சிவமயம்
திருசிற்றம்பலம்
தென்னாடுடைய சிவனே! எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி!
திருசிற்றம்பலம்
தென்னாடுடைய சிவனே! எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி!
அருள்மிகு அகிலாண்டேஸ்வரி உடனுறை அகத்தீஸ்வரர் திருக்கோவிலின் தக்ஷிணாயண புண்ய கால பிரம்மோற்சவத்தின் ஒன்பதாம் திருநாள் காலை தொட்டி உற்சவம் கண்டருளுகிறார். மாலை ஐயன் நம் விருப்பங்களை நிறைவேற்றும் கற்பக விருக்ஷ வாகனத்திலும், அம்மை அதே போல விருப்பங்களை நிறைவேற்றும் தெய்வீகப்பசுவான காமதேனு வாகனத்திலும் எழுந்தருளி நம் குறைகளை களைகின்றனர். அந்த காட்சிகளை கண்டு இன்புறுங்கள் அன்பர்களே.


தொண்டை மண்டலத்தில் பொதுவாக பிரம்மோற்சவத்தின் போது முதல் நாள் மாலை ஸ்தல விருக்ஷத்தில் சோமாஸ்கந்தர் எழுந்தருளி அருள் பாலிப்பர். ஆனால் இத்திருக்கோவிலில் முதல்நாள் சிம்மவாகன சேவையும் ஒன்பதாம் நாள் கற்பக விருக்ஷ சேவையும் சிறிது மாறுபட்டுள்ளது.

துளக்கிலா விகிர்தனை விழவாரும்
மண்களார்துதித் தன்பரா யின்புறும்
வள்ளலை மருவித்தம்
கண்களார்தரக் கண்டு நங்
அகத்தீஸ்வரமுறை(கடிக்குளத் துறை)தரு கற்பகத்தைப்
பண்களார்தரப் பாடுவார்
கேடிலர் பழியிலர் புகழாமே.
2 comments:
அற்புத கற்பக வாகன தரிசனம்..
பகிர்வுக்கு மிக்க நன்றி..
http://anubhudhi.blogspot.com/
மிக்க நன்றி சங்கர் ஐயா.
Post a Comment