Showing posts with label கருமாரி. Show all posts
Showing posts with label கருமாரி. Show all posts

Wednesday, October 9, 2013

ஆனந்த நவராத்திரி -6

அன்னையின் இன்னும் சில அற்புத  அலங்காரங்கள்

விநாயகர் வைர அங்கி தரிசனம் 

துர்க்கை அம்மன் வைர அங்கி தரிசனம் 

இரண்டு ஆலயங்களில் துர்க்கை அம்மனுக்கு வஜ்ராங்கியில் தரிசனம் கிட்டியது ( வைரம்= அமெரிக்கன் வைரம்) அந்த காட்சிகள் இந்தப் பதிவில் இடம்பெறுகின்றன்.  ஒரு ஆலயத்தில் விநாயருக்கும் சேர்த்து வஜ்ராங்கி செய்திருக்கின்றனர். அவரையும் தரிசனம் செய்கின்றீர்கள்.


ஓம் காத்யாயனாய வித்மஹே!  கன்யகுமாரி தீமஹி  |
தந்ந துர்கி ப்ரசோதயாத்  ||

சொர்ணாம்பாள் இராஜராஜேஸ்வரி அலங்காரம் 


கருமாரி அம்மன் கொலு 



சென்னை நுங்கம்பாக்கம் 
பிரசன்ன வெங்கடாசலபதி ஆலயம்
பத்மாவதி தாயார் தைர்ய லக்ஷ்மி அலங்காரம் 


இவ்வாலயத்தில் நவராத்திரியின் போது  அஷ்ட லக்ஷ்மி அலங்காரம் செய்கின்றனர்


ஜய வர வர்ணிநி வைஷ்ணவி பார்கவி
மந்த்ர ஸ்வரூபிணி மந்த்ர மயே
ஸுரகண பூஜித சீக்ர ஃபலப்ரத
ஜ்ஞான விகாஸினி சாஸ்த்ரநுதே  |
பவபய ஹாரிணி பாப விமோசநி
ஸாது ஜநாச்ரித பாதயுதே
ஜய ஜய ஹே மதுஸூதந காமிநி
தைர்யலக்ஷ்மி ஸதா பாலய மாம்  ||




பிரஹத் சுந்தர குஜாம்பாள்   மீனாக்ஷி அலங்காரம்


 ஓம் அங்கயற்கண் அம்மை போற்றி
ஓம் அறம் வளர்த்த நாயகியே போற்றி
ஓம் மலையத்துவஜன் வாழ்வே போற்றி
ஓம் மண் சுமந்தோன் மாணிக்கமே போற்றி போற்றி.

Tuesday, October 8, 2013

ஆனந்த நவராத்திரி -5

அம்மன் கொலு தர்பார்


அசோக்நகர் சொர்ணாம்பாள் 
கருமாரி அம்மன் அலங்காரம்



தாயே கருமாரி! எங்கள் தாயே கருமாரி!
தேவி கருமாரி! துணை நீயே மகமாயி!

 மேற்கு மாம்பலம் 
விசாலாக்ஷி அம்பாள் கொலு


மேற்கு மாம்பலம் விஸ்வநாதர் ஆலய
 நவராத்திரி கலை நிகழ்ச்சியில் பரத நாட்டியம்




மகாலிங்கபுரம் பிரஹத் சுந்தர குஜாம்பாள்
 கன்னியாகுமரி அலங்காரம்


 நீலதிரைக் கடல் ஓரத்திலே நின்று
 நித்தம்  தவம் செய்யும் குமரி அன்னை தாள் போற்றி



பிரஹத் சுந்தர குஜாம்பாள்
மஹா லக்ஷ்மி அலங்காரம்


திருமகளே  திருப்பாற் கடலூடன்று தேவர் தொழ
வரு மகளே  உலகமெல்லாமும் என்றென்றும் வாழ வைக்கும்
ஒரு மகளே திருமால் உரத்தே உற்று உரம் பெரிது
தரு மகளே தமியேன் தலை மீது நின் தாளை வையே!



