Sunday, November 6, 2016

இமயமலையில் ஒரு இனிய யாத்திரை -52

திருக்கேதாரம் 

தற்போது  புதிதாக சரஸ்வதி  நதியின் குறுக்கே ஒரு  பாலம் கட்டியுள்ளனர். சரஸ்வதி அலக்நந்தா கூடுதுறையை அழகாக கட்டியுள்ளனர்.  ஹெலிகாப்டர் தளத்திலிருந்து ஆலயம் வரையில் பாதை அமைத்துள்ளனர். ஆலயத்திற்கு அருகில் எந்தவித கட்டிடங்களையும் அமைக்கவில்லை. 
விநாயகர் 


கலசம் 

கோபுர கோஷ்டத்தில் சிம்மம்

குழலூதும் கண்ணன் தற்காலிக தங்கும் விடுதிகள் கோவிலிருந்து தூரத்தில் அமைத்துள்ளனர். தற்போது ஆலயம் சுத்தம் செய்யப்பட்டு மின்னுகின்றது. புது வர்ணம் பூசியுள்ளனர்ஒரு பக்கக்கதவு மூடியே உள்ளது இன்னும் பராமரிப்பு பணிகள் நடந்து கொண்டிருக்கின்றன. முன் இருந்த நிலையை அடைய எத்தனை வருடங்கள் ஆகும் என்று தெரியவில்லை. ஐயனுக்கு ருத்ரம் படித்து அபிஷேகம் செய்யும் பாக்கியம் கிட்டியது. ஹெலிகாப்டரில் செல்லும் போது  90 நிமிடங்கள்  சுவாமி தரிசனத்திற்காக தருகின்றனர்.  இரவில் தங்க விரும்புவர்களும் தங்கிச் செல்லலாம் அவர்கள் மறு நாள் காலை பத்து மணிக்குமேல் ஹெலிகாப்டர் தளம் திரும்பி வரலாம். வானிலை மோசமானால் எப்போது வேண்டுமானாலும் ஹெலிகாப்டர் இயக்கம் நிறுத்தப்படலாம். மெல்ல மெல்ல வெள்ளத்தின் பாதிப்பிலிருந்து  மீண்டு வந்து கொண்டிருக்கின்றது. 


                                 துவார பாலகர்கள் ( சிங்கி - பிங்கி)  
நுழைவாயில் சிற்பங்கள் 


மூடியுள்ள வலது பக்க வாயில் 
இன்னும் மராமத்துப்பணிகள் நடந்து கொண்டிருக்கின்றன
இடது பக்க வாயில் பிரம்மந்திராரக்கல் 


                                                                                                   குழுவினர் 
வெள்ளத்திற்கு முன் திருக்கேதாரம் இருந்த அழகைக் காண இங்கு செல்லுங்கள்.  நந்தியெம்பெருமான் 


சுற்றுலாவை பெரிதும் நம்பியுள்ள மாநிலம் என்பதால் பக்தர்கள் வருவதற்கு முதலில் எவை எவை அவசியமோ அவற்றை முதலில் முடிக்கின்றனர். வருடத்தில் ஆறு மாதங்கள் பனி மூடியிருக்கும் என்பதாலும், ஆலயம் திறந்திருக்கும் போது பக்தர்கள் கூட்டமும் அதிகமாக இருக்கும் என்பதாலும் வேலைகள் மெதுவாகவே நடைபெறுகின்றன.


வரும்காலத்தில் இது போன்ற எந்தவிதமான அசம்பாவிதமும் நடைபெறக்கூடாது என்று சிவபெருமானிடம் வேண்டிக்கொண்டு வந்தோம். வெள்ளத்தில் சேதமடைந்த  கட்டிடம் 

அனைத்துவித கோணங்களிலும் புகைப்படம் எடுத்துள்ளார் நண்பர்.  திருக்கேதார காட்சிகள் இன்னும் சில  உள்ளன

                                                            யாத்திரை தொடரும் . . . . . . .

2 comments:

கோமதி அரசு said...

வெள்ளத்துக்கு பின் கேதாரம் கோவிலை பார்க்கும் பாக்கியம் கிடைத்தது.
வெள்ளத்துக்கு முன் நாங்கள் போய் வந்ததை நினைவுகூர்ந்தோம்.
மறுபடியும் இது போல் அழிவு ஏற்படாமல் காப்பற்ற நானும் பிராத்தனை செய்து கொண்டேன்.

Muruganandam Subramanian said...

எல்லாம் எனை ஆளும் ஈசன் செயல். நம்மால் பிரார்த்தனை செய்ய மட்டுமே முடியும்.