பதினோராம் திருநாள் மாலை புஷ்ப பல்லக்கு

அதிகாலையில் சிவ சொரூபமே அனைத்து ஜீவராசிகளும் என்று உணர்த்திய ஆதி தம்பதிகள் மாலை புஷ்ப பல்லக்கில் எழுந்தருளி அருள் பாலிக்கின்றனர்.

குனித்த புருவமும் கொவ்வைச் செவ்வாயில் குமிண் சிரிப்பும்
பனித்த சடையும் பவளம் போல் மேனியில் பால் வெண்ணீறும்
இனித்தமுடைய எடுத்த பொற்பாதமும் காணப் பெற்றால்மனித்த பிறவியும் வேண்டுவதே இம்மாநிலத்தே.
ஆனந்த தாண்டவ நடராஜ மூர்த்தி
மலர்களினாலே எவ்வளவு தத்ரூபமாக எம் ஆடல் வல்லானை அமைத்திருக்கின்றனர் பாருங்கள்.
மலர்களினாலே எவ்வளவு தத்ரூபமாக எம் ஆடல் வல்லானை அமைத்திருக்கின்றனர் பாருங்கள்.

புஷ்பப் பல்லகில் அம்மையப்பர்


பூரணி புராதனி சுமங்கலை சுதந்தரி
புராந்தகி திரியம்பகி, எழிற்
புங்கவி விளங்குசிவ சங்கரி சகஸ் ரதள
புட்பமிசை வீற்றிருக்கும்
நாரணி மறைதீத நாயகி குணாதீத
நாதாந்தச் சக்தி், என்று உன்
நாமமே உச்சரித்திருக்கும் அடியர் நாமமே
நான் உச்சரிக்க வசமோ?
ஆரணிச் சடைக் கடவுள் ஆரணி எனப்புகழ்
அகிலாண்ட கோடி ஈன்ற
அன்னையே! பின்னையும் கன்னி என்று மறை பேசும்
ஆனந்த ரூப மயிலே!
வாரணியும் இரு கொங்கை மாதர் மகிழ் கங்கைபுகழ்
வளமருவு தேவையரசே!
வரை ராசனுக்கு இருகண்மணியாய் உதித்த மலை
வளர் காதலிப் பெண் உமையே!
2 comments:
அம்மையப்பரின் அபயக்கர அருள் பாலிப்பை அகிலமெல்லாம் அருளியமைக்கு மிக்க நன்றி,
அபயக்கர அருளை எமது அகத்தில் இறக்கி அமைதி அருளினார்.
சண்டிகேஸ்வரர் முன்னே மும்முறை கையும் தட்டினேன்.
இன்பமே சூழ்க!
எல்லோரும் வாழ்க!!
//இன்பமே சூழ்க!
எல்லோரும் வாழ்க!!//
அப்படியே ஆக அம்மையப்பர் அருளட்டும்.
Post a Comment