Wednesday, April 23, 2008

சித்திரைப் பெருந்திருவிழா பரத்வாஜேஸ்வரம் - 12

பன்னிரு திருமுறை உற்சவம்

பெருவிழாவின் பதினொன்றாம் நாள் காலை பரத்வாஜேஸ்வ்ரத்தில் நால்வர் பெருமக்களும் மற்ற ஆசிரியர்களும் இயற்றிய பன்னிரு திருமுறைகள் உற்சவம் சிறப்பாக நடைபெறுகின்றது. நடராஜப் பெருமானையும் சிவகாமி அம்பாளையும் தரிசனம் செய்யும் போது திருமுறைக் கோவிலையும் தரிசித்திருப்பீர்கள். திருமுறை கண்ட சோழன் இராஜ இராஜனால் பூட்டியிருந்த அறைக்குள் இருந்து வெளியே கொண்டுவரப்பட்டு நம்பியாண்தார் நம்பிகளால் தொகுக்கப்பட்ட பன்னிரு திருமுறை விழா.
திருமுறை நூல்களையே இறைவனைப் போல அலங்காரம் செய்து வழிபாடு நடத்தப்பட்டு வீதி உலாவும் நடைபெறுகின்றது. தமிழ அறிஞர்கள் திருமுறைகளின் அருமையை உணர்த்துகின்றனர். சமணர்களை துரத்தியது திருமுறையின் சில பதிகங்கள், பச்சைப்பதிகம் தீயிலும் எரியாமல் அப்படியே இருந்தது. வைகையிலே இட்ட போது இப்பதிகங்கள் ஆற்றுப் போக்கை எதிர்த்து வந்தன. தீராத நோய்களை தீர்த்து வைத்தன. திற்வாமல் இருந்த கதவை திறந்தன இப்பதிகங்கள். இறந்து என்பான பெண்ணையும், முதலை விழுங்கிய சிறுவனையும் உயிருடன் கொண்டு வந்தன பதிகங்கள் ஓடாமல் நின்ற தேரையும், ஏறாமல் நின்ற கொடியையும் ஏற்றின இப்பதிகங்கள்.. இறைவன் இறைவியின் புகழை மட்டுமல்ல அவர்களது திருத்தொண்டர்களின் சிறப்பையும் பரவின இப்பதிகங்கள்.


திருமுறைகள் உற்சவம்


புஷ்பதகுத்து சிறப்புக்காட்சி
பதினொன்றாம் நாள் இரவு அம்மையப்பர் புஷ்ப பல்லக்கில் பஞ்ச மூர்த்திகளுடன் வலம் வந்து அருள் பாலிக்கின்றனர். சிறப்பு அலங்காரம் செய்யப்படுகின்றது இறைவனுக்கு இன்று.

புஷ்ப நாக ஊஞ்சல்
பன்னிரண்டாம் நாள் மாலை பரதவாஜேஸ்வரத்தில் புஷ்ப ஊஞ்சல் உற்சவம். அம்மையப்பரை தியாகராஜப் பெருமான் போல அலங்காரம் செய்கின்றனர். பரத்வாஜேஸ்வரர் தியாகராஜராக ஊஞ்சல் சேவை தந்தருளுகின்றார்.
சீரார் பவளங்கால் முத்தம் கயிறாக
ஏராரும் பொற்பலகை ஏறி இனிதமர்ந்து
நாராயணன் அறியா நாள் மலர்த்தாள் நாய் அடியேற்க்கு
ஊர் ஆகத்தந்தருளும் புலியூர்
ஆரா அமுதன் அம்மையுடன் பொன்னூசல் ஆடுகின்றார்
நாம் எல்லாம் உய்ய. ஒருருவம் ஓர் நாமம் இல்லதார்க்கு ஆயிரம் பேர் சொல்லி தெள்ளேணம் கொட்டோமோ என்று மாணிக்க வாசக சுவாமிகள் பாடியபடி பரம் பொருளுக்கு, பக்த வத்சலருக்கு, தியாக ராஜருக்கு, பரத்வாஜேஸ்வரருக்கு சிறப்பு சகஸ்ரநாம அர்ச்சனை நடைபெறுகின்றது.

புஷ்ப ஊஞ்சலில் தியாகராஜர்

சொர்ணாம்பிகை அம்மன்








பிறகு இரவு தியாகராஜ இயந்திரம் என்று அழைக்கபடும் சிறப்பு வாரையில் தியாகராஜரைப் போல இருந்தாடி அழகாக வீதி வலம் வந்து அருளுகின்றார் எம்பெருமான். தியாகராஜ சுவாமியை சபத விடங்க ஸ்தலங்களிலோ அலல்து தொண்டை மண்டல தியாகத் தலங்களில் தரிசித்த அதே அனுபவத்தை இன்று பரதவாஜேஸ்வரத்திலும் பெறலாம்.

பதிமூன்றாம் நாள் காலை உற்சவ சாந்தி சிறப்பு அபிஷேகம். ஆகம் விதிகளின் படி இறைவனின் திருமூர்த்தங்களை திருக்கோவிலை விட்டு வெளியே கொண்டு சென்று விட்டு வரும் போது சாந்தி அபிஷேகம் செய்ய வேண்தும் என்பது மரபு. மேலும் கடந்த பன்னிரண்டு நாட்களாக, எளி வந்த கருணையினால் தானே வெளியே வந்து காலையும் மாலையும் திருக்காட்சி தந்த தயாபரன் அந்த களைப்பு தீர நீராடுவதக ஐதீகம்.
விடையாற்றி உற்சவம்
பதினான்காம் நாள் மாலை விடையாற்றி உற்சவ சாந்தி இசை நிகழ்ச்சி, இனிய இசை கேட்டு களைப்பைப் போக்கிக் கொள்கிறார் சொர்ணாம்பிகை சமேத பரத்வாஜேஸ்வரர்.

கடந்து 12 நாட்களாக ஐயனின் சிறப்புக் கோலங்களை அன்பர்களான தங்களுக்கு கொண்டு செல்ல அனுமதித்த சிவ சக்திக்கு திருக்கயிலை நாதருக்கு நன்றி கூறி இத்துடன் இத்தொடரை நிறைவு செய்கின்றேன். வந்து தரிசனம் செய்தவர்களுக்கு நன்றி.

No comments: