Saturday, May 2, 2009

திருக்காரணி சூரிய விருத்த சேவை

இரண்டாம் நாள் காலை சூரிய விருத்தம்


திருக்காரணியில் சித்திரைப் பெருவிழாவின் இரண்டாம் நாள் காலை காரணீஸ்வரப் பெருமான் சூரிய விருத்தத்தில் பஞ்ச மூர்த்திகளுடன் திருவீதி உலா வந்து அருள் புரிகின்றார். சிவபெருமானுக்கு மூன்று கண்கள் , எனவே அவர் முக்கண்ணர் என்றழைக்கப்படுகின்றார். சிவபெருமானுக்குரிய சிறப்பு இந்த நெற்றிக் கண். சூரியன், சந்திரன், மற்றும் அக்னியே ஐயனின் மூன்று கண்கள் என்பது ஐதீகம்.


பகலில் கோடி சூரிய லாவண்ய பவள வண்ண எம்பெருமான் தனது வலது கண்ணான சூரிய விருத்த்தில் எழுந்தருளி , சூரியன் எல்லா ஜீவராசிகளையும் வாழ வைப்பதை உணர்த்தும் வகையில் உலா வந்து அருளுகின்றார்.




இத்திருத்தலத்தில் காலை மற்றும் மாலை இரு வேளைகளிலும் ஐந்திருமேனிகள் திருவீதி உலா வந்து அருள் பாலிப்பது சிறப்பு.


"பானு மண்டல மத்யஸ்தா" என்பது ஸ்ரீ லலிதா சகஸ்ரநாமத்தில் அம்பாளை போற்றும் ஒரு துதி. இங்கே அம்மையப்பர்( சொர்ணாம்பாள்-காரணீஸ்வரர்) அந்த சூரிய மண்டலத்தின் நடுவே தரும் அருட்காட்சி கண்டு களியுங்கள்.


2 comments:

குமரன் (Kumaran) said...

சிவசூரியனைக் கண்டு தரிசித்தேன். நன்றி கைலாஷி ஐயா.

S.Muruganandam said...

சிவ சூரியாய நம: