ஒன்பதாம் திருநாள் காலை
வெள்ளித்தொட்டி உற்ஸவம்
எழில் கொஞ்சும் முருகன்
வள்ளி நாயகி
ஒன்பதாம் திருநாள் இரவு சிவ சுப்பிரமணிய சுவாமி சிம்ம வாகனத்தில் எழுந்தருளி அருள் பாலிக்கின்றார். இந்த வருடம் சுவாமிக்கு யோக நரசிம்மர் அலங்காரம் செய்திருந்தனர். கால்களை குறுக்காக மடித்து வைத்துக்கொண்டு கைகளை தொங்கவிட்டுக்கொண்டு யோக பட்டத்துடன் மாமனைப் போல் மருமகன் இங்கே அருட்காட்சி வழங்குகின்றான். ஆனால் மேல் திருக்கரங்களில் சங்கு சக்கரம் தாங்காமல் தனது சக்தி ஆயுதமும், வஜ்ராயுதமும் தாங்கியுள்ளார்.
யோக நரசிம்மர் அலங்காரத்தில் சிவசுப்பிரமணிய சுவாமி
திருப்பதி திருமலையிலே மலையப்ப சுவாமி இரண்டாம் திருநாள் காலை சிம்ம வாகன சேவையின் போது யோக நரசிம்மர் அலங்காரத்தில்தான் சேவை சாதிப்பார்.
மலர் அலங்காரத்துடன்
முருகப்பெருமானின் சிம்ம வாகன சேவை






