குமரன் ஐயா அவர்கள் அடியேனையும் ஒரு பொருட்டாக மதித்து பட்டாம்பூச்சி விருது கொடுத்து கௌரவித்துள்ளார்கள்
அடியேனுடன் அவர் விருது வழங்கிய
வண்ணப்படங்கள் கைலாஷி என்று விருது கொடுத்ததால் இப்பதிவில் படங்கள் இல்லாமல் இருந்தால் எனவே திருவான்மியூரில் அருள் பாலிக்கும் தியாகராஜப்பெருமானின் அருட்காட்சியை கண்டு மகிழுங்கள்.
நாகங்கள் தவழும் ஐயனின் திருமேனியில் கிளிகள், மைனாக்கள், பட்டாம் பூச்சிகள் விளையாடும் அழகு தான் என்னே. ( பட்டாம் பூச்சி விருது என்பதால் பட்டாம் பூச்சி தரிக்கும் ஐயனின் இப்படம்)
நாகங்கள் தவழும் ஐயனின் திருமேனியில் கிளிகள், மைனாக்கள், பட்டாம் பூச்சிகள் விளையாடும் அழகு தான் என்னே. ( பட்டாம் பூச்சி விருது என்பதால் பட்டாம் பூச்சி தரிக்கும் ஐயனின் இப்படம்)
பட்டாம் பூச்சி விருதின் விதிமுறைப்படி பட்டாம் பூச்சியைப் பறக்கவிடவேண்டியது அவசியம். எனவே அடியேன் இவ்விருதினை கீழ்க்கண்டவர்களுக்கு பரிந்துரை செய்கிறேன்.
1. ஜீவா
என்னும் ஜீவா வெங்கட்ராமன் இசையும் ஆன்மீகமும் இவரது இருகண்கள். தமிழிசையையும் அதிகமாக நேசிக்கும் இவர் தொண்டு சிறக்க வாழ்த்துகின்றேன்.
கட்டுமானத்துரையைப்பற்றிய பல அரிய தகவல்களை தனது வலைப்பூவில் பதியும் இவர் சேவை இன்னும் தொடர வாழ்த்துக்கள்.
3. கவிநயா
கவிதாயினி கவிநயா, அருமையாக கவிதைகளை பதைக்கின்றார் இவர். அதுவும் அம்மன் மேல் இவர் இயற்றும் பாடல்கள் அருமை. இன்னும் பல்லாயிரம் பாடல்கள் படைக்க வாழ்த்துகின்றேன்.
4. சூரி
என்னும் தஞ்சை சுப்பு இரத்தினம் ஐயா. ஆன்மீகச் செம்மல் இவர். இவருக்கும் இசையிலும் ஆர்வம் உண்டு, சிறிது கவிதையும் வரும். ஐயா வாழ்த்த வயதில்லை வணங்குகின்றேன்.
தங்கள் அனைவரின் தொண்டு சிறக்க அந்தக் கயிலை நாதரை வேண்டிக்கொள்கிறேன்.
தாங்கள் அனைவரும் இனி பின்பற்ற வேண்டிய விதிமுறைகள்.
பட்டாம் பூச்சி பறக்கும் முறை:
1. இந்த பட்டாம்பூச்சி இலச்சினை உங்கள் பதிவு பக்கத்தில் இருக்க வேண்டும்
2. உங்களுக்கு விருது கொடுத்த நபரின் இணையதள முகவரிக்கு ஒரு இணைப்பு கொடுக்க வேண்டும்
3. மூன்று அல்லது அதற்கு மேலான பதிவர்களைத் தேர்வு செய்ய வேண்டும்
4. தேர்வுசெய்யப்பட்ட பதிவுகளிற்கு உங்கள் பதிவில் இருந்து இணைப்பு தர வேண்டும்
5. நீங்கள் தேர்ந்தெடுத்த பதிவுகளில் அவர்களுக்கு இச்செய்தியை தெரிவிக்க வேண்டும்
***
தாங்களும் தங்களை கவர்ந்தவர்களுக்கு பட்டாம் பூச்சி விருது அளித்து கவுரவிக்குமாறு வேண்டிக்கொள்கிறேன்.
