Monday, April 14, 2008

சித்திரைத் திருவிழா காரணீஸ்வரம் -5

சித்திரைப் பெருவிழாவின் நான்காம் நாள் காலை ஆதொண்ட சக்ரவர்த்தி வழிபட்ட காரணி மேகம் போல் அருள் பொழியும் காரணீஸ்வரப் பெருமான் புருஷா மிருக வாகனத்தில் எழுந்தருளி திருவீதி உலா வந்து கோவிலினுள் வந்து வழிபட முடியாதாவர்களுக்கும் தானே அவர்கள் இல்லத்தின் முன் வந்து தரிசனம் தந்து அருள் பாலிக்கின்றார். அதனால் தானே அவரை பரம கருணா மூர்த்தி என்று போற்றிப் பரவுகின்றோம்.




புருஷா மிருக வாகன சேவைக்கு புறப்படும் காரணீஸ்வரர்


நான்காம் நாள் இரவு நாக வாகன சேவை. ஐயனின் அணிகலன்கள் நாகம். அவர் தலையிலும் உடலிலும் ஆடி விளையாடுபவை நாகங்கள்.




அதனால் தானே " பரம சிவன் கழுத்திலிருந்து பாம்பு கேட்டது கருடா சௌக்கியமா? என்று பாடல் பிறந்தது.




அம்மைக்கு குடையும் நாகம் தானே. உலகத்தை தாங்குகின்ற ஆதி சேஷன் இன்று ஐயனைத்தாங்கும் பேறு பெறுகின்றான். பதஞ்சலி முனிவராக அவதாரம் செய்து ஐயனின் ஆன்ந்த தாண்டவத்தை முதலில் தரிசனம் செய்த ஆதி சேஷன வாகன சேவையை கண்டு மகிழுங்கள்.





இந்திரியங்களை வெல்ல முடியாதவன் இந்திரன், அவற்றை முழுவதும் வென்று யோகிகளுக்கெல்லாம் தலைவராக மஹா யோகியாக திகழ்வதால் சிவ பெருமான் ருத்ரன் என்று அழைக்கப்படுகின்றார்.



இங்கே யோகத்தில் அமர்ந்த மஹா யோகியாக, அன்று நால்வருக்கும் சொல்லாமல் சொல்லி உண்மைப் பொருளை உணர்த்திய ஆதி குரு தக்ஷிணா மூர்த்தியாய் ஆதி சேஷனில் சேவை சாதிக்கின்றார் காரணீஸ்வரர்.


மஹா யோகி ஆதி சேஷ வாகன சேவை




ஒவ்வொரு நாள் அலங்காரமும் ஒவ்வொரு விதம இத்தலத்தில்.





குண்டலி சக்தியாய் விளங்கும் அன்னை ஆதி பராசக்தி இன்று அந்த குண்டலினி நாகம் குடைப் பிடிக்க ஒயிலாக பவனி வருகின்றாள் நாம் அனைவரும் உய்ய .




மரகத வல்லி ஆரூர் கமலாட்சி


சிவ சொர்ணாம்பிகை நாக வாகன சேவை








மரகதம்




மடியாய் மாளும் வகை தந்து
மயலார் நீங்குந் தன்மை தந்தாய்
மதங்கொள் வேகங் கெடுத்தாளும்
மன்னோர் மறையே மாதவமே




மிடியார் மாளும் நிலை தந்து
மிகைகொள் அச்சம் போக்கியருள்
மிளிரும் வண்ண மலர்ப்பாதம்
மின்னேர் மணியே மரகதமே




துடியார் தையால் துரியத்தே
துணையாய் தோன்றும் தண்ணளியே
துதிசெய் நெஞ்சந் திகழ்கின்றாய்
தொன்னேர் நெறி கொள் தோத்திரத்தாய்




அடியார் ஆரூர்க் கமலாட்சி
அறங்கூர்ச் சைதைப் பொற்கொடியே
அடிமை கொண்டாய் அருள்வாமி
அன்னாய் சிவசொர் ணாம்பிகையே.


முத்துக்குமார ஸ்வாமி அருட்காட்சி



No comments: