Wednesday, April 23, 2008

சித்திரைத் திருவிழா காரணீஸ்வரம் - 14


புஷ்ப பல்லக்கு
இந்திரன் வழிபட்ட காரணீஸ்வரத்தில் பதினொன்றாம் காலை சிவ சொரூப காட்சி, மாலை அம்மையப்பர் புஷ்ப பல்லக்கு சேவை தந்தருளுகின்றனர், ஏகாந்தமாக ஐயனும் அம்மையும் புஷ்ப பல்லக்கில் எழுந்தருளி மாட வீதி வலம் வந்து அருள் பாலிக்கின்றனர்.


புஷ்ப பல்லக்கிற்க்கு புறப்படும் அம்மையப்பர்


புஷ்ப பல்லக்கு




பன்னிரண்டாம் நாள் மாலை நான்கு மணியளவில் திருமுறை உற்சவம்.
வெள்ளை யானையில் பன்னிரு திருமுறைகள் புறப்பாடு



திருமுறையே சைவநெறிக் கருவூலம் தென் தமிழின் தேன்பா காகும்
திருமுறையே கயிலையின்கண சிவபெருமான் செவிமடுத்த செந்தமிழ் வேதம்
திருமுறையே நடராசன் கரம்வருந்த எழுதிய அருள் தெய்வ நூலாம்
திருமுறையே சொக்கேசன் மதிமலிவாய் மலர்ந்தருளும் சிறப்பிற்றாமால்

ன்று சிறப்பித்துப் பாடிய பன்னிரு திருமுறைகள் வெள்ளை யானை மேல் அலங்காரம் செய்யப்பெற்று திருவிதி வலம் வருகின்றன. ஓதுவார் மூர்த்திகள் பன்னிரு திருமுறைகளைப் பாடியபடி உதன் வலம் வருகின்றனர். ஐயனின் அருளை, கருணையை, புக்ழைப் பாடும் பதிகங்களுக்கும் அவருக்கு செய்யும் சிறப்பு செய்யப்படுகின்றது.


மாலை ஆறு மணியளவில் பஞ்ச மூர்த்திகளுக்கு உற்சவ சாந்தி சிறப்பு நவ கலச அபிஷேகம். சோமாஸ்கந்த மூர்த்தத்தில் மூன்று மூர்த்தங்கள், முருகர் வள்ளி தேய்வானையுடன், விநாயகர், சொர்ணாம்பாள் மற்றும் சண்டிகேஸ்வர் என்று ஒன்பது மூர்த்தங்களுக்கு தனித் தனியாக கலசம் ஸ்தாபித்து மந்திரப் பூர்வமாக சுத்திகரித்து நதியாய்ப் பாயும் திரவியங்களால் அபிஷேகம் நடைபெறுகின்றது. பின்னர் உற்சவ சாந்தி தேவார இன்னிசைக் கேட்டருளி யதாஸ்தானம் திரும்புகின்றனர் பஞ்ச மூர்த்திகள்.


இது வரை யான் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம் என்று திருக்காரணீச்சரத்தில் ஐயனுக்கு கோலாகலமாக நடைபெற்ற பெருவிழாவில் அவர் அளித்த அருட்காட்சிகளை உங்கள் வரை கொண்டு வர அனுமதித்த திருக்கயிலை நாதருக்கும் மலையரசன் பொற்பாவைக்கும் அனந்த கோடி நமஸ்காரங்கள். வந்து தரிசித்த அன்பர்களுக்கும் நன்றி. இப்பதிவுடன் இந்த தொடர் நிறைவடைகின்றது.

No comments: