Sunday, April 20, 2008

சித்திரைத் திருவிழா காரணீஸ்வரம் - 11



பிட்சாடணர் உற்சவம்
திருக்கர்ரணியில் ஒன்பதாம் நாள் காலை முதல் நாள் காலை போல் அஸ்தமான கிரி வாகனத்தில் பஞ்ச மூர்த்திகள் எழுந்தருளி சேவை சாதித்து திருவீதி வலம் வருகின்றனர்.

அஸ்தமான்கிரி விமானத்தில்

சிவ சொர்ணாம்பிகை



அஸ்தமானகிரியில் காரணீஸ்வரர்




மாலை ஆறு மணியளவில் பிட்சாடணர் உற்சவம் ( இரவலர் திருக்கோலம்) . த்ர்ருகா வனத்து இருடிகளின் கர்வத்தை அடக்க மஹா விஷ்ணு மோகினியாகவும், சிவ பெருமான் சுந்தரராக , பிட்சாடனராகவும் ( எழுந்தருளி முனிவர்களின் செருக்கை அடக்கியதை கூறும் வகையில் பிட்சாதணர் உற்சவம் நதைபெறுகின்றது. அன்னை பார்வதி அன்னபூரணி கோலத்தில் அன்னம் பாலிக்கும் கோலத்தில் ஐயனை பார்த்தவாறு திருவீதி உலா வருகின்றார்.




குண்டோதரனும் மானும் பிச்சையப்பரை எப்போதும் பிரிவதில்லை. ஐயனின் எழிலே எழில் இந்த சுந்தரைக் கண்டு தாருகாவனத்து ரிஷிகளின் பத்தினிகள் எவ்வாறு தன் வசம் இழந்து ஐயனின் பினனால் ஓடாமல் இருந்திருக்க முடியும் சொல்லுங்கள்.

















அன்ன பூர்ணே சதாபூர்ணே சங்கரப் பிராண வல்லபே

ஞான வைராக்ய சித்தர்த்யம் பிக்ஷாம் தேஹி ச பார்வதி


சகல ஜீவராசிகளுக்கும் பூரணமாக அன்னம் பாலிக்கும் அன்னபூரணியே,

சகல் சம்பத்துக்களும் பூரணமாக வழங்குபவளே. சங்கரனாம் பரமசிவனின் உயிரானவளே. இமவான் மகளே, பார்வதி தேவியே, அம்மா ஞானத்தையும், வைராக்கியத்தையும் பிச்சையாகக் கொடு தாயே.

அன்னம் பாலிக்கும் அன்னபூரணி

கோலத்தில் சொர்ணாம்பாள்





கோமேதகம்
சிலையை யெடுத்த மன்மதனைச்
சினந்து சுட்ட சங்கரனார்
சிறிதும் ஆலம் விழுங்காதே
சித்தஞ் செய்யுநற் சங்கரியே


மலையை யெடுத்த மாவரக்கன்
மதத்தோள் நைய ஊன்றியதுன்
மலராய்த் தோன்றும் பதமென்று
மறைகள் மொழியும் மேன்மையளே


கலையைக் கொழிக்கும் தண் கதிரின்
கவிணைக் கூட்டுங் கூன்பிறையைக்
கனிந்தே சூடும் கலாவல்லி
கோமே தகங் கொள் கோகிலமே


அலைசூழ் மயிலை கற்பகமே
அறங்கூர்ச் சைதைப் பொற்கொடியே
அடிமை கொண்டாய் அருள்வாமி
அன்னாய்
சிவசொர் ணாம்பிகையே

No comments: