காரைக்காலில் இருந்து அன்பர் பொன்.மனோகரன் அனுப்பிய கொலுக் காட்சிகள் இப்பதிவிலும் தொடர்கின்றன.
முதலில் காரைக்காலில் அன்னை மலைமகள் பார்வதி உலக உயிர்களுக்கிரங்கி தவம் செய்த வரலாற்றைப்பற்றி அறிந்து கொள்ளளாமா? பொன்னி நதி பாய்ந்து வளம் கொழிக்கும் தஞ்சை வளநாட்டிலே ஒரு சமயம் கடும் பஞ்சம் ஏற்பட்டது. அப்போது உயிர்கள் எல்லாம் உய்யும் பொருட்டு எம் அம்மை ஜகத்ஜனனி சாகம்பரியாக, தானே பூவுலகிற்கு அரி சொல் ஆற்றங் கரையிலே (அரிசலாறு) திருக்கயிலை மலையிலிருந்து தான் கொண்டு வந்த சிவலிங்கத்தை வைத்து பூஜை செய்ய இறையருளால் மழை பெய்து எங்கும் சுபிக்ஷம் ஏற்பட்டது. பின் அங்கேயே அம்மையும் சௌந்தராம்பிகை என்னும் திருநாமத்துடன், கைலாயநாதருடன்(திருக்கயிலையிலிருந்து வந்தவர் என்பதால்) திருக்கோவில் கொள்கின்றாள். இந்த புண்ணிய தலத்திலும், இவ்வாலயத்திற்கு எதிரே சோமநாயகி உடனமர் சோமநாயகி ஆலய வளாகம் உள்ளது,இவ்வளாகத்தில்தான் காரைக்காலம்மையாரின் திருக்கோவில் உள்ளது. இக்கோவிலில் நின்று அன்னம் பாலிக்கும் கோலத்தில் காரைக்காலம்மையார் அருள் பாலிக்கின்றார். இக்கொலு இவ்வாலய வளாகத்தில் வைக்கப்பட்ட கொலுவாகும்.
ஐயன்
2 comments:
தாயே சரணம்... அம்பிகையே போற்றி..
பகிர்வுக்கு மிக்க நன்றி..
http://anubhudhi.blogspot.com/
ருகைக்கும் பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி சங்கர் ஐயா..
Post a Comment