Showing posts with label ஒன்பதாம் திருநாள். Show all posts
Showing posts with label ஒன்பதாம் திருநாள். Show all posts

Sunday, March 17, 2013

செங்குந்த கோட்ட மாசி மக பெருவிழா -16

ஒன்பதாம் திருநாள் காலை
வெள்ளித்தொட்டி உற்ஸவம் 

எழில் கொஞ்சும் முருகன்

வள்ளி நாயகி


ஒன்பதாம் திருநாள் இரவு  சிவ சுப்பிரமணிய சுவாமி சிம்ம வாகனத்தில் எழுந்தருளி அருள் பாலிக்கின்றார். இந்த வருடம் சுவாமிக்கு  யோக நரசிம்மர் அலங்காரம்  செய்திருந்தனர்.  கால்களை குறுக்காக மடித்து  வைத்துக்கொண்டு கைகளை தொங்கவிட்டுக்கொண்டு யோக பட்டத்துடன் மாமனைப் போல் மருமகன் இங்கே அருட்காட்சி வழங்குகின்றான்.  ஆனால் மேல் திருக்கரங்களில் சங்கு சக்கரம் தாங்காமல் தனது சக்தி ஆயுதமும், வஜ்ராயுதமும் தாங்கியுள்ளார்.

யோக நரசிம்மர் அலங்காரத்தில்  சிவசுப்பிரமணிய சுவாமி



திருப்பதி திருமலையிலே மலையப்ப சுவாமி  இரண்டாம் திருநாள் காலை சிம்ம வாகன சேவையின் போது யோக நரசிம்மர் அலங்காரத்தில்தான் சேவை சாதிப்பார்.  

 மலர் அலங்காரத்துடன்



முருகப்பெருமானின்  சிம்ம வாகன சேவை 

Friday, November 11, 2011

அகத்தீஸ்வரர் பிரம்மோற்சவம் -13

சிவமயம்

திருசிற்றம்பலம்

தென்னாடுடைய சிவனே! எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி!


அருள்மிகு அகிலாண்டேஸ்வரி உடனுறை அகத்தீஸ்வரர் திருக்கோவிலின் தக்ஷிணாயண புண்ய கால பிரம்மோற்சவத்தின் ஒன்பதாம் திருநாள் காலை தொட்டி உற்சவம் கண்டருளுகிறார். மாலை ஐயன் நம் விருப்பங்களை நிறைவேற்றும் கற்பக விருக்ஷ வாகனத்திலும், அம்மை அதே போல விருப்பங்களை நிறைவேற்றும் தெய்வீகப்பசுவான காமதேனு வாகனத்திலும் எழுந்தருளி நம் குறைகளை களைகின்றனர். அந்த காட்சிகளை கண்டு இன்புறுங்கள் அன்பர்களே.


அச்சது பொடி செய்த அதிதீரன்


மலர் அலங்காரத்தில் சோமாஸ்கந்தர்

அம்பாள் செங்கோல் ஏந்தி ஜகத் ஜனனியாக
காட்சி தரும் அருட்கோலம்





ஐயனும் அம்மையும்

வெற்றி வேல் முருகன் தேவியருடன்


கற்பக விருக்ஷ வாகனத்தில் கற்பகம்

தொண்டை மண்டலத்தில் பொதுவாக பிரம்மோற்சவத்தின் போது முதல் நாள் மாலை ஸ்தல விருக்ஷத்தில் சோமாஸ்கந்தர் எழுந்தருளி அருள் பாலிப்பர். ஆனால் இத்திருக்கோவிலில் முதல்நாள் சிம்மவாகன சேவையும் ஒன்பதாம் நாள் கற்பக விருக்ஷ சேவையும் சிறிது மாறுபட்டுள்ளது.

விண்களார் தொழும் விளக்கிணைத்
துளக்கிலா விகிர்தனை விழவாரும்
மண்களார்துதித் தன்பரா யின்புறும்
வள்ளலை மருவித்தம்
கண்களார்தரக் கண்டு நங்
அகத்தீஸ்வரமுறை(கடிக்குளத் துறை)தரு கற்பகத்தைப்
பண்களார்தரப் பாடுவார்
கேடிலர் பழியிலர் புகழாமே.

காமதேனு வாகனத்தில் கற்பகவல்லி

சண்டிகேஸ்வரர்