சிவமயம்
திருசிற்றம்பலம்
நுங்கம்பாக்கம், சென்னை , எல்லாம் வல்ல அகிலாண்டேஸ்வரி உடனுறை அகத்தீஸ்வரர் திருக்கோவிலின் தக்ஷிணாயண புண்ய கால பிரம்மோற்சவத்தின் ஆறாம் திருநாள் காலை சந்திரசேகரர் பல்லக்கில் எழுந்தருளி சூர்ணோர்சவம் கண்டருளுகின்றார். அன்று மாலை ஐயனும் அம்மையும் வெள்ளை யாணையில் எழுந்தருளி அருள் பாலிக்கின்றனர் அந்த காட்சிகளை கண்டு இன்புறுங்கள் அன்பர்களே.
மாலை யாணை வாகன சேவை அருட்காட்சிகள்







ஸ்ரீருத்ரத்தில் இரண்டு நாமாக்கள் ஐயன் தலைப்பாகை அணிந்தவர் என்று விளக்குகின்றது. அவையாவன உஷ்ணீஷணே மற்றும் பில்மினே என்பவை ஆகும் அவை. அதற்கேற்ப ஜடாமுடியுடன் விளங்கும் இறைவனை இங்கே தலைப்பாகையுடன் வரைந்துள்ளார் ஓவியர்.
அகத்தீஸ்வரரின் பிரம்மோற்சவம் தொடரும்…..
3 comments:
வணக்கம் தம்பி, நாங்களெல்லாம் ஒரு பிளாக்கை வச்சுட்டே ததிங்கணத்தோம் போடறோம். நீங்க எப்படி இத்தன பிளாக்குகளை சமாளிக்கிறீங்க?
என்ன ஐயா பண்றது ஆரம்பிச்சுட்டேன், எப்படியோ சமாளிக்கிறேன்.
ஒரே தொகுப்பாக இருந்தால் படிப்பவர்களுக்கு ஏதுவாக இருக்கும் என்று ஆரம்பித்தேன். சமயம் கிடைக்கும் போதுதான் எழுதுகின்றேன்.
உங்களைப் போன்றவர்களின் ஆசியும் நல்வாழ்த்தும் மீண்டும் எழுதும் ஊக்கத்தைத் தருகின்றது.
மிக்க நன்றி கந்தசாமி ஐயா. நானும் உடுமலப்பேட்டைக்காரனுங்கோ!
அற்புதமான ஐரவத யானையில் ஐயன் / அம்மையின் தரிசனம்..
பகிர்வுக்கு மிக்க நன்றி.
http://anubhudhi.blogspot.com/
Post a Comment