீர்ப்பவளே
ஜெய ஜெய சங்கரி கௌரி க்ருபாகரி
துக்க நிவாரணி காமாக்ஷி (6)


அம்மன் அருள் வளரும் .........


Saturday, October 1, 2011

அற்புத நவராத்திரி அலங்காரம் 5


ஓம் சக்தி


மூலவர் லக்ஷ்மி அலங்காரம்


சர்வ மங்கள மாங்கல்யே சிவே ஸர்வார்த்த ஸாதிகே
சரண்யே த்ர்யம்பிகே கௌரி (தேவி) நாராயணி நமோஸ்துதே!ஸ்வயம் மங்கள வடிவானவளும், சிவ ரூபிணியும், ஸகல காரியங்களையும் சாதிக்கக் கூடியவளும், சரணமடைந்தவர்களை காப்பாற்றுபவளும், முக்கண்ணியுமான கௌரி (தேவி)! நாராயணி! உன்னை அடி பணிந்து வணங்குகின்றோம்


உற்சவர் லக்ஷ்மி அலங்காரம்குஹாம்பாள்


லலிதா சஹஸ்ரநாமத்தில் வரும் இரு நாமங்கள் குஹாம்பா, குஹஜன்மபூ:
அதாவது முருகனை ஈன்ற அன்னை என்ற பொருள் அதற்கேற்ப முருகனை மடியில் தாங்கி அருள் பாலிக்கும் அம்பாள்.
அன்னபூரணி அலங்காரம்அன்ன பூர்ணே ஸதா பூர்ணே சங்கர பிராண வல்லபே

ஞான வைராக்ய ஸித்யர்த்தம் பிக்ஷாம் தேஹி ச பார்வதி
மாதா ச பார்வதி தேவி பிதா தேவோ மஹேஸ்வர:


பாந்தவா சிவ பக்தாச்சா ஸ்வதேசோ புவனத்ரயம்
அன்னம் நிறைந்தவளே, முழுமையானவளே, சங்கரன் மங்கலமே, அன்னை பார்வதியே, ஞானம் வைராக்யம் உண்டாக பிக்ஷையைக் கொடு அம்மா.என் தாய் பார்வதி தேவி, தந்தையோ மஹேஸ்வரன், உறவினர்களோ சிவ பக்தர்கள், எனது தேசம் மூவுலகம்

ஸ்ரீ துர்க்கை சித்தர் அருளிய
துக்க நிவாரணி அஷ்டகம்


பஞ்சமி பைரவி பர்வதபுத்திரி
பஞ்சநல் பாணியளே

கொஞ்சிடும் குமரனை குணமிகு வேழனைக்
கொடுத்த நல்குமரியளே

சங்கடந் தீர்த்திடச் சமரது செய்தநற்
சக்தியெனும் மாயே

ஜெய ஜெய சங்கரி கௌரி க்ருபாகரி
துக்க நிவாரணி காமாக்ஷி (5)
அம்மன் அருள் வளரும் .........

அற்புத நவராத்திரி அலங்காரம் 4


ஓம் சக்தி


சென்னை மகாலிங்கபுரம்
ப்ரஹத் சுந்தர குசாம்பாள்
கன்னியாகுமரி அலங்காரம்நீலக்கடல் ஓரம் நித்தம் தவம் செய்யும் குமரி அன்னை அப்படியே இறங்கி நம்மை நோக்கி வருவது போல உள்ளது அல்லவா அலங்காரம்சொர்ணாம்பாள் தனலக்ஷ்மி அலங்காரம்

அலைமகளுக்கு சொர்ணத்தினால் ( ரூபாய் நோட்டுக்கள் ) சுற்றிலும் செய்திருக்கும் அழகை எண்ணவென்று சொல்ல.

சென்னை நுங்கம்பாக்கம் அகிலாண்டேஸ்வரி
கம்பா நதியில் சிவ பூஜை செய்யும் கோலம்


நுங்கம்பாக்கம் எல்லையம்மன்

மீனாக்ஷி அலங்காரம்
பெரிய அழகிய முலையம்மை

இராஜராஜேஸ்வரி அலங்காரம்அம்மனுக்கு புதிதாக வந்த

தங்க மாங்கா மாலைமேற்கு மாம்பலம் காசி விஸ்வநாதர்

ஆலய 11 படி கொலு
ஸ்ரீ துர்க்கை சித்தர் அருளிய
துக்க நிவாரணி அஷ்டகம்
தண தண தந்தண தவிலொலி முழங்கிடத்
தண்மணி நீ வருவாய்
கண கண கங்கண கதிரொளி வீசிடக்
கண்மணி நீ வருவாய்
பண பண பம்பண பறையொலி கூவிடப்
பெண்மணி நீ வருவாய்
ஜெய ஜெய சங்கரி கௌரி க்ருபாகரி
துக்க நிவாரணி காமாக்ஷி (4)அம்மன் அருள் வளரும் .........