ஆறாம் நாள் காலை பஞ்ச மூர்த்திகள் மங்களகிரி விமான சேவை

பொதுவாக காலை வேளைகளில் அலங்காரமும் சிறிது அளவாகவே இருக்கும், வாகனங்களுக்கு பதில் விமானங்கள் மற்றும் பல்லக்கு பயன் படுத்தபப்தும் ஏனென்றால் இரவு முழுதும் பஞ்ச மூர்த்திகள் மாடவீதி வலம் வந்திருப்பர் உடனே காலை புறப்ப்பாடு ஆக வேண்டும், இன்னொன்று வெயில் அநேகமாக பெருவிழாக்கள் எல்லாம் கோடையில் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது. ஒரே ஒரு சேவை அதிகார நந்தி சேவை காலையில் சிறப்பாக நதைபெறுகின்றது, எனவேதானோ அதிகார நந்தி சேவை சூரிய உதய காலத்தில் நடைபெறுகின்றது.

விமானங்கள் அஸ்த்மானகிரி, சவுடல் விமானம், மங்களகிரி என்று பல இடங்களில் பல்வேறு பெயர்களில் அழைக்கப்படுகின்றன.
No comments:
Post a Comment