மாசிலாமணீஸ்வரர் கஜ பிருஷ்ட விமானம்
நேற்று காலை தொடங்கி நிர்மால்ய தரிசனம். 30-05-08 அபிஷேகம் மற்றும் சந்தன காப்பு சென்று தரிசனம் பெறுங்கள்.
புஷ்பதகுத்து சிறப்புக்காட்சி
பதினொன்றாம் நாள் இரவு அம்மையப்பர் புஷ்ப பல்லக்கில் பஞ்ச மூர்த்திகளுடன் வலம் வந்து அருள் பாலிக்கின்றனர். சிறப்பு அலங்காரம் செய்யப்படுகின்றது இறைவனுக்கு இன்று.
புஷ்ப நாக ஊஞ்சல்
பன்னிரண்டாம் நாள் மாலை பரதவாஜேஸ்வரத்தில் புஷ்ப ஊஞ்சல் உற்சவம். அம்மையப்பரை தியாகராஜப் பெருமான் போல அலங்காரம் செய்கின்றனர். பரத்வாஜேஸ்வரர் தியாகராஜராக ஊஞ்சல் சேவை தந்தருளுகின்றார்.
சீரார் பவளங்கால் முத்தம் கயிறாக
ஏராரும் பொற்பலகை ஏறி இனிதமர்ந்து
நாராயணன் அறியா நாள் மலர்த்தாள் நாய் அடியேற்க்கு
ஊர் ஆகத்தந்தருளும் புலியூர்
ஆரா அமுதன் அம்மையுடன் பொன்னூசல் ஆடுகின்றார் நாம் எல்லாம் உய்ய. ஒருருவம் ஓர் நாமம் இல்லதார்க்கு ஆயிரம் பேர் சொல்லி தெள்ளேணம் கொட்டோமோ என்று மாணிக்க வாசக சுவாமிகள் பாடியபடி பரம் பொருளுக்கு, பக்த வத்சலருக்கு, தியாக ராஜருக்கு, பரத்வாஜேஸ்வரருக்கு சிறப்பு சகஸ்ரநாம அர்ச்சனை நடைபெறுகின்றது.
புஷ்ப ஊஞ்சலில் தியாகராஜர்
புஷ்ப பல்லக்கிற்க்கு புறப்படும் அம்மையப்பர்
புஷ்ப பல்லக்கு
திருமுறையே சைவநெறிக் கருவூலம் தென் தமிழின் தேன்பா காகும்
திருமுறையே கயிலையின்கண சிவபெருமான் செவிமடுத்த செந்தமிழ் வேதம்
திருமுறையே நடராசன் கரம்வருந்த எழுதிய அருள் தெய்வ நூலாம்
திருமுறையே சொக்கேசன் மதிமலிவாய் மலர்ந்தருளும் சிறப்பிற்றாமால்
ன்று சிறப்பித்துப் பாடிய பன்னிரு திருமுறைகள் வெள்ளை யானை மேல் அலங்காரம் செய்யப்பெற்று திருவிதி வலம் வருகின்றன. ஓதுவார் மூர்த்திகள் பன்னிரு திருமுறைகளைப் பாடியபடி உதன் வலம் வருகின்றனர். ஐயனின் அருளை, கருணையை, புக்ழைப் பாடும் பதிகங்களுக்கும் அவருக்கு செய்யும் சிறப்பு செய்யப்படுகின்றது.
மாலை ஆறு மணியளவில் பஞ்ச மூர்த்திகளுக்கு உற்சவ சாந்தி சிறப்பு நவ கலச அபிஷேகம். சோமாஸ்கந்த மூர்த்தத்தில் மூன்று மூர்த்தங்கள், முருகர் வள்ளி தேய்வானையுடன், விநாயகர், சொர்ணாம்பாள் மற்றும் சண்டிகேஸ்வர் என்று ஒன்பது மூர்த்தங்களுக்கு தனித் தனியாக கலசம் ஸ்தாபித்து மந்திரப் பூர்வமாக சுத்திகரித்து நதியாய்ப் பாயும் திரவியங்களால் அபிஷேகம் நடைபெறுகின்றது. பின்னர் உற்சவ சாந்தி தேவார இன்னிசைக் கேட்டருளி யதாஸ்தானம் திரும்புகின்றனர் பஞ்ச மூர்த்திகள்.
இது வரை யான் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம் என்று திருக்காரணீச்சரத்தில் ஐயனுக்கு கோலாகலமாக நடைபெற்ற பெருவிழாவில் அவர் அளித்த அருட்காட்சிகளை உங்கள் வரை கொண்டு வர அனுமதித்த திருக்கயிலை நாதருக்கும் மலையரசன் பொற்பாவைக்கும் அனந்த கோடி நமஸ்காரங்கள். வந்து தரிசித்த அன்பர்களுக்கும் நன்றி. இப்பதிவுடன் இந்த தொடர் நிறைவடைகின்றது.
