ஐந்தாம் நாள் மாலை வெள்ளி விருஷப சேவை
பெருவிழாவின் ஐந்தாம் நாள் மிகவும் முக்கியமான நாள் ஏனென்றால் ஐயன் தனது ரிஷப வாகனத்திலும், மற்ற மூர்த்திகளும் தத்தம் வாகனத்தில் நம் இல்லம் தேடி வந்து தரிசனம் தந்து அருளுகின்றனர்.
பெருவிழாவின் ஐந்தாம் நாள் மிகவும் முக்கியமான நாள் ஏனென்றால் ஐயன் தனது ரிஷப வாகனத்திலும், மற்ற மூர்த்திகளும் தத்தம் வாகனத்தில் நம் இல்லம் தேடி வந்து தரிசனம் தந்து அருளுகின்றனர்.

ஐயன் இன்ரைய தினம் தர்ம தேவதையாம் வெள்ளை ரிஷபத்தில் எழுந்தருளி அருள் பாலிக்கின்றார். எனவே எல்லாத்தலங்களிலும் ஐயனுக்கு வெள்ளி ரிஷப வாகனமே அதிகமாக பயன்படுத்தப்படுகின்றது. அதே சமயம் அம்மன் தங்க ரிஷப வாகனத்தில் சேவை சாதிக்கின்றாள்.

ஆணவத்தின் வடிவான சூரபத்மனை சுப்பிரமனியர் வதம் செய்யவில்லை சம்ஹாரம் செய்து அருளினார். ஞானவேல் பட்டதால் அவன் ஆணவம் நீங்கி முருகன் அருள் பெற்றான். வண்ண மயில் தோகை விரித்தாடும் போது ஓம் என்னும் பிரணவ வடிவம். எனவே பிரணவத்த்தின் பொருளை பரமனுக்கு உரைத்த சுவாமிநாதரை மயில் வாகனத்தில் தரிசனம் செய்யும் போது நம் அஞ்ஞானம் விலகும்.
விருஷப சேவை தொடரும்....
No comments:
Post a Comment