ஸ்ரீ மந்தர மாத்ருகா புஷ்ப மாலா ஸ்தவம் 



(ஸ்ரீ ஆதி சங்கர பகவத் பாதர் அருளியது)

14-17 ஸ்லோகங்கள்


 குடை- சாமரம் முதலியவற்றால்  உமையம்மைக்கு  உபசாரங்கள் செய்வித்து மரியாதை செய்வதை இந்த பதினான்காவது ஸ்லோகத்தில் ஜகத்குரு சங்கரர் அருளுகின்றார்.
லக்ஷ்மீர்-மௌக்திக லக்ஷ-கல்பித-
 ஸிதச்சத்ரம் து தத்தே ரஸாத்
இந்த்ராணீ ரதிச்ச சாமரவரே
 தத்தே ஸ்வயம் பாரதீ  I
வீணா-மேண-விலோசனா:ஸுமனஸாம்
  ந்ருத்யந்தி தத்ராகவத்-
பாவைராங்கிக-ஸாத்விகை:ஸ்புடரஸம்
  மாதஸ்-ததா லோக்யதாம்  ||
க்ஷ்மீ: மௌக்திக-லக்ஷ-கல்பித-
 ஸித:-சத்ரம் து தத்தே ரஸாத்
இந்த்ராணீ ரதி: ச சாமர-வரே
 தத்தே ஸ்வயம் பாரதீ  I
வீணாம்-ஏண-விலோசனா:ஸுமனஸாம்
 ந்ருத்யந்தி தத் ராகவத்-
பாவை: ஆங்கிக-ஸாத்விகை:
 ஸ்புட-ரஸம் மாத:! தத் ஆலோக்யதாம்  || 14

ஹே அன்னையே! லக்ஷ்மிதேவி, பல முத்து மணிகளால் ஆகிய வெண்பட்டுக்குடையை ஆர்வமாக தாங்கி தலைமேல் பிடிக்கிறாள்.  பிரேமையால் இந்த்ராணியும், ரதியும் இரு வெண் சாமரங்களை வீசுகின்றனர். ஸரஸ்வதி தேவியும் வீணை வாசிக்கிறாள்.  மான் விழி படைத்த மற்ற தேவ மங்கையர் ராக பாவங்களையொட்டி கை கால் அசைவுகளாலும், ஸாத்விக பாவங்களாலும் ரஸம் ததும்ப நடனம் புரிகின்றனர்.  அன்னையே இவை எல்லாம் கேட்டு மகிழலாமே!
ஸிதச்சத்ரம்-வெண்குடை, ரஸாத்-பிரேமையால், ஏண விலோசனா ஸுமனசாம்: மான்விழி படைத்த  தேவ கன்னிகைகள் ஸ்புடரஸம்- உள்ளத்தின் உணார்ச்சிகளை வெளிப்படுத்தும்.

