சிவமயம்
திருசிற்றம்பலம்
திருசிற்றம்பலம்
நுங்கம்பாக்கம், சென்னை , எல்லாம் வல்ல அகிலாண்டேஸ்வரி உடனுறை அகத்தீஸ்வரர் திருக்கோவிலின் தக்ஷிணாயண புண்ய கால பிரம்மோற்சவத்தின் ஐந்தாம் திருநாள் காட்சிகளை இப்பதிவில் கண்டு களிக்க உள்ளீர்கள். பிரம்மோற்சவத்தின் ஐந்தாம் நாள் இரவு மிகவும் முக்கியமான நாள் ஆகும் ஏனென்றால் அன்று சிவபெருமான் தனக்குரிய தர்ம தேவதையாம் வெள் விடை வாகனத்தில்(வெள்ளை ரிஷப வாகனத்தில்) எழுந்தருளி சம்பவீ தீக்ஷை அருளுகின்றார். மற்ற மூர்த்திகளும் தங்களுடைய வாகனங்களில் எழுந்தருளி அருள்பாலிக்கிறனர். எனவே அன்றைய தினம் அலங்காரம் மிகவும் சிறப்பாக செய்யப்படுகின்றது அந்த அழகை கண்டு அருள் பெறுங்கள்.


ஒயிலாக ஐயன் வெள் விடை மேல் அமர்ந்திருக்கும் அழகே அழகு அதைக் காணக் கண் கோடி வேண்டும். இவ்வழகைக்க்காணும் போது அன்னையின் ஞானப்பாலுண்ட ஆளுடையப்பிள்ளை திருஞானசம்பந்தரின் கோளறு பதிகம் தான் மனதில் எழுகின்றது ஐயன் தர்ம தேவதையாம் வெண் ரிஷப வாகனத்தில் எழுந்தருளும் அழகை இவ்விதம் அனுபவிக்கின்றார்.






வெல்லும் யானை முகன் முன் செல்ல


ருத்ராக்ஷ மாலையைக் காண படத்தை கிளிக்கி பெரிதாக்கி பாருங்கள்


உருவளர் பவள மேனி ஒளிநீறணிந்து
உமையோடும் வெள்ளை விடைமேல்...
உமையோடும் வெள்ளை விடைமேல்...

நஞ்சணி கண்டன் எந்தை மடவாள் தனோடும்
விடையேறு நங்கள் பரமன்
விடையேறு நங்கள் பரமன்
செப்பிள முலைநன்மங்கை ஒரு பாகமாக
விடையேறு செல்வன் .....

வேள்பட விழிசெய்தன்று விடை மேலிருந்து
மடவாள் தனோடும் உடனாய் ...
விடையேறு செல்வன் .....

வேள்பட விழிசெய்தன்று விடை மேலிருந்து
மடவாள் தனோடும் உடனாய் ...

பலபல வேடமாகும் பரன் நாரி பாகன்
பசுவேறும் எங்கள் பரமன் ...
ஐயன் வெள்ளி ரிஷபத்தில் ஆனால் அம்மை தங்க முலாம் ரிஷப வாகனத்தில் சேவை சாதிக்கின்றாள்.பசுவேறும் எங்கள் பரமன் ...


ரிஷப வாகனத்தில் சண்டிகேஸ்வரர்

அகத்தீஸ்வரரின் பிரம்மோற்சவம் தொடரும்…..
2 comments:
அற்புத தரிசனம்...
பகிர்வுக்கு மிக்க நன்றி..
http://anubhudhi.blogspot.com/
வருகைக்கு மிக்க நன்றி சங்கர் ஐயா
Post a Comment