பனி படர்ந்த மலைச் சிகரங்கள்
கேதார் சிகரங்கள்
இவ்வருடம் ஃபடாவிலிருந்து காலை சுமார் 8 மணியளவில் கேதாரநாதத்திற்கு ஹெலிகாப்டர் மூலம் புறப்பட்டோம். சுமார் 7 நிமிடங்களில் திருக்கேதாரத்தை அடைந்தனர். வானிலை சரியாக இருந்ததால் அருமையான தரிசனம் கிட்டியது. கேதார மலைச்சிகரங்களும் மேகம் இல்லாமல் அருமையாக இருந்தது.
இவ்வரிய காட்சிகளை அடியேனின் நண்பர் புகைப்படகலைஞர் திரு. சுந்தர் அவர்கள் அருமையாக புகைப்படம் எடுத்துள்ளார் அப்புகைப்படங்களில் சிலவற்றை இப்பதிவுகளில் காண்கின்றீர்கள்.
மேலிருந்து சேதத்தைப் பார்த்து வருந்தினோம். முன்னர் சென்ற நடைபாதை பல இடங்களில் முற்றிலுமாக அழிந்து விட்டது. சோன்பிரயாகையிலும் சேதம் அதிகம் புது கட்டிடங்கள் கட்டிக்கொண்டிருக்கின்ற்னர்.
ஹெலிகாப்டரிலிருந்து சேதத்தை பார்த்தபோது மிகவும் துயரமாக இருந்தது. அலக்நந்தாவின் குறுக்கே இருந்த பாலம், திருக்கோயில் அருகில் இருந்த மற்ற கட்டிடங்கள், ஆதி சங்கரர் ஆலயம், அவரது நினைவிடம், அன்பர்கள் உணவருந்திய கூடம். கடைகள், தங்கும் விடுதிகள், சுற்றுச்சுவர் ஈசானேசுவரர் சன்னதி அனைத்தும் வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டுவிட்டன.
வெள்ளம் வந்த பாதை
திருக்கோயில் மட்டும் தப்பித்துக் கொள்ளும் வகையில் ஒரு செவ்வக வடிவப்பாறை எவ்வாறு வந்தது அது மட்டும் அங்கேயே எவ்வாறு நின்றது கோயில் மட்டும் எவ்வாறு தப்பியது என்பதை அவ்விறைவனின் லீலை, மிகப்பெரிய அதிசயம் என்றே சொல்லவேண்டும். அப்பாறையை அப்படியே விட்டு வைத்துள்ளனர். அடையாளத்திற்காக காவி பூசி வைத்துள்ளனர்.
இன்று அமைதியாகப் பாயும் அலக்நந்தா அன்று எவ்வளவு சேதத்தை எற்படுத்தியது.
இன்று திருக்கோவிலின் நிலை
பாறையும் ஆலயமும்
எங்கிருந்து எப்படி எப்போது இந்த செவ்வகவடிவப்பாறை வந்தது என்று தெரியவில்லை. இதனால் தண்ணீர் இருபக்கமும் பிரிந்து ஓட ஆலயம் மட்டும் தப்பித்துக்கொண்டது சுற்றி இருந்த மற்ற கட்டிடங்கள் அழிந்தன, அங்கிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்களும் சிவனடி சேர்ந்தனர். எதற்காக இந்த இழப்பு அவர்தான் அறிவார்.
திருக்கேதார காட்சிகள் இன்னும் பல உள்ளன
திருக்கேதார காட்சிகள் இன்னும் பல உள்ளன
யாத்திரை தொடரும் . . . . . . .
4 comments:
அருமையான இடம்....படங்களும் அழகு...
மிக்க நன்றி. தொடருங்கள் இனியும் அருமையான படங்கள் உள்ளன.
//எங்கிருந்து எப்படி எப்போது இந்த செவ்வகவடிவப்பாறை வந்தது என்று தெரியவில்லை. இதனால் தண்ணீர் இருபக்கமும் பிரிந்து ஓட ஆலயம் மட்டும் தப்பித்துக்கொண்டது சுற்றி இருந்த மற்ற கட்டிடங்கள் அழிந்தன, அங்கிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்களும் சிவனடி சேர்ந்தனர். எதற்காக இந்த இழப்பு அவர்தான் அறிவார். //
இறைவனை தவிர யார் அறிவார்? பார்க்கவே எவ்வளவு கஷ்டமாய் இருக்கிறது, சங்கரர் சமாதி, உணவு கூடங்கள் அங்குள்ள அரிசியை சாப்பிட வந்த குருவி கூட்டங்கள் எல்லாம் நினைவில் பசுமையாக இருக்கிறது. கோவிலின் பின் புறம் சம்பந்தர் தேவாரம், அதன் எதிரில் பனி குவியல் எவ்வளவு பேர் யாசிப்பவர் அங்கு இருந்தனர் இப்போது யாரும் இல்லை என்பதை தொலைக்காட்சியிலும் காட்டினார்கள் , உங்கள் பதிவில் படிக்கும் போது இன்னும் வருத்தமாய் இருக்கிறது.
முதலில் சென்று தரிசித்தவர்களுக்கு மட்டுமே எவ்வளவு அழிந்து விட்டது என்று புரியும். இறைவன் ஏன் இவ்வாறு சோதனை செய்தான் என்பது மட்டுமே புரியாத புதிராக உள்ளது.
Post a Comment