சொர்ணாம்பிகை அம்பாள் கல்யாண கோலம்
திருக்கலயாணம் முடிந்த பின்பு அம்மையப்பர் திருக்கயிலாய வாகனத்தில் சேவை சாதிக்கின்றார், ஐயனும் அம்மையும் உறையும் தம் திருக்கயிலாயம். சகல புவனங்களையும் படைத்தும் காத்தும், அழித்தும், அருளியும் மறைத்தும் ஐந்தொழில் புரியும் ஐயனும் அவரின் பாதி சக்தி அம்மையும் யோகத்தில் அமர்ந்து சகல புவனத்தையும் பரிபாலிக்கின்றனர். எனவே திருக்கயிலாய வாகனம் சிவபெருமானுக்கே உரியது பூதம், ரிஷபம், அதிகார நந்தி போல. அடாத செயல் செய்த இராவணனின் ஆணவத்தை ஐயம் தன்து இடது பெரு விரலால் சிறிதாக் அழுத்தி அடக்கியதை உனர்த்தும் வகையில் கைலாய வாகனத்தின் முன் ஆணவ இராவணனின் சிலை இருக்கும். திருவிதி உலா முடிந்து பஞ்ச மூர்த்திகள் திருக்கோவில் திரும்பியதும் கொடியிறக்கம்.இதுவரை தேவ லோகத்தை விட்டு பிரம்மோற்சவத்தை காண வந்த சகல தேவர்களையும் தங்கள் தங்கள் யதாஸ்தானம் செல்லுமாறு வேண்டப்பட்டு பெருவிழாவின் நிறைவை குறிக்கும் வகையில் கொடியிறக்கப்படுகின்றது. பின் சண்டிகேஸ்வரர் உற்சவம்.
பரத்வாஜேஸ்வரர் புறப்பாடு
திருக்கயிலாயத்தில் எப்போதும் பூத கணங்கள் புடை சூழ வலம் வருபவர் சிவபெருமான். ஐயனின் சேவகர்கள் பூத கணங்கள். ஐயன் ஆடும் போது பூத கணங்கள் வாத்தியம் வாசிக்கும் ஒரு அற்புதக் காட்சியை பரத்வாஜேஸ்வரத்தில் திருக்கல்யாண தினத்தன்று காணக் கிடைக்கப்பெற்றேன். அந்த அற்புத அனுபவத்தை அன்பர்களாகிய உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றேன். மொத்தம் 10-12 பேர் கொண்ட குழு அனைவரின் உடல் முழுவதும் திருநீற்று பட்டை கழுத்தில் ருத்திராக்ஷ மாலைகள். சிவ சொரூபமாக ( பூத கணங்களாகவே) அடியேன் கண்ணுக்குப்பட்டது. அவர்கள் வாசித்த தாள வாத்தியத்தின் பெயர் திருஉடல் திருக்கயிலாயத்தில் ஐயன் ஆடும் போது பூத கணங்கள் வாசிக்கும் அதே வாத்தியம். ஆறு திருஉடலுன் நான்கு பிரம்ம தாள்ம், இரண்டு கொம்பு, இரண்டு எக்காளம், சங்கு, மாட்டு கொம்பு வாத்தியம் ஒன்று என்று அவர்கள் வாசித்த போது நமக்கே ஆட வேண்டும் என்ற உணர்வு தோன்றியது. இவ்வாறு பூத கணங்கள் வாத்தியம் வாசிக்க திருக்கயிலை வாசன் தனது பரிவாரத்துடன் திருவீதி வலம் வந்த அழகைக் காண வார்த்தைகளே இல்லை. நடுவில் ஒருவர் கையில் தூபக்காலை வைத்துக் கொண்து ஆடினார், குழுவின் தலைவர் போல தோன்றினார் அவர் நந்தி தேவரை ஞாபகப்படுத்தினார். உண்மையிலேயே இது ஒரு தெய்வீக அனுபவம் அதை அளித்த அம்மையப்பருக்கு நன்றி.
ரிஷ்ப வாகனத்தில் சொர்ணாம்பாள் புறப்பாடு
மயில் வாகனத்தில் எழில் முருகன்
பின்னர் 11 மணியளவில் தீர்த்த வாரி பஞ்ச மூர்த்திகளும் இந்திர தீர்த்தத்திற்கு எழுந்தருளி தீர்த்தம் கொடுக்கின்றனர் சித்ரா பௌர்ணமியன்று. குளக்கரையில் அஸ்திர தேவருக்கு அபிஷேகம் நடைபெறுகின்றது. முளைப்பாலிகை இட்ட மண் மற்றும் கங்கணங்கள் கங்கை சேர்க்கப்படுகின்றன. திருக்குளத்தில் திருமுழுக்கிட்டு குளத்தை தூய்மைப்படுத்துகிறார் அஸ்திர தேவர் அப்போது பகதர்களும் குளத்தில் மூழ்குகின்றனர்.
தீர்த்தம் கொடுக்க வரும் காரணீஸ்வரப் பெருமான்
சிவ சொர்ணாம்பிகை அம்மன்
இந்திரக் குளக்கரையில் பஞ்ச மூர்த்திகள்
அடுத்த பதிவில் அம்மையப்பரின் திருக்கல்யாண கோலத்தைக் காணலாம்.
ஆன்ந்த நடராசர் தரிசனம்
விநாயகர் சிறப்பு அலங்காரம்