9 comments:
பொருத்தமான 'வண்ணப்'படத்துடன், பதிவு அட்டகாசம்.
தியாகராஜரும், திரிபுரசுந்தரியும் கொள்ள அழகு!
விருதுக்கு நன்றிகள் ஐயா
!
நானும் பட்டாம்பூச்சியை பறக்க விட்டிருக்கிறேன்,
என்ன கொஞ்சம் முன்னமே:
http://jeevagv.blogspot.com/2009/01/blog-post_31.html
முதலில் நானும் முதலில் விருது பெற்றவர்களுக்கு தரலாமா? வேண்டாமா என்று குழப்பத்தில்தான் இருந்தேன், ஆனால் பலர் பல தடவை விருது பெற்றிருப்பதைக் கண்டேன். ஒருவர் மொத்தம் ஆறு விருதுகள் பெற்றதாக குறிப்பிட்டிருந்தார். ஆகவே தங்களுக்கு இரண்டாவது விருதுக்கு வாழ்த்துக்கள். முடிந்தால் இன்னும் சில பட்டாம்பூச்சிகளை பறக்க விடுங்கள். முதல் தடவை இசை இன்பம் கண்டீர்கள், இத்தடவை ஆன்மீக அனுபவம் காணுங்கள்.
திவா ஐயாவின் பதிவை சென்று பார்த்தேன் அவர் முதலிலேயே வடுவூர் குமார் அவர்களுக்கு விருது வழங்கியுள்ளார்.
வாழ்த்துக்கள் கைலாஷி ஐயா!
பட்டாம்பூச்சியைப் போலவே பலவண்ணப் படங்கள் அல்லவா தங்கள் ஒவ்வொரு பதிவிலும்! அதுவும் காணக் கிடைக்காத பல அரிய படங்கள்! நண்பர்களை அனுப்பியேனும் நேரிலேயே எடுத்த படங்கள்!
அதற்காகவே பட்டாம்பூச்சி வாகனத்தில் உம்மைப் பறக்க வருமாறு கூடல் குமரக் கடவுளிடம் வேண்டிக் கொண்டேன்! குமரக் கடவுளும் அதே எண்ணத்தில் சிரமசைக்க பிரார்த்தனை பலித்ததே!
வாழ்த்துக்கள்! வாழ்த்துக்கள்! :)))
மிக்க நன்றி KRS ஐயா. விருதுக்கு பின்னால் இவ்வளவு வேலைகள் நடந்துள்ளனவா?
//நண்பர்களை அனுப்பியேனும் நேரிலேயே எடுத்த படங்கள்!//
நண்பர்கள் அடியேனுடன் உடன் தரிசனம் செய்ய வருபவர்கள், பணி நிமித்தம் அடியேன் செல்ல முடியாத போது அவர்கள் சென்றால் அவர்களிடம் அடியேன் தரிசனம் செய்வதற்காக படங்களை வாங்குவேன் அப்படியே அவற்றை பதிவிடுகின்றேன். எல்லாம் அவன் செயல்.
மீண்டும் நன்றி KRS ஐயா.
வாழ்த்துகள் கைலாஷி ஐயா.
மிகப்பொருத்தமானவர்களுக்கு விருதினை வழங்கியிருக்கிறீர்கள். அவர்களுக்கும் வாழ்த்துகள்.
நன்றி குமரன் ஐயா, தாங்களும் கண்ணபிரான் ஐயாவும் ஆரம்பித்து வைத்தீர்கள் தொடரட்டும்.
வண்ணப் படங்கள் வழக்கம் போல கண்ணையும் கருத்தையும் கவர்கின்றன. விருது பெற்றதற்கு வாழ்த்துகளும், என்னையும் நினைவு கூர்ந்து அளித்தமைக்கு மிகுந்த நன்றிகளும். சீக்கிரம் 'நினைவின் விளிம்பில்...' பறக்க விடுகிறேன் :)
பட்டாம் பூச்சிகள் பறக்கட்டும். நன்றி கவிநயா.
Post a Comment