Showing posts with label ஏழாம் திருநாள். Show all posts
Showing posts with label ஏழாம் திருநாள். Show all posts

Friday, March 15, 2013

செங்குந்த கோட்ட மாசி மக பெருவிழா -14

                                              ஏழாம் திருநாள் திருத்தேரோட்டம் -2 
                                                              
                                                               தவன உத்ஸவம் 



திருத்தேரின் முன்னழகு




சூரனுடன் போருக்கு செல்வதால் முருகனின் வேற்படை வில்லில் உள்ளதை  கவனியுங்கள்.



திருத்தேரின் பின்னழகு




வள்ளி நாயகி திருத்தேர்


தெய்வ நாயகியின் திருத்தேர்

அதிகாலையில் நல்ல முகூர்த்த வேளையில் தேர் வடம் பிடிக்கப்பட்டு திருவீதி வலம் வந்து  மதியம் தேர் நிலைக்கு வந்து விடுகின்றது பின்னர் பக்தர்கள் தேரில் சென்று முருகனை தரிசனம் செய்கின்றனர். இரவு சிறப்பு அலங்காரத்துடன் சூரனை வென்ற வெற்றி வீரராக முருகப்பெருமான்  திருக்கோவிலுக்கு எழுந்தருளுகின்றார்.  இந்த உத்ஸவம்  தவன உத்ஸவம் என்றழைக்கப்படுகின்றது.  



ஆணவம் கன்மம் மாயை என்னும் தாருகன், சிங்கமுகா சூறன், சூரபத்மன் ஆகிய அசுரர்களுக்கு பெரு வாழ்வு அளித்து( சம்ஹாரம் செய்து), சூர பத்மனை மயிலாகவும் சேவலாகவும் மாற்றி மயிலை வாகனமாகவும், சேவலைக் கொடியாகவும் தனது கரத்தில் ஏந்தி தேவ சேனாபதி முருகர் வெற்றி வீரராக திருக்கோவிலுக்கு திரும்பும் அழகு.  



இப்போது வெற்றி வீரர் என்பதால் வலக்கரத்தில் வேலை ஞான சக்தியாகவும், இடக்கரத்தில் சேவல் கொடியையும் தாங்கி வருவதைக்காணுங்கள் அன்பர்களே. 


                              முழுவதும் மலர்களாலே உருவாக்கப்பட்ட மயில் வாகனம் 



(இப்பதிவில் உள்ள படங்கள்  முந்தைய  வருடத்தியவை. )

அழகன் முருகனின் அற்புத அலங்காரங்கள் தொடரும்..........


Thursday, February 28, 2013

செங்குந்த கோட்ட மாசி மக பெருவிழா -13

ஏழாம் திருநாள் திருத்தேரோட்டம் -1

வீரபாகு தேவர் 

           
                                            தேரில் .வீரபாகுத்தேவர் முன்னே வர பின்னே முருகர் வருகின்றார். 

 தொண்டை மண்டலத்தில் ஏழாம் நாள் திருத்தேரோட்டம். ஐயன் புரியும் ஐந்தொழில்களில் தேரோட்டம் அழித்தல் தொழிலை குறிக்கின்றது. துஷ்டர்களை அழித்து நல்லவர்களை காப்பதைக் குறிக்கின்றது.  



முருகன் திருத்தேர்

தேரின் மலர் அலங்காரம் 




ஆணவம் கன்மம் மாயை என்னும் தாராகாசுரன், சிங்கமுகா சூரன், சூரபத்மன் ஆகியோரை சம்ஹாரம் செய்ய ஞான வேல் கொண்டு  தேரில் செல்லும் வெற்றி வடிவேலன். 

தேரின் அமைப்பு







திருத்தேர்  ஆடி அசைந்து வரும் அழகு




தேரின் பின்னழகு





அழகு முருகனின் தேரோட்டம் சிறிது இடைவெளிக்குப் பின்னர் தொடரும்...

Thursday, November 10, 2011

அகத்தீஸ்வரர் பிரம்மோற்சவம் -11



சிவமயம்

திருசிற்றம்பலம்


தென்னாடுடைய சிவனே போற்றி! எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி!





அருள்மிகு அகிலாண்டேஸ்வரி உடனுறை அகத்தீஸ்வரர் திருக்கோவிலின் தக்ஷிணாயண புண்ய கால பிரம்மோற்சவத்தின் ஏழாம் திருநாள் எல்லா திருக்கோவில்களும் போல திருத்தேரோட்டம். பஞ்ச மூர்த்திகளும் திருத்தேரில் எழுந்தருளி அருள் பாலிக்கின்றனர். தேரோட்டம் முடிந்த பின் குளக்கரையில் பஞ்ச மூர்த்திகள் பக்தர்களுக்கு அருட்காட்சி தருகின்றனர் பின்னர் மாலை சிறப்பு அலங்காரத்துடன் திருக்கோவிலுக்கு எழுந்தருளுகின்றனர். அந்த காட்சிகளை கண்டு இன்புறுங்கள் அன்பர்களே.


குளக்கரையில் அகத்தீஸ்வரர்

திருத்தேரோட்டம் என்பது ஐயனின் ஐந்தொழில்களில் சம்ஹாரம் எனப்படும் அழித்தல் தொழிலை குறிப்பது. ஐயனும் அம்மையும் போருக்கு செல்வது போல் நேர்த்தியாக அலங்காரம் செய்துள்ள அழகைக் காணுங்கள்.


ஐயனின் கையில் உள்ள வில் இப்படத்தில் தெளிவாக தெரிகின்றதல்லவா?

போர் கோலத்தில் அன்னை அகிலாண்டேஸ்வரி

சும்ப நிசும்ப, சண்ட முண்ட, ரக்தபீஜ , மஹிசாசுரர்களை சம்ஹாரம் செய்து காத்த கோலத்தில் அன்னை

திருத்தேரில் அன்னை

அம்மனுக்கு அற்புதமான பூந்தேர்


இன்றைய தினம் (10-11-11) துலா( ஐப்பசி) பௌர்ணமி, இன்றைய தினம்தான் அனைத்து உயிர்களுக்கும் அமுதூட்டும் ஐயனுக்கு அன்னபிஷேகம் சிறப்பாக எல்லா சிவாலயங்களிலும் நடைபெறும் நாள். அன்னாபிஷேகத்தின் சிறப்பைப் பற்றி அறிந்து கொள்ள இப்பதிவுவைப் பாருங்கள்.







அகத்தீஸ்வரரின் பிரம்மோற்சவம் தொடரும்…..