மானசீக பூஜையின் நிறைவாக, பிரதக்ஷிண நமஸ்காரம் செய்து  மலையரையன் பொற்பாவையை வணங்குவதை இந்த பதினைந்தாவது ஸ்லோகத்தில் குரு புங்கவர் சங்கர தேசிகர் அருளுகின்றார். 
ஹ்ரீங்காரத்ரய-ஸம்புடேன
 மனுனோபாஸ்யே த்ரயீ-மௌலிபி:
வாக்யைர்-லக்ஷ்யதனோ தவ ஸ்துதிவிதௌ
 கோ வா க்ஷமேதாம்பிகே I
ஸல்லாபா: ஸ்துதய: ப்ரதக்ஷிண-சதம்
 ஸஞ்சார ஏவாஸ்து தே
ஸம்வேசோ மனஸ: ஸமாதி-ரகிலம்
 த்வத்ப்ரீதயே கல்பதாம் II
ஹ்ரீம்கார-த்ரய-ஸம்புடேன
 மனுனா உபாஸ்யே த்ரயீ-மௌலிபி:
வாக்யை:-லக்ஷ்ய-தனோ!  தவ ஸ்துதி-விதௌ
 கோ வா க்ஷமேத அம்பிகே  I
ஸல்லாபா: ஸ்துதய: ப்ரதக்ஷிண-சதம்
 ஸஞ்சார: ஏவ-Sஸ்து தே
ஸம்வேசோ மனஸ: ஸமாதி: அகிலம்
 த்வத்-ப்ரீதயே கல்பதாம் II 15
ஹே அம்பிகே! மூன்று ஹ்ரீங்காரங்களின் கூட்டால் அறிய வேண்டியவள் நீ. உபநிஷத்துக்களால் அறியத்தக்கவளும் கூட. உன்னை ஸ்தோத்திரம் செய்ய எவர்தான் சக்தியுடையவர்?ஆகவே, நான் பேசுவதெல்லாம் உன் ஸ்தோத்ரங்களாகவும், நான் இங்கும் அங்கும் சஞ்சரிப்பதே உன்னை பிரதக்ஷிணம் செய்வதாகவும், நான் படுத்து உறங்குவதே உன்னை நமஸ்கரிப்பதாகவும் பரிணமித்து, உனக்கு மகிழ்ச்சியை தரவல்லதாக அமையட்டும்.
த்ரயீ – மூன்று வேதங்கள், ஸம்வேச – ஓய்வு, நித்திரை

இனி வரும் இரு ஸ்லோகங்களும் பலச்ருதியாக அமைந்தவை. அதாவது இந்த ஸ்லோகத்தை பக்தி சிரத்தையுடன் பாராயணம் செய்து தேவியை பூஜிப்பதால் உண்டாகும் பலன்களை குறிப்பிடுகின்றன.
ஸ்ரீமந்த்ராக்ஷர-மாலயா கிரிஸுதாம்
 ய: பூஜயேத்-சேதஸா
ஸந்த்யாஸு ப்ரதிவாஸரம் ஸுநியதஸ்-
 தஸ்யாமலம் ஸ்யான்மன:
சித்தாம்போருஹ-மண்டபே கிரிஸுதா
 ந்ருத்தம் விதத்தே ரஸாத்
வாணீ வக்த்ர-ஸரோருஹே ஜலதிஜா
 கேஹே ஜகன்மங்கலா II 
ஸ்ரீமந்த்ராக்ஷர-மாலயா கிரிஸுதாம்
 ய: பூஜயேத்-சேதஸா
ஸந்த்யாஸு ப்ரதிவாஸரம் ஸுநியத:
 தஸ்ய அமலம் ஸ்யான்-மன:
சித்த அம்போருஹ-மண்டபே கிரிஸுதா
 ந்ருத்தம் விதத்தே ரஸாத்
வாணீ வக்த்ர-ஸரோருஹே ஜலதி-ஜா
 கேஹே ஜகத்-மங்கலா II  16.

எவரொருவர், தினந்தோரும் காலையிலும் மாலையிலும் மந்த்ரபீஜாக்ஷரம் பொதிந்த இந்த ஸ்தோரத்தை மனம் வைத்து பாராயணம் செய்து தேவியை பூஜிக்கிறாரோ, அவர் மனம் அமைதி கொள்வது மட்டுமின்றி, அவர் ஹ்ருதயத் தாமரையில் ஸ்ரீதேவி மகிழ்ச்சியுடன் களிநடனம் புரிவாள், பேச்சில் ஸரஸ்வதீ நடனம் புரிவாள், வீட்டில் உலகுக்கெல்லாம் மங்கல நாயகியான லக்ஷ்மீ வாஸம் செய்வாள்.

