ஐந்தாம் திருநாள் வெள்ளி மயில் வாகன சேவை
( திருவீதி உலா - 1)
தனி யாணை சகோதரனின் எழிற் கோலம்
மூஷிக வாகனத்தில் மூத்தவன் கணேசன்
அருமை குமரனுடன் அம்மையப்பர்
இடப வாகனத்தில் பிரதோஷ நாயகர்
வெள்ளி மயில் வாகனத்தில் சிவ சுப்பிரமணிய சுவாமி
முருகப்பெருமான்
ஓம் என்னும் தாரக மந்திரம் சிவனுக்கு மொழிந்த குரு மூர்த்தி
அகத்தியருக்கு அருள் ஞானம் அளித்த ஞான தேசிகன்
முருகன் , குமரன், ஆறுமுகன், திருமால் மருகன்
சிவகுமாரன், ஸ்கந்தன், மலைமகள் பார்வதி பாலன்
ஒளி பொருந்திய ஞான சக்தி வேலை ஏந்தியவன்
கார்த்திகேயன், கஜ முகனுக்கு இளையவன்
குகன், மயில் ஏறும் பெருமாள்
சூரனை சம்ஹாரம் செய்த கருணை வள்ளல்
சுப்பிரமணியன், தேவ சேனாதிபதி
கடம்ப மாலை அணிந்த கதிர்வேலன்
இச்சா சக்தி வள்ளி, கிரியா சக்தி தெய்வாணை மணவாளன்
செவ்வேள், காங்கேயன், சிலம்பன்
ஆயிரம் பெயர் கொண்ட அழகன்
தூயவன் சேவற் கொடியோன்
ஆறு திருப்பதி கண்டு ஆறெழுத்தும் கூறுபவர் சிந்தை குடிகொண்டோன்
அழகன் முருகனை துதி செய்தால் நீங்களும் மலம் ஒழித்து மெய்ஞ்ஞான அருள் பெறலாம்
ஓம் என்னும் பிரணவப் பொருளோன்
தந்தைக்கு உபதேசம் செய்த சுவாமிநாத சுவாமி அந்த பிரணவ வடிவில் ( ஓம் என்னும் மலர் அலங்காரத்தை கவனியுங்கள்) அன்பர்களால் 2003ம் ஆண்டில் அர்ப்பணிக்கப்பட்ட வெள்ளி மயில் வாகனத்தில் ஆனந்தமாக எழுந்தருளி திருவீதி உலா வந்து அன்பர்க்கு அருளும் அழகைக் காணக் கண்கோடி வேண்டும். யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்று அன்பர்களாகிய தங்களுடன் இதை பகிர்ந்து கொள்கிறேன். தரிசனம் செய்து கந்தன் கருணைக்கு பாத்திரமாகும் படி வேண்டிக்கொள்கிறேன்.
பச்சை மயில் வாகனத்தில் தெய்வ நாயகி
பச்சை மயில் வாகனத்தில் வள்ளி நாயகி
பின்புற அலங்காரம்
முழுவதும் மலர்களாலேயே உருவாக்கப்பட்ட இந்த பலகை வெள்ளி மயில் வாகன சேவையின் போது பின் பக்க அலங்காரத்திற்கு பயன் படுத்தப் படுகின்றது. இந்த வருடம் " யாம் இருக்க பயம் ஏன் என்று " கூறும் அபயக் கோலம்.
ஐந்தாம் திருநாள் அருட் கோலங்கள் தொடரும்.....