Friday, November 11, 2011

அகத்தீஸ்வரர் பிரம்மோற்சவம் -14

சிவமயம்

திருசிற்றம்பலம்

தென்னாடுடைய சிவனே! எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி!


அருள்மிகு அகிலாண்டேஸ்வரி உடனுறை அகத்தீஸ்வரர் திருக்கோவிலின் தக்ஷிணாயண புண்ய கால பிரம்மோற்சவத்தின் பத்தாம் திருநாள், தக்ஷிணாயண புண்ய காலமான ஆடி மாதம் முதல் நாள் அதிகாலை நடராஜர் உற்சவம் , சுவாமியும், சிவகாமி அம்பாளும், காரைக்காலம்மையாரும், பதஞ்சலி, வியாக்ரபாத முனிவரும், மாணிக்கவாசகரும் சிறப்பு அபிஷேகம் கண்டருளுகின்றனர். பின்னர் ஆடல்வல்லானும் சிவகாம சுந்தரியும் உதய காலத்தில் திருவீதி உலா வந்து அருளுகின்றனர்.



சூரியப் பிரபையில் நடராஜர் திருவீதி உலா




சிவானந்தவல்லி

பின்னர் பிரம்மோற்சவத்தின் முக்கிய நிகழ்ச்சியான தீர்த்தவாரி( தீர்த்தம் வழங்கும் நிகழ்ச்சி) திருக்குளத்தில் நடைபெறுகின்றது. பஞ்ச மூர்த்திகளும் குளக்கரையில் எழுந்தருளி பக்தர்களுக்கு தீர்த்தம் கொடுக்கின்றனர். இதற்கு முன் சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன. அங்குராப்பணத்தின் போது போடப்பட்ட முளைகள் இறைவனிடம் சேர்ப்பிக்கப்படுகின்றது மற்றும் காப்பு நீக்கப்படுகின்றது. பின்னர் பஞ்ச மூர்த்திகள் குளக்கரையில் எழுந்தருளி அஸ்திர தேவருக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெறுகின்றது பின்னர் அஸ்திர தேவருடன் பக்தர்கள் குளத்தில் மூழ்கி எழுந்து அருள் பெறுகின்றனர்.

தீர்த்தம் தர பஞ்சமூர்த்திகள் புறப்பாடு

விநாயகர்

சோமாஸ்கந்தர்

அம்பாள்

முருகர்

சண்டிகேஸ்வரர்

2 comments:

Sankar Gurusamy said...

சிறப்பான தரிசனம்.. ஓம் நமசிவாய..

பகிர்வுக்கு மிக்க நன்றி..

http://anubhudhi.blogspot.com/

S.Muruganandam said...

அனந்த கோடி நன்றிகள் சங்கர் ஐயா.