Wednesday, May 13, 2009

திருக்காரணி 9ம் நாள் உற்சவம்

9ம் நாள் காலை அஸ்தமான கிரி உற்சவம்

அம்மையப்பரின் அழகைக் காணக் கண் கோடி வேண்டும்

விமானத்தில் சொர்ணாம்பிகை அம்பாள்


விமானத்தில் சிவ சுப்பிரமணியசுவாமி
**********

9ம்நாள் மாலை பிக்ஷாடணர் உற்சவம்


மாலை ஆறு மணியளவில் பிக்ஷாடணர் உற்சவம் ( இரவலர் திருக்கோலம்) . தாருகா வனத்து இருடிகளின் கர்வத்தை அடக்க மஹா விஷ்ணு மோகினியாகவும், சிவ பெருமான் சுந்தரராக , பிட்சாடனராகவும் ( எழுந்தருளி முனிவர்களின் செருக்கை அடக்கியதை கூறும் வகையில் பிக்ஷாடணர் உற்சவம் நடைபெறுகின்றது. அன்னை பார்வதி அன்னபூரணி கோலத்தில் அன்னம் பாலிக்கும் கோலத்தில் ஐயனை பார்த்தவாறு திருவீதி உலா வருகின்றார்.குண்டோதரனும் மானும் பிச்சையப்பரை எப்போதும் பிரிவதில்லை.

மேலும் பிச்சாண்டவரைப் பற்றி அறிந்து கொள்ள கிளிக்குக இங்கே பிச்சைத் தேவர்

அன்ன பூர்ணே சதாபூர்ணே சங்கரப் பிராண வல்லபே

ஞான வைராக்ய சித்தர்த்யம் பிக்ஷாம் தேஹி பார்வதி


சகல ஜீவராசிகளுக்கும் பூரணமாக அன்னம் பாலிக்கும் அன்னபூரணியே,

சகல் சம்பத்துக்களும் பூரணமாக வழங்குபவளே. சங்கரனாம் பரமசிவனின் உயிரானவளே. இமவான் மகளே, பார்வதி தேவியே, அம்மா ஞானத்தையும், வைராக்கியத்தையும் பிச்சையாகக் கொடு தாயே.இன்றைய ஒன்பதாம் நாள் அன்னையை வைடூரியம் சூடும் வைணவியாக வழிபடுவோம்.

வைடூரியம்


நளிகொள் நின்னை நாடுகின்ற

நசையை யென்றும் நல்கிடுவாய்

நடஞ்செய் கோனை நினைவார்க்கு

நாளும் நிறைசேர் நாரியளே


களிகொள் உள்ளந் தூய்மையுறக்

கருணை தந்தீர்த் தாள்பவளே

கனலும் மண்ணும் குளிர்கின்ற

காற்றும் புனலும் கூடுகின்ற


வெளிகொள் பஞ்ச பூதமுறும்

வினையேன் வாழ்வில் வாழ்பவளே

விரைகொள் பாதாம் புயத்தாளே

வைடூரியங் கொள் வைணவியே


அளி கொள் நெல்லை காந்திமதி

அறங்கூர்ச் சைதைப் பொற்கொடியே

அடிமை கொண்டாய் அருள்வாமி

அன்னாய் சிவசொர் ணாம்பிகையே


நூற்பயன்:

பத்தியால் அன்றிசேர் சொற்கவிப் பாங்கொடே

உத்தியால் செய்திடா ஒண்மணிமாலையாய்

கத்திடுங் கார்கடல் சூழுல காள்பவர்

நித்தமும் நாரி கொள் நெஞ்சினால் நல்லவரே.


அன்னம் பாலிக்கும் அன்னபூரணி

கோலத்தில் சொர்ணாம்பாள்
கோபுர வாசல் தரிசனம்

ஒன்பதாம் திருநாள் தாத்பர்யம்: பக்தியில் ஒன்பது வகை உண்டு. அவையாவன 1.ச்ரவணம் - கேட்டல். 2. கீர்த்தனம் - புகழ் பாடுதல், 3.ஸ்மரணம் - மனதில் சிந்தித்தல், 4. பாத ஸேவனம் - திருவடி பிடித்து அடிமை செய்தல், 5. அர்ச்சனம் - மலர்கள் கொண்டு அர்சித்தல். 6.வந்தனம் -ஸாஷ்டாங்கவர்தம், 7.தஸ்யம் - தாசனாக இருந்து பணி புரிதல், 8.ஸக்யம் - நண்பனாக இருந்து பழகுதல், 9. ஆத்ம நிவேதனம் - தன்னைத்தானே அர்பித்தல். இந்த நவ விதமான பக்தியில் ஏதாவது ஒன்றால் அம்மையப்பா உம்மை பற்றி இனி பிறப்பு இல்லா நிலை அருள் என்று வேண்டுவதே ஒன்பதாம் நாளின் தாத்பர்யம்.

No comments: