பத்தாம் நாள் அதிகாலை ஆனந்த கூத்தர் தரிசனம்


பத்தாம் திருநாள் அதிகாலை 4 மணியளவில் ஆனந்த நடராஜருக்கும், சிவகாம சுந்தரிக்கும், மற்றும் மாணிக்க வாசகர், காரைக்காலம்மையார், பதஞ்சலிமுனிவர்,வியாக்ரபாதருக்கும் சிறப்பு அபிஷேகம் நடைபெறுகின்றது . பின்னர் விநாயகர் முன் செல்ல சித்சபேசர் இந்திர வினாமத்திலும் . சிவானந்த வல்லி அம்மை அஸ்தமான கிரி விமானத்திலும் அருட்தரிசனம் தந்து மாட வீதி உலா வருகின்றனர்.

சிவகாம சுந்தரி அம்பாள்
தனத்தால் இயன்ற தனிச்சபையில்
நடிக்கும் பெருமான் தனக்கென்றே
இனத்தால் உயர்ந்த மணமாலை
இட்டுக்க்களித்த துரைப் பெண்ணே
மனத்தான் விளங்கும் சிவகாம
வல்லிக்கனியே மாலொடும் ஒர்
அனத்தான் புகழும் அம்மே இவ்
வடியேன் உனக்கு அடைக்கலமே.
தனத்தால் இயன்ற தனிச்சபையில்
நடிக்கும் பெருமான் தனக்கென்றே
இனத்தால் உயர்ந்த மணமாலை
இட்டுக்க்களித்த துரைப் பெண்ணே
மனத்தான் விளங்கும் சிவகாம
வல்லிக்கனியே மாலொடும் ஒர்
அனத்தான் புகழும் அம்மே இவ்
வடியேன் உனக்கு அடைக்கலமே.
No comments:
Post a Comment