Showing posts with label அலக்நந்தா. Show all posts
Showing posts with label அலக்நந்தா. Show all posts

Thursday, December 1, 2016

இமயமலையில் ஒரு இனிய யாத்திரை - 62

பத்ரிநாதர் தரிசனம் 


யாத்திரையின் நிறைவாக பத்ரிநாதம் வந்தோம், பத்ரிநாதரின் திவ்ய தரிசனம் பெற்றோம். விஷ்ணு சகஸ்ரநாமம் சேவித்தோம், அதிகாலை திருமஞ்சனம் நடைபெறும் அழகைக் கண்டோம், 





ஹனுமன் சட்டி 


என்னதான் அரசாங்கம் எவ்வளவு செலவு செய்து வருடாவருடம் நிலச்சரிவுகளை சரி செய்தாலும். கடற்கரையில் குழந்தைகள்  மணல் வீடு கட்டினாலும் அடுத்து ஒரு அலை வந்து அதை அழித்துவிட்டுப் போவது போல  மறுவருடம் மழை வந்து மீண்டும் நிலச்சரிவு, சேதம் என்பது தொடர்கதை ஆகிவிட்டது. 




பிரம்ம கபாலம் 

அலக்நந்தா ஆறு 


பத்ரிநாதத்தின் சிறப்புகளைப் பற்றி அறிந்து கொள்ள இங்கு செல்லுங்கள் 


















தப்த் குண்டம் 


ருத்ராக்ஷம் 


பின்னர் மானா கிராமம் சென்று வந்தோம் அவ்வனுபத்தை அடுத்த பதிவில் காணலாம் அன்பர்களே. 
                                                             யாத்திரை தொடரும் . . . . . . .

Tuesday, November 8, 2016

இமயமலையில் ஒரு இனிய யாத்திரை -53

இப்பதிவில் திருக்கேதாரத்திலிருந்து திரும்பி வந்த போது எடுத்த புகைப்படங்கள் இடம் பெறுகின்றன. திரும்பி வரும் போதும் 7 மணித்துளிகள் சமயம் பிடித்தது.  ஹெலிகாப்டரில்  உடல் எடையைப் பொறுத்து பிரயாணிகளை ஏற்றுகின்றனர். எனவே குழுவினர் அனைவரும் ஒன்றாக பயணம் செய்வது   இயலாது. 



ஹெலிகாப்டர் தளம்  



புதிதாக கட்டப்பட்டுள்ள பாலம், பாதை
 தற்காலிக தங்கும் விடுதிகள் 

புதியப்படித்துறை 

பைரவர் ஆலயம்





ஹெலிகாப்டலிருந்து எடுத்த புகைப்படங்கள்  தொடர்கின்றன

புது நடை பாதை

அலக்நந்தா ஆறு  




பறவைப் பார்வையில்  ஃபடா 

அடுத்து குப்தகாசியில் விஸ்வநாதரை தரிசனம் செய்தோம்.  அக்காட்சிகளை அடுத்த பதிவில் காணலாம் அன்பர்களே. 

                                                             யாத்திரை தொடரும் . . . . . . .

Sunday, November 6, 2016

இமயமலையில் ஒரு இனிய யாத்திரை -52

திருக்கேதாரம் 

தற்போது  புதிதாக சரஸ்வதி  நதியின் குறுக்கே ஒரு  பாலம் கட்டியுள்ளனர். சரஸ்வதி அலக்நந்தா கூடுதுறையை அழகாக கட்டியுள்ளனர்.  ஹெலிகாப்டர் தளத்திலிருந்து ஆலயம் வரையில் பாதை அமைத்துள்ளனர். ஆலயத்திற்கு அருகில் எந்தவித கட்டிடங்களையும் அமைக்கவில்லை. 
விநாயகர் 


கலசம் 

கோபுர கோஷ்டத்தில் சிம்மம்

குழலூதும் கண்ணன் 







தற்காலிக தங்கும் விடுதிகள் கோவிலிருந்து தூரத்தில் அமைத்துள்ளனர். தற்போது ஆலயம் சுத்தம் செய்யப்பட்டு மின்னுகின்றது. புது வர்ணம் பூசியுள்ளனர்ஒரு பக்கக்கதவு மூடியே உள்ளது இன்னும் பராமரிப்பு பணிகள் நடந்து கொண்டிருக்கின்றன. முன் இருந்த நிலையை அடைய எத்தனை வருடங்கள் ஆகும் என்று தெரியவில்லை. 











ஐயனுக்கு ருத்ரம் படித்து அபிஷேகம் செய்யும் பாக்கியம் கிட்டியது. ஹெலிகாப்டரில் செல்லும் போது  90 நிமிடங்கள்  சுவாமி தரிசனத்திற்காக தருகின்றனர்.  இரவில் தங்க விரும்புவர்களும் தங்கிச் செல்லலாம் அவர்கள் மறு நாள் காலை பத்து மணிக்குமேல் ஹெலிகாப்டர் தளம் திரும்பி வரலாம். வானிலை மோசமானால் எப்போது வேண்டுமானாலும் ஹெலிகாப்டர் இயக்கம் நிறுத்தப்படலாம். மெல்ல மெல்ல வெள்ளத்தின் பாதிப்பிலிருந்து  மீண்டு வந்து கொண்டிருக்கின்றது. 


                                 துவார பாலகர்கள் ( சிங்கி - பிங்கி) 



 




நுழைவாயில் சிற்பங்கள் 


மூடியுள்ள வலது பக்க வாயில் 
இன்னும் மராமத்துப்பணிகள் நடந்து கொண்டிருக்கின்றன




இடது பக்க வாயில் 



பிரம்மந்திராரக்கல் 






                                                                                                   குழுவினர் 
வெள்ளத்திற்கு முன் திருக்கேதாரம் இருந்த அழகைக் காண இங்கு செல்லுங்கள். 







 நந்தியெம்பெருமான் 


சுற்றுலாவை பெரிதும் நம்பியுள்ள மாநிலம் என்பதால் பக்தர்கள் வருவதற்கு முதலில் எவை எவை அவசியமோ அவற்றை முதலில் முடிக்கின்றனர். வருடத்தில் ஆறு மாதங்கள் பனி மூடியிருக்கும் என்பதாலும், ஆலயம் திறந்திருக்கும் போது பக்தர்கள் கூட்டமும் அதிகமாக இருக்கும் என்பதாலும் வேலைகள் மெதுவாகவே நடைபெறுகின்றன.


வரும்காலத்தில் இது போன்ற எந்தவிதமான அசம்பாவிதமும் நடைபெறக்கூடாது என்று சிவபெருமானிடம் வேண்டிக்கொண்டு வந்தோம்.



 வெள்ளத்தில் சேதமடைந்த  கட்டிடம் 





அனைத்துவித கோணங்களிலும் புகைப்படம் எடுத்துள்ளார் நண்பர்.  திருக்கேதார காட்சிகள் இன்னும் சில  உள்ளன

                                                            யாத்திரை தொடரும் . . . . . . .