Showing posts with label நடராஜர். Show all posts
Showing posts with label நடராஜர். Show all posts

Friday, January 10, 2020

ஆருத்ரா தரிசனம்

இன்றைய ஆருத்ரா தரிசன அருட்கோலங்கள்


சென்னை அசோக்நகர் மல்லிகேஸ்வரர் ஆலயம்


ஓம் க்ருபா சமுத்ரம் சுமுகம் த்ரிநேத்ரம் ஜடாதரம் பார்வதி வாமபாகம்  |

சதாசிவம் ருத்ரம் அனந்த ரூபம் சிதம்பரேசம் ஹ்ருதி பாவயாமி  ||

கருணைக் கடலானவரும்,  மங்கள திருமுகத்தினரும்,  முக்கண்ணரும்,  உமையன்னைக்கு இடது பாகத்தை அளித்தவரும், என்றும் மங்கள வடிவினரும், எல்லையற்ற  உருவங்களை தரித்தவரும், சிதம்பரத்தில் அருள் பாலிக்கும் ருத்ரரை தியானிக்கின்றேன்.



ஆடல் வல்லான்




சிவானந்தவல்லி


மாணிக்கவாசகர்


*********************

சென்னை சைதாபேட்டை காரணீஸ்வரர் ஆலயம் 






தென் தில்லை மன்றினுள் ஆடி போற்றி !
இன்று எனக்கு ஆரமுது ஆனாய் போற்றி !!



ஆனந்த கூத்தர்


சிவகாம சுந்தரி


கண்ணாடி சேவை

******************

சென்னை சைதாபேட்டை சௌந்தரேஸ்வரர் ஆலயம்


உலகெலாம் உணர்ந்து ஓதற்கு அரியவன்
நிலஉலாவிய நீர்மலி வேணியன்
அலகில் சோதியன் அம்பலத்தாடுவான்
மலர் சிலம்படி வாழ்த்தி வணங்குவாம்.

****************

சென்னை சைதாபேட்டை செங்குந்தக் கோட்டம்
சிவசுப்பிரமணிய சுவாமி ஆலயம்

விநாயகர்

அம்பலவாணர்

சண்முகர் 

மானாட  மழுவாட மதியாட புனலாட மங்கை சிவகாமியாட
 மாலாட நூலாட மறையாட திறையாட  மறைதந்த பிரமனாட

கோனாட வானுலகு கூட்டமெல்லாமாட குஞ்சரமுகத்தனாட
குண்டல மிரண்டாட தண்டைபுலி யுடையாட குழந்தை முருகேசனாட

ஞானசம்பந்தரொடு யிந்திராதி பதினெட்டு னியட்ட  பாலகருமாட 
 நரை தும்பை யறுகாட நந்திவாகனமாட  நாட்டியப்பெண்களாட 

வினையோட உனைப்பாட யெனைநாடி யிதுவேளை  விருதோடு  ஓடிவருவாய்
யீசனே சிவகாமி நேசனே யெனையீன்ற தில்லை வாழ் நடராசனே


Sunday, April 27, 2008

சித்திரைத் திருவோணம்


சித்திரைத் திருவோணம்
இன்றுதான் ..............

ம்பலத்தாடும் ஐயனுக்கு
னந்த கூத்தனுக்கு
க பர சுகம் அருளும் நாதனுக்கு
கை செம்மலுக்கு
லகெலாம் உணர்ந்து ஓதற்குரியவனுக்கு
ழி நாதனுக்கு
ன்னப்பன் என்தாயனவனுக்கு
னக் குருளைக்கு அருளியவருக்கு
ந்தொழில் புரியும் அரசனுக்கு
ப்பிலா மணிக்கு
ங்கார வடிவானவனுக்கு
டதமாய் காப்பவனுக்கு



ஆனந்த நடராசர் தரிசனம்




சிவானந்தவல்லி தரிசனம்




தென் தில்லை மன்றில் பொற்சபையில் இடது பதம் தூக்கி ஆடும் ஆனந்த நடராச பெருமானுக்கு தேவர்கள் செய்யும் உச்சிக்கால அபிஷேகம். மானிடர்களாகிய நம்முடைய ஒரு வருடம் தேவர்களுக்கு ஒரு நாள். அவர்கள் செய்யும் ஆறு கால பூஜையே அம்பலவாணருக்கு நடைபெறும் ஆறு அபிஷேகங்கள்.



சிவகாம சுந்தரி தரிசனம்



அம்பலவாணர் தரிசனம்

சித்திரை ஓணமும், சீரானியுத்திரமாம்
சத்ததனு ஆதிரையும் சார் வாளும் -பத்திமிகு
மாசியரி கன்னி மருது சதுர்த்தசி மன்
றீசர பிடேக தினமாம்
.

அதாவது
சித்திரை - திருவோணம்
ஆனி - உத்திரம்
மார்கழி - திருவாதிரை
மாசி - வளர் பிறை சதுர்த்தசி( பௌர்ணமிக்கு முந்தைய நாள்)
ஆவணி - வளர் பிறை சதுர்த்தசி( பௌர்ணமிக்கு முந்தைய நாள்)
புரட்டாசி - வளர் பிறை சதுர்த்தசி( பௌர்ணமிக்கு முந்தைய நாள்)
( தனுர் - மார்கழி, யரி(சிம்மம்) - ஆவணி, கன்னி- புரட்டாசி)

ஆகிய ஆறு தினங்களே மன்றினில் ஆடும் மன்னனுக்கு உரிய அபிஷேக தினங்கள்.



சித்திரை திருவோண தினமான இன்று தில்லையில் அம்பலவாணர் சித் சபையிலிருந்து பொற்சபைக்கு எழுந்தருளி மாலையில் அபிஷேகம் கண்டருளுகின்றார். மாலை சுமார் 6 மணிக்கு துவங்கும் அபிஷேகம் இரவு 9 மணி வரை நடக்கின்றது. உண்மையாக நதியாகவே பாய்கின்றன ஐயனுக்கும் அம்மைக்கும் அபிஷேக திரவியங்கள். மற்ற திருத்தலங்களில் உச்சி காலத்தில் அபிஷேகம் நடைபெறுகின்றது.



அம்பலத்தரசர் அருள் தரிசனம்



சிவானந்த வல்லி

அந்த பிறப்பிறப்பில்லா , ஆண் பெண் அலியல்லா, ஆதியும் அந்தமும் இல்லா ஆனந்த கூத்தனின் சில அருட் தரிசனங்களை கண்டு உய்ய வாருங்கள்.


ஐயனின் ஆனந்த தரிசனம் கண்டோம் இனி அவர் ஆடும் ஐந்து சபைகள் எதுவென்று பார்ப்போம்.

சிதம்பரம் - பொன்னம்பலம் - கனக சபை - ஆனந்த தாண்டவம்.
மதுரை - வெள்ளியம்பலம் - ரதஜ சபை - சந்த்யா தாண்டவம்
(பாண்டிய மன்னனுக்காக கால் மாறி ஆடிய ஆட்டம்)
திருநெல்வேலி - தாமிராம்பலம் - தாமிர சபை - முனி தாண்டவம்
திருக்குற்றாலம் - சித்திரம்பலம் - சித்ர சபை - திரிபுர தாண்டவம்
திருவாலங்காடு - மணியம்பலம் - ரதன சபை - ஊர்த்துவ தாண்டவம்
( காளியை தோற்கடிக்க காலை வானை நோக்கி உயர்த்தி ஆடிய ஆட்டம்)

கோபுர வாசலில் எங்கோன் தரிசனம்






கூத்த பிரான் தரிசனம்



அம்மை சிவகாமி

பிறப்பறுக்கும் பிஞ்ஞகன் புறப்பாடு



வேதங்களாட மிகுவாக மாதல்
கீதங்களாடக் கிளரண்ட மேழாடப்
பூதங்க ளாடப்புவன முழுதாட
நாதங் கொண்டாடினான் ஞானான்ந்த கூத்தே!


என்றபடி சகல புவனங்களையும் ஆட்டுவிக்கும் ஆனந்த கூத்தனின் அருள் அபிஷேகம் கண்டு நன்மையடைவோமாக.