Sunday, April 13, 2008

சித்திரைத் திருவிழா காரணீஸ்வரம் - 3

அதிகார நந்தி சேவை


சகல புவன் சிருஷ்தி ஸ்த்தி சம்ஹாரகாரண தேவ தேவ மஹா தேவர் சிவபெருமானின் வாகனமும் கொடியும் நந்தி. அந்த நந்தி தேவர் பொற் பிரம்புடனும், ஐயனைப் போலவே மானும் மழுவும் மேற் கரங்களில் ஏந்தியும் கைலயில் காவல் புரியும் கோலத்தில் விளங்கும் கோலமே அதிகார நந்தி கோலம்.


அடாத செயல் செய்த இராவணனின் குலம் அழியும் என்று சாபம் தந்தவ்ர் அதிகார நந்தி. கைலையில் நுழைபவர்களுக்கு அனுமதி தருபவர் இவரே.


பல தலங்களில் அஞ்சலி ஹஸ்ததுடன் சுயம்பிரபா சமேதராக அதிகார நந்தி தேவர் எழுந்தருளி அருள் பாலிக்கின்றார். இவருக்கு பிரதோஷ காலத்தில் சிறப்பு அபிஷேகம் பூஜைகள் நடைபெறுகின்றது.




பெருவிழாக்களின் போது தொண்டை மண்டலத் தலங்களில் மூன்றாம்நாள் அதி காலையில்( சூரிய உதயத்தின் போது) சிவ பெருமான் அதிகார நந்தி சேவை தந்தருளுகின்றார்.





நந்தி முகத்துடனும் மனித உடலுடனும், இடது காலை மடக்கி அமர்ந்து நீட்டிய கரங்களில் ஐயனின் திருப்பாதங்களைத் தாங்கி அம்மையப்பரை தோளில் தாங்கி அதிகார நந்தியில் ஐயன் பவனி வரும் அழகைக் காண கண் கோடி வேண்டும். எனவே தான் திருமயிலை கபாலீசரின் அதிகார நந்தி சேவையை " காணக் கண் கோடி வேண்டும் கபாலியின் பவனி " என்று பாடிப் பரவினார் பாபநாசம் சிவன் அவ்ர்கள். கபாலீச்சரத்தில் மட்டும் அல்ல எங்கு ஐயனின் அதிகார நந்தி சேவையை தரிசித்தாலும் ஆனந்தமே.




இன்றைய தினம் சிறப்பு அலங்காரத்தில் ஒயிலாக பவனி வருகிறார் திருக்கயிலை வாசர். காரணீஸ்வரத்தில் இன்று சிறப்பாக விநாயகர் மூஷிக வாகனத்திலும் அன்னை ஜகதம்பா, ஜகத் ஜனனி, ஆதி பராசக்தி சொர்ணாம்பாள் அன்ன வாகனத்திலும், முருகர் மயில் வாகனத்திலும், சண்டிகேஸ்வரர் ரிஷப வாகனத்திலும் சிறப்பு சேவை சாதிக்கின்றனர்.




இந்த அருட்காட்சிகளை கண்டு களியுங்கள்.




Third Day morning

Adhikara nandi Sevai


மூஷிக வாகனத்தில் விநாயகர்



காரணீஸ்வரப் பெருமான் அதிகார நந்தி சேவை




பின்னழகு





அன்ன வாகனமேறி எழிலாக பவனி வரும் அன்னை காமாக்ஷி

சிவ சொர்ணாம்பிகை





வண்ண மயில் வாகனத்தில் எழில் முருகன்








No comments: