Tuesday, April 15, 2008

சித்திரைத் திருவிழா காரணீஸ்வரம் - 7

வெள்ளி விருஷப சேவை

எப்போதாவது ஆலயங்களில் ஆண்டவனுக்கு எப்போதும் ஏன் இவ்வளவு நகைகள் ஏன் அணிவிக்கப்படுகின்றன, குறிப்பாக பெரிய மரகத, நீல, மாணிக்கப் பதக்கங்கள் எதற்காக? பிரம்மோற்சவ காலங்களில் தலை முதல் கால் வரை நகைகளாக அலங்கரிப்பது ஏன் என்று யோசித்திருக்கின்றீர்களா?


எதற்கும் ஒரு காரணம் உண்டல்லவா? அது போல இதற்கும் ஒரு காரணம் உண்டு, கோவிலில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள தெய்வ மூர்த்தங்களில் மந்திரப் பூர்வமாகவும் கோவில் அமைப்பினாலும் பிரபஞ்ச சக்தி ஈர்த்து சேமித்து வைக்கப்பட்டுள்ளன, நாம் இறைவன் முன்னால் நின்று வணங்கும் போது அந்த சக்தி அதிர்வலைகளாக நமது உடலில் புகுந்து நன்மைகளை ஏற்படுத்துகின்றன. குறிப்பாக சந்திர காந்தக் கல், சாளக்கிராமம், நவபாஷாணம் ஆகிய அரிய தெய்வ மூர்த்தங்களை நாம் வணங்கும் போது நமக்கு கிடைக்கும் நன்மை அதிகம்.



நவரத்தினங்களால் அலங்கரிக்கப்பட்ட தெய்வ மூர்த்தங்களுக்கு தீபாராதனை காட்டும் போது அந்த் ஒளியானது நவ இரத்தினங்களில் பட்டு பிரதிபலிக்கின்றன. அந்த ஒளியும் நமக்கு நன்மை விளைவிக்கக் கூடியவை எனவே தான் தெய்வ மூர்த்தங்கள் திருவீதி வலம் வரும் போது முழுவதும் நகைகளால் அலங்கரிக்கப்படுகின்றனர்.


சிவாலயங்களில் ஐந்தாம் நாள் இரவு உற்சவம் மிகவும் சிறப்பானது. ஏனென்றால் அன்று தான் மத்தமும் மதியமும், வன்னியும் கொன்றையும் சூடிய பொன்னார் மேனியர் சிவ பெருமான் தமது வாகனமான ரிஷப வாகனத்தில் எழுந்தருளி அருள் பாலிக்கின்றார். உடன் மற்ற மூர்த்திகளும் தங்கள் வாகனத்தில் எழுந்தருளி அருள் பாலிக்கின்றனர். விநாயகர் மூஷிக வாகனத்திலும், முருகர் மயில் வாகனத்திலும், அம்மை பார்வதியும் சண்டிகேஸ்வரரும் ரிஷ்ப வாகனத்திலும் இன்று தரிசனம் தருகின்றனர்.


விநாயகர் ஆலயங்களிலும், அம்மன் கோவில்களிலும், முருகன் தலங்களிலும், கூட ஐந்தாம் நாள் இரவு பஞ்ச மூர்த்திகள் தரிசனம் தருகின்றனர். இவ்வளவு சிறப்பு வாய்ந்த ஐந்தாம் நாள் இரவுஉற்சவத்தின் போது பஞ்ச அளிக்கும் அருட்தரிசனத்தை கண்டு களிக்கப் போகிறீர்கள் இப்பதிவில்.


சிவனாரை என்றைக்கும் சுமக்கும் நந்தி

சேவித்த பக்தர்களை காக்கும் நந்தி

கவலைகளை எந்நாளும் போக்கும் நந்தி

கயிலையிலே நடம் புரியும் இனிய நந்தி


என்று அன்பர்களால் போற்றிப் புகழப் படும் நந்தி வாகனத்தில் எழுந்தருளி அருள் பாலிக்கின்றார் காரணீஸ்வரப் பெருமான். ஐயன் சோமாஸ்கந்தராக பெரிய வெள்ளி ரிஷப வாகனத்திலும், அம்பாள் அகிலாண்ட கோடி பிரம்மாண்ட நாயகி தங்க முலாம் ரிஷப வாகனத்திலும், விநாயகப் பெருமான் சிறிய வெள்ளி ரிஷப வாகனத்திலும்( மூஷிகமல்ல) சண்டிகேஸ்வரர் ரிஷப வாகனத்திலும், செல்வ முத்துக் குமரர் தங்க முலாம் பெரிய மயில் வாகனத்திலும் சிறப்பு மலர் அலங்காரத்துடன் எழிலாக இரவு முழுவதும் திருவீதி வலம் வந்து அருள் பாலிக்கின்றனர்.


வாகனப் புறப்பாடு ஆகும் பொழுது நள்ளிரவாகி விடுகின்றது ஆனாலும் தெருவெங்கும் மக்கள் வெள்ளம் திருக்கயிலைவாசரை விருஷப வாகனத்தில் தரிசிக்க. 10க்கும் மேற்பட்ட நாதஸ்வர கோஷ்டிகள், செண்டை மேளம், சினிமாவில் பயன் படுத்தப்படும் ஒளி பாய்ச்சும் பஸ்கள் திருவீதி முழுவதையும் பகல் போல மாற்ற, நூற்றுக்கணக்கான பக்தர்கள் தங்கள் தோள்களில் ஐயனைத் தாங்க ஐயன் ஆடி வரும் அழகே அழகு. எங்கிருந்துதான் இவ்வளவு பேர் ஒவ்வொரு வருடமும் சரியாக விருஷ்ப சேவைக்கு வருகின்றனர் என்று வியக்காமல் இருக்க முடியவில்லை. அந்த அன்பர்கள் எல்லாம் கூலிக்காக வந்தவர்கள் அல்ல. உண்மையான பக்தியுடன் ஆண்டவனுக்கு சேவை செய்ய வந்த பாகவத உத்தமர்கள்.



வெள்ளி போல பனி படர்ந்த திருக்கயிலாய மலையிலே, கமனீயமான பொன் நிற ஊஞ்சலில் அமர்ந்து இந்த சகல அண்டங்களையும் படைத்தும், கரந்தும், அழித்தும் விளையாடும் ஜகன் மாதா பச்சைப் பசுங்கொடி கௌரியம்மையையும், பவளம் போல் மேனியில் பால் வெண்ணீறணிந்த பரமர் சிவபெருமானையும் எப்போதும் தமது மூச்சுக் காற்றினாக் குளிர வைத்துக் கொண்டிருப்பவர் நந்தியெம்பெருமான். திருக்கயிலாய தரிசனம் பெறும் அன்பர்கள் இன்றும் தெற்கு முகத்திற்கு எதிரே நந்தி தேவரின் தரிசனமும் பெறுகின்றன்ர். அந்த நந்தி மீது ஊர்ந்து எம்பெருமான் வரும் அழகைத்தான் காணுங்களேன்.




வெள்ளி ரிஷப வாகனத்தில்

விநாயகப் பெருமான்



வெள்ளி ரிஷப வாகனத்தில் கோடி புண்ணியம் அளிக்கும்

கோபுர வாசல் தரிசனம்




கார் மேகம் போல் கருணை பொழியும்

காரணீஸ்வரப் பெருமான்

வெள்ளி ரிஷ்ப வாகன சேவை





தங்க முலாம் ரிஷப வாகனத்தில் சேவை சாதிக்கும்

பத்மராகம் சூடும்

சிவசொர்ணாம்பிகை அம்மன்





பத்மராகம்
நமனை நசுக்கும் நாதகீதம்
நயந்து நானும் பெற்றிடவே
நலங்கொள் ஞாலந்தெளிவிக்கும்
நல்லாய் நடங்கொண் டாடுகின்ற



குமர மணியைக் குன்றமுறுங்
குறவர் கோவை நித்தியத்தை
குருவாய் யீந்தாய் குணக்குன்றே
குன்றாக் கனகக் குண்டலியே



வெமர வணியும் வார்குழலில்
வெதும்பா வண்ணப் பத்மராகம்
வெளியேன் சூட்ட விழைகின்றேன்
வெள்ளை உளஞ்செய் வாலையளே



அமரர் கயிலைப் பார்வதியே
அறங்கூர்ச் சைதைப் பொற்கொடியே
அடிமை கொண்டாய் அருள்வாமி
அன்னாய் சிவசொர் ணாம்பிகையே




தங்க முலாம் பெரிய மயில் வாகனத்தில்

எழில் குமரன் தேவியருடன்




5 comments:

sury siva said...

//கோபுர வாசல் தரிசனம் //
இதைக் காண்போம் நாமும் தினம் தினம்.

// கார் மேகம் போல் கருணை பொழியும்//
ஊரெலாம் பச்சை பசேலென வாகும்
ஊரார் வாழ்வும் ஊறணியாய் பொங்கும்
ஒரு காரணமாய் விளங்கும்
//காரணீஸ்வரப் பெருமான்// நமக்கெலாம்
கண்கண்ட தெய்வம்.

//வெள்ளி ரிஷ்ப வாகன சேவை//
நள்ளிரவில் ஓர் வெள்ளி நிலா அதைக்
களித்தவர் மனமே இந்திர விழா.

//தங்க ரிஷப வாகனத்தில் சேவை //
தந்து எமை உய்விக்க வந்தாள் ஒரு பாவை.

//பத்மராகம் சூடும்//
பார்வதியே ! இமயவானருகில் அமையும் உமையே ! என்
//சிவசொர்ணாம்பிகை அம்மனே //
நீ
//தங்க முலாம் பெரிய மயில் வாகனத்தில்
எழில் குமரன் தேவியருடன்//
என்றும் என் மனதில் வீற்றிருக்க‌
இன்றெனக்கு அருள் புரிவாய்.

சுப்பு ரத்தினம்.
தஞ்சை.
http://pureaanmeekam.blogspot.com
http://arthamullavalaipathivugal.blogspot.com

sury siva said...

அற்புதமான சேவை. மனம் நிறைந்தது.

சுப்பு ரத்தினம்.
தஞ்சை
http://vazhvuneri.blogspot.com

SurentharP said...

great work, web log needs your work, typing in tamil of such a long passage is soo difficult, keep it up

S.Muruganandam said...

கவிதையாக பின்னூட்தம் இட்ட தஞ்சை சுப்பு இரத்தினம் அவர்களே மிக்க நன்றி. அருமையான கவிதை. தங்களுடைய இடுகைகளையும் பார்த்தேன் அனைத்தும் தேன். வலர்க தங்கள் தொண்டு.

S.Muruganandam said...

Thank you sun lionel for your kind words,

Om Namashivaya