இதிகிரிவர புத்ரீ பாத ராஜீவ பூஷா
புவன-மமலயந்தீ ஸூக்தி ஸெளரப்ய-ஸாரை: I
சிவபத மகரந்த ஸ்யந்தினீயம் நிபத்தா
மதயது கவிப்ருங்கான் மாத்ருகா-புஷ்பமாலா ||
இதிகிரிவரபுத்ரீ- பாத- ராஜீவ பூஷா
புவனம்- அமலயந்தீ ஸூக்தி- ஸெளரப்ய-ஸாரை: I
சிவபத- மகரந்த ஸ்யந்தினீ- இயம் நிபத்தாமதயது
கவிப்ருங்கான் மாத்ருகா-புஷ்பமாலா || 17
 கிரி ராஜா தனயை என்றறிந்த அன்னையின் மந்த்ராக்ஷரம் பொதிந்த புஷ்பமாலை, நறுமணத்தால் உலகை தூய்மை பெறச் செய்து, அன்னையின் திருவடிகளுக்கு அணிகலனாக அமைந்துள்ளது. சிவனின் திருப்பாதங்களின் மகரந்தத்தையும் பெருக்குவதாக அமைக்கப்பட்டுள்ளது. ஆகவே கவிகளாகிய தேன் வண்டுகளையும் எக்களிப்படையச் செய்யட்டும்.
 ஸ்ரீ மந்த்ர மாத்ருகா புஷ்ப மாலா ஸ்தவம் முற்றிற்று .

Thursday, October 27, 2011

அற்புத நவராத்திரி அலங்காரம் 6

என்னடா நவராத்திரி முடிந்து, தீபாவளியும் முடிந்து கந்த சஷ்டி நேரத்தில் நவராத்திரி பதிவா? என்று யோசிக்கிறீர்களா, பணி நிமித்தம் சென்று விட்டதால் பதிவிடமுடியவில்லை. ஆகவே ஆரம்பித்த தொடரை முடிக்க தொடர்கிறேன் வந்து தரிசனம் பெறவும். காரைக்காலில் இருந்தும், மும்பையிலிருந்தும் சில படங்கள் வந்துள்ளன அதையும் கண்டு அம்மன் அருள் பெறுங்கள்.




ஓம் சக்தி



மூலவர் காமாக்ஷி அலங்காரம்



அழகான காஞ்சியில் புகழாக வாழ்ந்திடும்
அன்னை கானாட்சியுமையே





உற்சவர் காமாக்ஷி அலங்காரம்



உற்சவர் கருமாரியம்மன் அலங்காரம்


கற்பூர நாயகியே கனகவல்லி
காளி மகமாயி கருமாரியம்மா





மூலவர் மாரியம்மன் அலங்காரம்




ஸ்ரீ துர்க்கை சித்தர் அருளிய

துக்க நிவாரணி அஷ்டகம்

எண்ணியபடிநீ யருளிட வருவாய்
எம்குல தேவியளே
பண்ணிய செயலின் பலனது நலமாய்ப்
பல்கிட அருளிடுவாய்
கண்ணொளி யதனால் கருணையே காட்டிக்
கவலைகள் தீர்ப்பவளே
ஜெய ஜெய சங்கரி கௌரி க்ருபாகரி
துக்க நிவாரணி காமாக்ஷி (6)


அம்மன் அருள் வளரும் .........


Thursday, August 11, 2011

ஆடி வெள்ளி அம்மன் தரிசனம்


ஆடி வெள்ளிக் கிழமையன்று அம்மனுக்கு மஞ்சள் காப்பு
ஆதி கருமாரியம்மனுக்கு அழகிய மஞ்சள் காப்பு அழகிய மஞ்சள் காப்பு





ஆடி மாதம் அம்மனுக்குரிய மாதம் ஏன், இது அயன மாதம் அதாவது சூரியன் தெற்கு நோக்கிய பயணத்தை துவக்கும் காலம். தேவர்களுக்கு மாலைக் காலம் ஆரம்பம் அவர்கள் தூங்கச் செல்லும் காலம். பித்ருக்கள் பூமிக்கு வரும் காலம் பித்ருக்களுக்கு பூஜை செய்ய உகந்த காலம்.

இந்த ஆடி மாதத்தில் மழை நன்றாகப்பெய்து பூமித்தாய் சூல் கொள்ளும் காலம். நதியிலே புதுப்புனல் நுரையுடன் பொங்கி ஓடும் காலம். ஜகன்மாதா, ஜகத்ஜனனி அம்பிகையே சூல் கொண்டதாக கருதி பூரத்தன்று அம்மனுக்கு வளைகாப்பு நடத்தும் காலம்.

ஆடி வெள்ளியும் செவ்வாயும் அம்மனுக்கு விசேஷமானவை. தமிழகத்தின் வட மாவட்டங்களில் வெள்ளி தொடங்கி ஞாயிறுவரை ஒவ்வொரு அம்மன் ஆலயத்திலும் கூழ் வார்க்கும் உற்சவம் சிறப்பாக நடைபெறும்.

அடியேனின் கோவை மாவட்டத்தில் இந்த கூழ் வார்க்கும் உற்சவம் கிடையாது. ஆனால் வெள்ளி அன்று மாரியம்மன் கோவிலுக்கு சென்று வருவோம். பின்னர் சென்னை வந்த பின் இங்கிருக்கும் கோவில்களில் சென்று அம்மனை தரிசனம் செய்து விட்டு வருவோம்.








இதற்கு முன் உற்சவத்தின் பொது இது போல மின் விளக்குகளால் அமைக்கப்பட்ட தெய்வ உருவங்கள் பல இடங்களில் பார்த்திருக்கின்றேன். வீதி முழுவது மின் விளக்குகளால் ஒளிர்வதையும் பார்த்திருக்கின்றேன்.

இந்த வருடம் புதிதாக பிரம்மாண்டமான தெய்வ சிலைகளையே வைத்து அலங்காரம் செய்திருப்பதை பார்க்க நேர்ந்தது. அதுவும் ஒரு கோவிலில் அல்ல , மூன்று கோவில்களில் . கையில் கேமரா இருந்ததால் அவற்றை புகைப்படம் பிடித்தேன். இந்த நிறை ஆடி வெள்ளி, வரலக்ஷ்மி விரத நாளில் அந்த அரிய காட்சிகளை தங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மிக்க மகிழ்ச்சி.










மேற்கு சைதாப்பேட்டையில் கண்ட காட்சி உடன் சூலமேந்திய கருமாரி நின்ற கோலத்தில் மற்றும் திருக்கையிலாய மலையில் சிவபெருமான் , சிவலிங்கம் என்று மிக பிரம்மாண்டமாய் அமைத்திருந்தார்கள்.




அம்மனுக்கு இரு புறமும் தங்க அன்னங்கள்





திரிசூலி கருமாரி நின்ற கோலத்தில்







திருக்கயிலைக்காட்சி






இரண்டாவது ஆலயம், வெங்கடநாராயண சாலையில். கருமாரி அம்மன் தர்பார், கணேசன் துவாரபாலகிகள் மற்றும் காவற்காரர்களுடன்.



கருமாரி அம்மன் தர்பார்









மூன்றாவது கோயில் மேற்கு மாம்பலம் கார்ப்பரேஷன்காலனி முத்து மாரியம்மன் ஆலயம், கணேசன், முருகன் . விளக்கேந்திய மங்கையர் என்று அம்மன் தர்பார்.



முத்து மாரியம்மன் தர்பார்







சினிமாவின் தாக்கமா? அரசியல்வாதிகள் போல் அம்மனுக்கும் கட் அவுட்டா? வங்காளத்தில் துர்கா பூஜையின் போது இது போலத்தான் அம்மன் சிலைகளை பிரதிஷ்டை செய்து பூஜை செய்வார்கள் அதன் பாதிப்பா? என்ன ஆனாலும் அருமையான காட்சிகள் தாங்களும் கண்டு மகிழுங்கள்.

ஓம் சக்தி! ஓம் சக்தி! ஓம் சக்தி!