Sunday, August 11, 2019

சித்திரைப் பெருவிழாக்கள் 2019 -4

ஏழாம் திருநாள் புஷ்பபல்லக்கு 

சுவாமி கஜ பிருஷ்ட விமானம் முன்புறம்

கமலை வல்லியுடன் விநாயகரையும்  நின்றகோல தென்முகக் கடவுளையும் இவ்விமானத்தில் தரிசிக்கலாம்.

சுவாமி விமானம் பின்புறம் 


ட்பிரகாரத்தில்வலம்புரி விநாயகர்சூரியன்நால்வர் பெருமக்கள்அருணகிரிநாதர், 4 கரங்களுடன் உள்ள பாலசுப்பிரமணியர் அருள் பாலிக்கின்றனர்.  தேவ கோட்டத்தில்,   விநாயகர், தட்சிணாமூர்த்திமஹாவிஷ்ணுபிரம்மாதுர்க்கை ஆகியோர் அருள்     பாலிக்கின்றனர்தென்முகப் பரமனின் அழகே அழகுகல்லால மரத்தின் கீழ் வீராசனத்தில் எழிலாக தரிசனம் தருகின்றார் வியாழக்கிழமைகளில் அருமையான அலங்காரத்தில் ஆதி குருவை நாம் தரிசிக்கலாம்ஈசன் கருவறை பின்புற கோட்டத்தில் அநேக தலங்களில் இலிங்கோத்பவர் தான் இருப்பார்ஆனால் இங்கு மகாவிஷ்ணு காணப்படுகிறார்மகாவிஷ்ணுஅவரின் அம்சமான பரசுராமர்ராமர் ஆகியோர் சிவபெருமானை வழிபட்ட தலங்களில் எல்லாம் இலிங்கோத்பவர் இருக்கும் இடத்தில் மகாவிஷ்ணு இருப்பார்அவ்வகையில் இத்தல இறைவனை இராமர் வழிபட்டுள்ளார்தேவ கோட்ட துர்க்கை கரண்ட மகுடம்அபயகடி ஹஸ்தங்கள்புன் முறுவல்  பிரயோக சக்கரத்துடன் அருள் பாலிப்பது ஒரு தனி சிறப்புநமக்கு ஏற்படும் துன்பங்களை களைந்திட(எதிரிகளை அழித்திடஅம்மன் இவ்வாறு  பிரயோக சக்கரத்துடன் அருள் பாலிக்கின்றாள் என்பது ஐதீகம்உள் பிரகாரத்தின் சுற்றில் விளக்கு மாடங்கள் அமைத்திருக்கின்றனர்.

அம்பாள் விமானம் 



கருவறையின் பின்புறம் சோமஸ்கந்தர்,  விநாயகர்,
மருமல்லி யார்குழலின் மடமாதர் மருள் உள்ளி நாயடியன் அலையாமல்
இருநல்ல வாகுமுன தடிபேண இனவல்ல மான மன தருளாயோ
கருநெல்லி மேனிஅரி மருகோனே கனவள்ளி யார்கனவ முருகேசா
திருவல்லி தாயம் அதில் உறைவோனே  திகழ்வல்ல மாதவர்கள் பெருமாளே என்று  அருணகிரிநாதரின் திருப்புகழ் பாடல் பெற்ற  வள்ளி தெய்வானையுடன் கூடிய முருகப்பெருமான் சுப்பிரமணியராக ஒரு திருமுகத்துடனும் 4 திருக்கரங்களுடனும் தனது தேவியர் இருவருடன் கிழக்கு நோக்கி எழுந்தருளியுள்ளார். அவரது சன்னதி முகப்பு பித்தளை கவசம் பூண்டுள்ளது. அடுத்து   அனுமன் பூசித்த லிங்கம், இந்திரன் சாபம் நீக்கிய மீனாட்சி சுந்தரேஸ்வரர், பாரத்வாஜ முனிவர் பிரதிஷ்டை செய்து வணங்கிய  சிவலிங்க சன்னதிகள்  அமைந்துள்ளன.



வடக்கு உட்பிரகாரத்தில் சண்டிகேசர், எறிபத்த நாயனார், நமிநந்தியடிகள், திருநீலகண்டர், அரிவட்டாயர், கோட்புலி, மங்கையர்க்கரசியார் பெருமிழலைக் குறும்பர் ஆகிய நாயன்மார்களுடன் நாகர்களும் எழுந்தருளியுள்ளனர். கோமுகிக்கு  அருகே சண்டிகேஸ்வரர் சன்னதி.  பள்ளியறை, ஆடல்வல்லான் சன்னதியில் பஞ்ச மூர்த்திகள், மாணிக்கவாசகர், பிரதோஷ நாயகர், ஆடிப்பூர அம்பாள், பிக்ஷாடணர் உற்சவ மூர்த்திகளை சேவிக்கலாம். விநாயகர் தேவியர் இருவருடன் எழுந்தருளியிருப்பதைக் காணலாம்.


தாயம்மை

பல நுணுக்கமான சிற்பங்கள் இக்கோவிலின் தூண்களிலும், தேவ கோட்டங்களிலும் உள்ளன. அவற்றுள் சில  நடராஜர், வீரபத்திரர், தென் முகக் கடவுள்,  சிம்மத்தின் மேல் அம்மன்,  முருகர், சண்டிகேஸ்வரர்,  கோதண்டராமர், மச்சாவதாரமூர்த்தி, கூர்மாவதாரமூர்த்தி, மோகினி, திருமகள், ஆலிலைக் கண்ணன், கண்ணனின் பல்வேறு பால  லீலைகள்,   இராமர்,  பிரம்மா, காளி, மாரியம்மன், ரிஷபாரூடர், அம்மை காஞ்சியில் சிவ பூசை செய்யும் கோலம், நாகங்கள்,  பல் வேறு மிருகங்கள், பாம்பாட்டிகள் என அருமையான சிற்பங்களைக் கண்டு களிக்கலாம்.



அர்த்த மண்டபத்தில் துர்க்கையும், பிள்ளையாரும் அழகாக வடிக்கப்பட்டுள்ளனர். ஆடவல்லான் சன்னதிக்கு மேல் சுவரில் ஒரு சிற்பத்தொகுதி உள்ளது. ஒருவன் மத்தளம் வாசிக்க, மற்றொருவன் யாழ் போன்றொரு கருவியை வாசிக்கிறான். மூன்றாமவன் தாளம் போட இரண்டு பெண்கள் கோலாட்டம் ஆடும் காட்சி செதுக்கப்பட்டுள்ளது.  அம்மன் சன்னதிக்கு பின் புறச்சுவற்றில் சம்பந்தர் தேவாரம், வள்ளலார், பாம்பன் சுவாமிகளின் பாடல்கள் கல் வெட்டு வடிவில்.  தெற்கு நோக்கிய  கால பைரவர் .  சந்திரன் இருக்க வேண்டிய இடத்தில் ஐயனை நோக்கியவாறு வலம்புரி விநாயகர்.  ஐயன் மற்றும் அம்மன் மேற்கூரையில் அஷ்ட கோணத்தில் வாகனங்களில் அஷ்ட திக் பாலகர்கள் மற்றும் அஷ்ட லக்ஷ்மிகள்,  மையத்தில் லக்ஷ்மி சக்கரத்தில் மூன்று தாமரைகளில் லக்ஷ்மி தேவியை தரிசிக்கலாம்.

புஷ்ப பல்லக்கு முன்னழகு

புஷ்பப் பல்லக்கு பக்கவாட்டுத்தோற்றம்

4 comments:

வெங்கட் நாகராஜ் said...

சிறப்பான விவரங்கள்...

படங்களும் அழகாக இருக்கின்றன. பாராட்டுகள்.

கோமதி அரசு said...

நான்காம் நாள் சித்திரைப் பெருவிழாவை கண்டு மகிழ்ந்தேன்.
படங்கள் மிக அருமை.
வல்லீசர் திருவடி போற்றி போற்றி!

S.Muruganandam said...

வல்லீசர் திருவடி போற்றி போற்றி!

ஓம் நமசிவாய! மிக்க நன்றி.

S.Muruganandam said...

படங்களும் அழகாக இருக்கின்றன. பாராட்டுகள்.

மிக்க நன்றி, வெங்கட் ஐயா.