இந்த 2011ம் ஆண்டின் நவராத்திரி அலங்கார நிறைவுப்பதிவாக நாம் பார்க்கப் போவது விரை மலர் குழல் வல்லி, மரை மலர் பதவல்லி விமலி திருமயிலை கற்பகவல்லியின் மஹேஸ்வரி திருக்கோல கொலு ஆகும்.
( ஊஞ்சல் மண்டபம்)
எல்லா விழாக்களுமே வெகு சிறப்பாகத்தான் கொண்டாடப்படுகின்றது திருமயிலையில். ஆகவே தான் என்பாக இருந்த அங்கம் பூம்பாவையை எழுப்ப அன்னையின் ஞானப்பாலுண்ட ஆளுடையப் பிள்ளையாம் ஞானசம்பந்தப்பெருமான் பதிகம்பாடியபோது ஒவ்வோரு பதிகத்திலும் ஒவ்வொரு விழாவைக்கூறி காணாமல் போதியோ பூம்பாவாய்! என்று பாடி பெண்ணாக்கினார். அவ்வளவு சிறப்பு இன்றும் ஒவ்வொரு விழாவிலும் கயிலையே மயிலையான திருமயிலையில் உள்ளது . இப்பதிவில் நவராத்திரி விழாவின் முழு கோலகலத்தையும் காண்கின்றிர்கள் அன்பர்களே.
ஊஞ்சல் மண்டபத்தில் திருக்கயிலைக் காட்சி நாள் தோறும் திருக்கயிலை நாதருக்கு ஒவ்வொரு விதமான கோலம். இன்றைய தினக்கோலம். நவதானியக் கோலம். கோளறு பதிகத்தில் காழி சம்பந்தர் பாடியது போல ஞாயிறு திங்கள் செவ்வாய் புதன் வியாழன் வெள்ளீ சனி பாம்பிரண்டுடனே ஆசறு நல்ல நல்ல அவை நல்ல நல்ல என்றபடி நவகிரங்கள் ஒன்பதும் ஐயனை வணங்கும் காட்சியை கான்கின்றீர்கள்.
(கொலு மண்டபம்)
முக்கிய கொலு கொலு மண்டபத்தில்,வேண்டும் வரம் அருளும் கற்பகவல்லி அன்னை நாளும் ஒரு சிறப்பு அலங்காரத்தில் கொலுக்காட்சி அருலூகின்றாள். அன்னையுடன் லக்ஷ்மியும், சரஸ்வதியும் உடன் கொலு இருக்கின்றனர். அம்மண்டபத்தில் , மயிலாப்பூர் ஐதீகமான , மலையரசன் பொற்பாவை பார்வதி தேவி மயில் உருவில் புன்னை மரத்தடியில் சிவ பூஜை செய்யும் காட்சி.
(முன் மண்டபத்தில்)
ஐயனின் முன் மண்டபத்தில் பொம்மைக்கொலு அந்த அற்புத பொம்மைக்கொலுவில் திருமயிலாப்பூர் ஐதீகம் பொம்மையாக இடம் பெற்றுள்ள காட்சி,
மலைமகள் கற்பகத்துடன் கொலுவிருக்கும்
செல்வம் வழங்கும் அலைமகள்

நவராத்திரி சமயத்தில் திருமயிலையில் வந்து தரிசிக்க கல்வி, செல்வம், வீரம் மூன்றையும் நாம் பெறலாம்.

திருநாளைப்போவார்நாயனார் வரலாறு
(முன் மண்டபத்தில்)
முன்மண்டபத்திலேயே தினமும் ஒரு நாயன்மார் வரலாறு சித்தரிக்கப்படுகின்றது. இன்றைய தினம் திருநாளைப் போவார் வரலாறு. திருப்புன்கூரிலே திருநாளைப் போவாருக்காக நந்தி விலகிய காட்சி .
நந்தி விலகும் வண்ணம் அற்புதமாக மோட்டர் வைத்து அமைத்திருந்தனர். ஒரு பக்கத்திலிருந்து அடுத்த பக்கம் நந்தி நகருன் வண்ணம் அமைத்திருந்தது அருமையாக இருந்தது.
மாஹேஸ்வரியாக கற்பகவல்லி
ஐயனைப் போலவே மானும் மழுவும் ஏந்தி, ஐயனுக்குரிய ரிஷப வாகனத்தில் சுகாசனத்தில் எழிலாக சர்வாபரண பூஷிதையாக, சகல செல்வங்களும் தரும் இமய கிரிராஜ தனயை , எழிலாக மாஹேஸ்வரியாக கொலு விற்றிருந்து அருளும் அற்புத காட்சி.

அன்னையின் முக அழகு


இத்திருக்கோவில் திருமயிலை தெற்கு மாடவீதியில் அமைந்துள்ளது. திருமயிலையைப்போலவே மலைமகள், அலைமகள், கலைமகள் கொலு, திருக்கயிலைக் காட்சி என்று சிறப்பாக இக்கோவிலிலும் நவராத்திரி கொலு கொண்டாட்டம் சிறப்பாக கொண்டாடப்படுகின்றது.
Youtubeல் பதிவேற்றிய அன்பர் rmsundaram1948 அவர்களுக்கு மிக்க நன்றி.
4 comments:
அற்புத தரிசனம்... ஓம் சக்தி தாயே சரணம்...
பகிர்வுக்கு மிக்க நன்றி..
http://anubhudhi.blogspot.com/
மிக்க நன்றி சங்கர் ஐயா.
அற்புதம்! காணத் தந்த உங்களுக்கு மனமார்ந்த நன்றிகள்!
வாருங்கள் கவிதாயினி, அம்மன் அருள் பரப்பும் அன்பரான தங்களுக்கு கற்பகவல்லியின் அலங்காரம் மிகவாக பிடிக்கும் என்று எதிபார்த்தேன்.
தற்போது புதிதாக இமயமலையில் ஒரி இனிய பயணம் என்ற ஒரு தொடரை தொடங்கியுள்ளேன் சமயம் கிட்டூம் போது வந்து தரிசியுங்கள்.
Post a Comment